Jul 19, 2010

கிரையோஜெனிக் ராக்கெட்

தண்ணீரை ஊற்றி ஒரு வாகனத்தை செலுத்த முடிமோ முடியாதோ - ஒரு ராக்கெட்டை இயங்கச் செய்ய முடியும்.    அதுதான் கிரையோஜெனிக் ராக்கெட்.                                            என்ன ஆரம்பமே குழப்பமாக உள்ளது என்று யோசனை பண்ணவேண்டாம் மேலும் படிங்கள்

நீரை ஆக்சிஜன் வாயுவாகவும், ஹைட்ரஜன் வாயுவாகவும் தனித்தனியே பிரித்து அந்த வாயுக்களைப் பயன்படுத்தி ஒரு ராக்கெட்டை இயங்கச் செய்ய முடியும். அதுதான் கிரையோஜெனிக் ராக்கெட்.

இந்தியா முதல் தடவையாக உருவாக்கியுள்ள கிரையோஜெனிக் ராக்கெட் ஏப்ரல் 15-ம் தேதி புறப்பட்டு தடம் (ரோடு எங்கே என்று கேட்ககூடாது )மாறியது வேறுவிசயம் .ஆக்சிஜன் 2 மடங்கு ஹைட்ரஜன் வாயுவும் 1 பங்கு ஆக்சிஜன் வாயுவும் ஹைட்ரஜன் வாயு தீப்பற்றி எரியக்கூடியது. அவ்விதம் எரிவதற்கு ஆக்சிஜன் வாயு உதவும் இரு வாயுக்களையும் ராக்கெட்டில் பயன்படுத்தினால் உந்து திறன் (வேகம்) அதிகரிக்கும் அதிக எடை கொண்ட ராக்கெட்களை எளிதாக மேலே தூக்கி செல்லும் ஆனால் இந்த வாயுக்களைப் பயன்படுத்தும் ராக்கெட் எஞ்சின்களை உருவாக்குவதில் நமக்கு நிறையப் பிரச்னைகள் உள்ளது


(இதில் ரஷ்யர்கள் பலே கில்லாடிகள்) என்ன பிரச்னைகள் அப்படி நம் வீட்டில் சமையல் காஸ் இருக்கிறது. அடுப்பைப் பற்ற வைத்ததும் காஸ் (வாயு) எரிகிறது. ஆனால், சிலிண்டருக்குள் இருப்பது காஸ் அல்ல. நல்ல அழுத்தத்தில் சமையல் வாயுவைத் திரவமாக்கி அந்தத் திரவத்தைத் தான் சிலிண்டரில் அடைத்திருக்கிறார்கள் ( இது நிறையபோருக்கு தெரியாது ) ஆனால், சிலிண்டருக்குள் இருப்பது காஸ் அல்ல நல்ல அழுத்தத்தில் சமையல் வாயுவைத் திரவமாக்கி அந்தத் திரவத்தைத் தான் சிலிண்டரில் அடைத்திருக்கிறார்கள். வாயு வடிவில் நமக்கு சிலிண்டர் அவருவதாக இருந்தால் வீடு கொள்ளாத அளவுக்குபெரிய சிலிண்டர் தேவைப்படும்

அடுத்து மேட்டருக்கு வருவோம் சமையல் காஸ் போலவே ஆக்சிஜன், ஹைட்ரஜன் ஆகிய இரு வாயுக்களையும் தனித்தனியே திரவமாக்கி ஹைட்ரஜனைத் ஒரு டாங்கிலும் ஆக்சிஜன் ஒரு டாங்கிலும் அடைத்து ராக்கெட் எஞ்சினில் இரு வாயுக்களையும் சேர வைத்து எரியும்படி செய்யலாம். ஆனால் ஆக்சிஜன் வாயுவை வெறும் அழுத்தத்தைப் பிரயோகித்துத் திரவமாக்க அங்கு மைனஸ் 183 செல்சியஸ் குளிர்வித்தால் தான் அது திரவ நிலையை அடையும் அது போலவே ஹைட்ரஜன் வாயுவையும் மைனஸ் 253 செல்சியஸ் குளிர் படுத்த வேண்டும் (நம் ஊர் AMK அஹ்மத் காக ஐஸ் கம்பனி எல்லாம் ஜுஜுபி )கிரையோஜெனிக் என்றால் கடும் குளிர் என்று ஒரு அர்த்தாம் உண்டு அதன் காரணமாகவே கிரையோஜெனிக் எஞ்சின் என்றும், கிரையோஜெனிக் ராக்கெட் என்றும் பெயர் வைத்துள்ளார்கள்


