Jul 20, 2010

கிரையோஜெனிக் ராக்கெட்

தண்ணீரை ஊற்றி ஒரு வாகனத்தை செலுத்த முடிமோ முடியாதோ - ஒரு ராக்கெட்டை இயங்கச் செய்ய முடியும். அதுதான் கிரையோஜெனிக் ராக்கெட். என்ன ஆரம்பமே குழப்பமாக உள்ளது என்று யோசனை பண்ணவேண்டாம் மேலும் படிங்கள்

நீரை ஆக்சிஜன் வாயுவாகவும், ஹைட்ரஜன் வாயுவாகவும் தனித்தனியே பிரித்து அந்த வாயுக்களைப் பயன்படுத்தி ஒரு ராக்கெட்டை இயங்கச் செய்ய முடியும். அதுதான் கிரையோஜெனிக் ராக்கெட்.

இந்தியா முதல் தடவையாக உருவாக்கியுள்ள கிரையோஜெனிக் ராக்கெட் ஏப்ரல் 15-ம் தேதி புறப்பட்டு தடம் (ரோடு எங்கே என்று கேட்ககூடாது )மாறியது வேறுவிசயம் .ஆக்சிஜன் 2 மடங்கு ஹைட்ரஜன் வாயுவும் 1 பங்கு ஆக்சிஜன் வாயுவும் ஹைட்ரஜன் வாயு தீப்பற்றி எரியக்கூடியது. அவ்விதம் எரிவதற்கு ஆக்சிஜன் வாயு உதவும் இரு வாயுக்களையும் ராக்கெட்டில் பயன்படுத்தினால் உந்து திறன் (வேகம்) அதிகரிக்கும் அதிக எடை கொண்ட ராக்கெட்களை எளிதாக மேலே தூக்கி செல்லும் ஆனால் இந்த வாயுக்களைப் பயன்படுத்தும் ராக்கெட் எஞ்சின்களை உருவாக்குவதில் நமக்கு நிறையப் பிரச்னைகள் உள்ளது


(இதில் ரஷ்யர்கள் பலே கில்லாடிகள்) என்ன பிரச்னைகள் அப்படி நம் வீட்டில் சமையல் காஸ் இருக்கிறது. அடுப்பைப் பற்ற வைத்ததும் காஸ் (வாயு) எரிகிறது. ஆனால், சிலிண்டருக்குள் இருப்பது காஸ் அல்ல. நல்ல அழுத்தத்தில் சமையல் வாயுவைத் திரவமாக்கி அந்தத் திரவத்தைத் தான் சிலிண்டரில் அடைத்திருக்கிறார்கள் ( இது நிறையபோருக்கு தெரியாது ) ஆனால், சிலிண்டருக்குள் இருப்பது காஸ் அல்ல நல்ல அழுத்தத்தில் சமையல் வாயுவைத் திரவமாக்கி அந்தத் திரவத்தைத் தான் சிலிண்டரில் அடைத்திருக்கிறார்கள். வாயு வடிவில் நமக்கு சிலிண்டர் அவருவதாக இருந்தால் வீடு கொள்ளாத அளவுக்குபெரிய சிலிண்டர் தேவைப்படும்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More