Jul 20, 2010

ராக்கெட் செலுத்தப்படுவதற்குத் கொஞ்ச


அடுத்து மேட்டருக்கு வருவோம் சமையல் காஸ் போலவே ஆக்சிஜன், ஹைட்ரஜன் ஆகிய இரு வாயுக்களையும் தனித்தனியே திரவமாக்கி ஹைட்ரஜனைத் ஒரு டாங்கிலும் ஆக்சிஜன் ஒரு டாங்கிலும் அடைத்து ராக்கெட் எஞ்சினில் இரு வாயுக்களையும் சேர வைத்து எரியும்படி செய்யலாம். ஆனால் ஆக்சிஜன் வாயுவை வெறும் அழுத்தத்தைப் பிரயோகித்துத் திரவமாக்க அங்கு மைனஸ் 183 செல்சியஸ் குளிர்வித்தால் தான் அது திரவ நிலையை அடையும் அது போலவே ஹைட்ரஜன் வாயுவையும் மைனஸ் 253 செல்சியஸ் குளிர் படுத்த வேண்டும் (நம் ஊர் AMK அஹ்மத் காக ஐஸ் கம்பனி எல்லாம் ஜுஜுபி )கிரையோஜெனிக் என்றால் கடும் குளிர் என்று ஒரு அர்த்தாம் உண்டு அதன் காரணமாகவே கிரையோஜெனிக் எஞ்சின் என்றும், கிரையோஜெனிக் ராக்கெட் என்றும் பெயர் வைத்துள்ளார்கள்


இந்த தொட்டிகள் மீது வெளிக்காற்று பட்டாலே போதும். இரண்டும் மிக விரைவில் ஆவியாகிவிடும் (ஆவி யாரையும் போய் பிடித்து வேப்பிலை அடிக்க சொல்லாது ) . இந்த தொட்டிகளை கடுமையான குளிரில் வைத்து இருக்க வேண்டும் ராக்கெட் செலுத்தப்படுவதற்குத் கொஞ்ச நேரதிற்கு முன்பு இந்த இரண்டு திரவங்களும் பொருத்தப்படும் இந்த திரவங்களையும் பயன்படுத்துகிற ராக்கெட் எஞ்சினை வடிவமைத்து உருவாக்குவதுதான் சிக்கலான விஷயம். ராக்கெட்டுக்குள் திரவ ஹைட்ரஜனும், திரவ ஆக்சிஜனும் அடங்கிய தொட்டிகளிலிருந்து இவை ஆவியாகிவிடாமல் குளிர்விக்க வேண்டும். அங்கிருந்து அவை இரண்டும் தனித்தனியே ராக்கெட்டின் எஞ்சின் பகுதிக்கு வந்து சேர வால்வுகள், ரெகுலேட்டர்கள், சுழல் பம்புகள் போன்ற உறுப்புகள் தேவை. சுழல் பம்பு நிமிஷத்துக்கு 42 ஆயிரம் தடவை சுழல்வதாக இருக்கும். இவையெல்லாம் விசேஷ கலப்பு உலோகத்தால் செய்யப்பட வேண்டும். ஏனெனில், கடும் குளிர் நிலையில் உலோகங்கள் ஒடிந்து விடாமல் இருக்க அதி நவீன கலப்பு உலகங்களினால் ஆனா உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படும் .

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More