இந்த தொட்டிகள் மீது வெளிக்காற்று பட்டாலே போதும். இரண்டும் மிக விரைவில் ஆவியாகிவிடும் (ஆவி யாரையும் போய் பிடித்து வேப்பிலை அடிக்க சொல்லாது ) . இந்த தொட்டிகளை கடுமையான குளிரில் வைத்து இருக்க வேண்டும் ராக்கெட் செலுத்தப்படுவதற்குத் கொஞ்ச நேரதிற்கு முன்பு இந்த இரண்டு திரவங்களும் பொருத்தப்படும் இந்த திரவங்களையும் பயன்படுத்துகிற ராக்கெட் எஞ்சினை வடிவமைத்து உருவாக்குவதுதான் சிக்கலான விஷயம். ராக்கெட்டுக்குள் திரவ ஹைட்ரஜனும், திரவ ஆக்சிஜனும் அடங்கிய தொட்டிகளிலிருந்து இவை ஆவியாகிவிடாமல் குளிர்விக்க வேண்டும். அங்கிருந்து அவை இரண்டும் தனித்தனியே ராக்கெட்டின் எஞ்சின் பகுதிக்கு வந்து சேர வால்வுகள், ரெகுலேட்டர்கள், சுழல் பம்புகள் போன்ற உறுப்புகள் தேவை. சுழல் பம்பு நிமிஷத்துக்கு 42 ஆயிரம் தடவை சுழல்வதாக இருக்கும். இவையெல்லாம் விசேஷ கலப்பு உலோகத்தால் செய்யப்பட வேண்டும். ஏனெனில், கடும் குளிர் நிலையில் உலோகங்கள் ஒடிந்து விடாமல் இருக்க அதி நவீன கலப்பு உலகங்களினால் ஆனா உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படும் .

ராக்கெட்டுக்குள் கடும் குளிர்விப்பு நிலையில் திரவ வடிவில் உள்ள ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் ராக்கெட்டின் எஞ்சின் பகுதிக்கு வந்ததும் வாயுவாக மாறி ஒன்று சேர்ந்து எரியும். அப்போது 3,000 டிகிரி செல்சியஸ்( வேகாத கோழி மட்டன் இவை எல்லாம் ஒரு செகடில் பஸ்பம் ) அளவுக்குக் கடும் வெப்பம் தோன்றும். ஆகவே, இந்த வெப்பத்தைத் தாங்கி நிற்க ராக்கெட் எஞ்சின் பகுதியும் விசேஷ கலப்பு உலோகத்தால் தயாரிக்கப்படுகிறது.

விஷயத்துக்கு வருவோம்  "அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்(குர்ஆன் 6:125)

அது என்ன விண்வெளியில் பயணம் செய்பவனின் மனதை போல் சுருங்கி இருக்குமாம் நாம் இந்த பூமி இன் இலுவிசையை தாண்டினால் உடல் உறுப்புக்கள் அனைத்தும் சுருங்கிவிடும் என்பதை சுமார் 1500 வருடங்களுக்கு முன்பே இறைவன் அறிவித்துள்ளான் மனிதர்களுக்கு விண்வெளியில் பயணம் செய்யகூடிய அறிவை வழங்கிவிட்டதாக இதை நாம் எடுத்து கொள்ளலாம் அல்லவா.

நோன்பு வருகின்றது அல்லாஹ்வின் பொருத்ததை அடைவதற்காக ஜகாத்தின் மூலம் உங்களால் முடிந்த உதவிகளை வசதியற்ற உற்றார் உறவினர்களுக்கும்,  ஈமான் கொண்டவர்களுக்கும் செய்திடுங்கள்.


