Jul 18, 2010

Don't be afraid of Islam, says Al-Sudais


புனித மக்கா ஹரம் ஷரீஃப் இறையில்லத்தின் தலைமை இமாம் ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸின் இங்கிலாந்து பயணம்.
         
தவ்ஹீதுல் இஸ்லாம் என்ற புதிய இறை இல்லத்தின் திறப்பு விழா இங்கிலாந்தின் ப்ளேக்பர்ன் என்ற நகரில் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்புடன் நடந்தேறியது. அதை திறந்து வைத்து சிறப்புத்தொழுகை நடத்துவதற்காக புனித மக்கா ஹரம் ஷரீஃப்பின் தலைமை இமாம் ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸ் சிறப்பு விருந்தினராக அங்கு அழைக்கப்பட்டு திறப்பு விழா சொற்பொழிவில் அவர்கள் உரையாற்றியதாவது "மேற்குலகம் இஸ்லாத்தைக்கண்டு அஞ்ச வேண்டாம். இஸ்லாம் இறைவனின் மார்க்கம். நிச்சயமாக அது அமைதியையும், பரிசுத்தத்தையும் மற்றும் சகிப்புத்தன்மைமையும் போதிப்பதற்காகவே இம்மானிட சமூகத்திற்கு இறைவனால் இறக்கப்பட்டுள்ளது.

மேலும் இஸ்லாம் மனித நேயத்தை பாதுகாக்கவும், எல்லாத் தீங்குகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் மாற்று ம‌த‌ ச‌மூக‌த்தின‌ருட‌ன் ஒரு ந‌ல்ல‌ இணைப்புப்பால‌த்தை ஏற்ப‌டுத்துவ‌த‌ற்காகவும் இற‌க்க‌ப்ப‌ட்ட‌ மார்க்க‌ம். க‌ருணையையும், ச‌கிப்புத்த‌ன்மையையும் அது போதிக்கின்ற‌து.

இறைவ‌னால் அருள‌ப்ப‌ட்ட‌ அற்புத‌ குர‌ல் வ‌ள‌த்தைக்கொண்ட‌ ஷேக் அப்துல் ர‌ஹ்மான் சுதைஸின் கிரா'அத் மூல‌ம் இறைவ‌ச‌ன‌த்தைக்கேட்டும் ஒவ்வொருவ‌ருக்கும் அத‌ன் அர்த்த‌ம் புரிய‌வில்லையேனும் க‌ண்க‌ளிலிருந்து சாரை, சாரையாக‌ க‌ண்ணீர் வ‌ராம‌ல் இருப்ப‌தில்லை. இன்னும் புனித‌ ர‌ம‌ளான் மாத‌த்தில் ஹ‌ர‌ம் ஷ‌ரீப்பில் ஃப‌ர்லான‌ ம‌ற்றும் த‌ராவீஹ் தொழ‌ பாக்கிய‌ம் கிடைக்க‌ப்பெற்ற‌வ‌ர்க‌ளை அந்த‌ குர‌ல் ஒரு உன்னத இடத்திற்கு அழைத்துச்செல்வ‌து போல் இருக்கும். மாஷா அல்லாஹ்.

இந்த‌ பாக்கிய‌த்தை இறைவ‌ன் நம் ஒவ்வொருவ‌ருக்கும் த‌ந்த‌ருள‌ நாமெல்லாம் து'ஆச்செய்வோமாக‌. ஆமீன்..

செய்திக‌ள்: அர‌ப் நியூஸ்

த‌க‌வ‌ல் : மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

3 comments:

தகவல் தந்த சகோதரர் நெய்னா முகம்மதுக்கு நன்றி

BROTHER NAINA ALWAYS GIVING GOOD NEWS THANKS TO NAINA

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More