ஆக்கம் - SHAHULHAMEED
 தம்மம்

26 comments:

அஸ்ஸலாமு அலைகும். எழுதச்சொன்னதால் மெனக்கெட்டு ராக்கெட்(டு) பத்தி,(பத்தி பத்தியாய்) தகவல் சுவாரசியம்.வாழ்துக்கள் இன்னும் எழுதுங்கள்(வேட்டையாடு,விளையாடு போன்றவற்றையும் எழுதலாம்) கிரையோஜெனிக் பிரோயோஜனமான தகவல்தான். நடக்கட்டும், நடக்கட்டும்.

கிரையோஜெனிக் ராக்கெட் புது தகவல், பகிர்வுக்கு நன்றி

வாங்க சகோதரர்கள் தஸ்தகீர், மாலிக்.

சகோதரர் சாஹுல், பிசியா இருக்காங்க போல தெரியுது.

அருமையான ஆக்கம் காக்கா...ஆங்காங்கே சிறிது நகைச்சுவையுடன்...கிரையோஜெனிக் வேகத்தில் கலக்குறீங்க...வாழ்த்துக்கள்...நீங்க வேட்டையாடிய ஜந்துக்களை எந்த டீகிரி செல்சியஸில் வேக வைத்து சாப்பிட்டீர்கள் காக்கா : )

தாஜுதீன், என்ன உன் பிளாக் அதிரைநிருபர் நீ கிரிக்கேட்டில் ரன் அடிப்பது போல் டையிலி டபுல் செஞ்சுரி அடிக்கிது.1993 மறக்க முடியுமா காலேஜ் கிரவுன்டில் நீ கரையர் தெரு கோவிந்தராஜ் பந்துல நீ அடித்த அந்த சிக்ஸரை,காலேஜ் பள்ளி ஹவுதில் விழுந்ததே. நல்ல கிரிக்கெட் கேப்டன்.

அதிரைக்காக இன்டர்நெட்டில் உன் சேவை தொடர வாழ்த்துக்கள்.

பாஷீர்
அதிரை

வாங்க சகோதரர் பஷீர், வருகைக்கு நன்றி.

நீங்கள் யார் என்று ஞாபகத்தில் இல்லை, முடிந்தால் tjdn77@gmail.com என்ற முகவரிக்குமெயில் அனுப்புங்கள்.கிரிக்கேட் ஆர்வம் இப்போ ரொம்ப கம்மி, ஊருக்கு சென்றால் உடற்பயிற்சிக்காக மாலை நேரத்தில் விளையாடுவதுண்டு.

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. இன்ஷா அல்லாஹ் அதிரை நிருபர் நிச்சயம் நல்ல தனித்தன்மையுடன் அதிரைக்காக தன் சேவையை தொடரும்.

தொடர்ந்து இணைந்திருங்கள்.

பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் சலாம்

உங்கள் அனைவரின் தூண்டுதலும் ஜாகிர் தாஜுதீன் யாசர் தஸ்தகிர் போன்றோரின் அன்பான வேண்டுகோளும் என்னை முதல் முதலாக எழுத தூண்டியது .நான் இந்த தலைப்பை எடுக்க காரணம் (crown ) தான் அவருக்கு தெரிந்த விசயமாக இருந்தால் இதுவரை நோண்டி நொங்குதிங்க அனுப்பி இருப்பார் இப்போ ஆல் கப் சிப்

. என்னுடைய ஆக்கத்திற்கு உரம் இட்ட சகோதரர் தாஜுதீன் அவர்களுக்கு மீண்டும் என் சாலத்தை தெரிவித்து கொள்கிறேன்
shahulhameed

Yasir says
19 ஜூலை, 2010 11:38 am
அருமையான ஆக்கம் காக்கா...ஆங்காங்கே சிறிது நகைச்சுவையுடன்...கிரையோஜெனிக் வேகத்தில் கலக்குறீங்க...வாழ்த்துக்கள்...நீங்க வேட்டையாடிய ஜந்துக்களை எந்த டீகிரி செல்சியஸில் வேக வைத்து சாப்பிட்டீர்கள் காக்கா : )




அது எல்லாம் காட்டில் ஓடியோடி கொழுப்பு இல்லாது அருமையான கறியா இருக்கும் 90 டீகிரி போதும் பஸ்பம் ஆகிவிடும்

பாஷீர்
அதிரை

நீங்கள் பரகத் சார் மற்றும் NA SHAUL சார் கூட பூ பந்து விளையாடிய பஷீரா

என்ன சாகுல் இப்படி அசத்திட்டாப்லெ...முதல் முயற்சியே சுஜாதா / ஜனாதிபதி அபுல்கலாம் ரேஞ்சுக்கு இருக்கிறது...வாழ்த்துக்கள்.

Zakir Hussain

Shahul

Well written. Your article is a difficult subject to handle. you have done it good. Very much impressive.

I would like to comment in tamil but I am in a hurry to leave as I am going on vacation tomorrow. Inshah Allah, I shall write my comments from india.

take care.
sabeer
சபீருக்காக
சவானா

முதல் ஆக்கமா ரொம்பவே மேலே ஏறிட்டீங்களே ! வாழ்த்துக்கள்

Zakir Hussain says
19 ஜூலை, 2010 7:23 pm
என்ன சாகுல் இப்படி அசத்திட்டாப்லெ...முதல் முயற்சியே சுஜாதா / ஜனாதிபதி அபுல்கலாம் ரேஞ்சுக்கு இருக்கிறது...வாழ்த்துக்கள்.
Zakir Hussain
shahul
உங்களையும் உங்கள் சாககளையும் (சபீர், இக்பால், ஹாஜா இஸ்மாயில், ரியாஸ், முஹமது அலி சாச்சா, நிஜாம்,)பின் தொடர்ந்து வரும் நாங்கள் இதை கூட செய்யாவிட்டால் உங்களை பின் தொடர்வதின் அர்த்தாம் இல்லாமல் போய்விடும் அல்லவா
வாழ்த்துகளுக்கு நன்றி

அருமையான ஆக்கம். என் ரேஞ்சே வேற அப்படிங்கிறமாதிரி எழுதியிருக்கீங்க சாகுல் காக்கா..வாழ்த்துக்கள்

நான் இந்த தலைப்பை எடுக்க காரணம் (crown ) தான் அவருக்கு தெரிந்த விசயமாக இருந்தால் இதுவரை நோண்டி நொங்குதிங்க அனுப்பி இருப்பார் இப்போ ஆல் கப் சிப்.
------------------------------------------------
அஸ்ஸலாமு அலைகும்.முற்றிலும் இந்திய தயாரிப்பில் உருவான கிரையோஜெனிக் இன்ஜினுடன் கூடிய ஜி.எஸ்.எல்.வி., – டி 3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படது. ஏற்கனவே ஐந்து முறை ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ரஷ்ய நாட்டின் கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப் பட்டு விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.மூன்று பாகங்களை உள்ளடக்கிய ஜி.எஸ்.எல்.வி., – டி 3 ராக்கெட்டின் மூன்றாவது பகுதியில் கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.(மற்றவிபரம் சகோ.சொல்லிவிட்டார்).ஜின் (மற்றும்) மனித சமூகத்தினரே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்..' (அருள்மறை குர்ஆன் அத்தியாயம் 55 ஸுரத்துர் ரஹ்மான் - 33 வது வசனம்).இன்னும் பல உதாரணங்கள் சொல்லலாம். நல்ல தொரு ஆக்கம் தந்த சகோதரருக்குப் பாராட்டு.( நமக்குதான் மரமன்டை இந்த விஞ்சானமெல்லாம் விளங்காது).கெமிஸ்ட்ரீயில் நான் ரொம்பவீக் அதனால்தான் ஹைட்ரஜன்,ஆக்ஸிஜன் எல்லாம் சொல்லல நீங்க பையாலஜில(வேட்டையாடி விளையாடுவதில்) ஸ்ட்ராங்னு நினைச்சா ,கெமிஸ்ட்ரி,பிஸிக்ஸ்ல கூட ஸ்ட்ராங்க்தான்.(ராக்கெட் சமாச்சாரம்)மேலும் உரம் போட்ட தாஜீதீனுக்கும்(மருபடியும் கெமிஸ்ட்ரி)உங்களுக்கும் நல்லா கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகுது.

crown னா கொக்கா

m. naina thambi
தங்களை போன்றோரின் உக்காம் எம் போறோரை எழுத தூண்டுகின்றது

19 ஜூலை, 2010 9:19 pm
அருமையான ஆக்கம். என் ரேஞ்சே வேற அப்படிங்கிறமாதிரி எழுதியிருக்கீங்க சாகுல் காக்கா..வாழ்த்துக்கள்

அருமையான ஆக்கம். என் (என்ற இடத்தில நம் என்று படிக்கவும் ) ரேஞ்சே வேற அப்படிங்கிறமாதிரி எழுதியிருக்கீங்க சாகுல் காக்கா..வாழ்த்துக்கள்
நன்றி இர்ஷாத்

crown னா கொக்கா
இல்லை கிரீடம் (ஹஹஹ்ஹஹஹ்)

அபுஅஃப்ஸர்

தங்கள் பகிர்வுக்கு நன்றி

அட க்ரவ்ன்: இங்கே கை பதிக்கிறவங்க எல்லாம் உயர்ந்துகிட்டே இருக்காங்க நீ(ருமோஎப்போதான் எழுதப் போறே(ப்பா) ! N.காக்கா

sorry for late also im late pickup
அதுவும் அறிவிய‌ல் பாட‌மா! அந்த‌ ப‌க்க‌ம் ம‌ழைக்குக் கூட‌ ஒதுங்கிய‌து கிடையாது

ப‌டித்தேன் உண்மையில் ந‌ல்ல‌ அல‌ச‌ல்.
()ட்டில் போட்ட‌ வார்த்தைகள்ம‌ட்டுமே த‌லைக்கு ராக்கெட் வேக‌த்தில் ஏறிய‌து

அதுவும் இறைவ‌சன‌ங்க‌ளுட‌ன் விங்ஞான‌த்தை க‌ல‌ந்த‌து மிக‌ அள‌கு. Dr.ஜ‌கிர் நாய‌க் ரேஞ்சுக்கு போயிட்டீங்க‌ வாழ்த்துக்க‌ள் !!

//அதுவும் அறிவிய‌ல் பாட‌மா! அந்த‌ ப‌க்க‌ம் ம‌ழைக்குக் கூட‌ ஒதுங்கிய‌து கிடையாது//
வெயில் காலத்திலும் அறிவியல் அவியலே !

சகோ. சாஹூல் ஹமீது அவர்களின் அறிவியல் சம்மந்தமான நகைச்சுவையுடன் கூடிய‌ இவ்வாக்கம் அருமை. செக்கடிமோட்டில் இருந்த நம்மை நாசாவிற்கே அழைத்துச்சென்றது போல் இருந்தது. மேலே படத்தில் கிரயோஜெனிக் ராக்கெட் சீறிப்பாய்ந்து செல்வது கடும் கோடைகாலத்தில் விண்வெளிக்கு ச்சாக்கோ பார் குச்சி ஐஸ் அனுப்புவது போல் இருக்கிறது. கீழே வெண் பனி படர்ந்திருக்கும் அண்டார்ட்டிக்கா கண்டத்தின் புகைப்படமானது பெருநாளைக்கு செய்யும் வட்லப்பத்தை ஞாபகப்படுத்துகிறது. அருமை உங்களின் முதல் கட்டுரை நல்ல (சாப்பாட்டு) சிந்தனை (மன்னிக்கவும்).

நன்றி நைனா முஹமது
நல்ல நல்ல சாப்பாடு சாப்பிட்டால் தான் நல்ல சித்தனை வரும்

நன்றி ஹாலித்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More