Jul 22, 2010

3.5 சதவிகித இடஒதுக்கீடு

வெகுகாலம் காத்திருந்த இட ஒதுக்கீடு தமிழக முஸ்லிம்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சியானது. அநேகமாக அனைத்துக் கட்சிகளும் அனைத்து சமூக மக்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இன்னும் ஓர் உண்மையைப் பார்க்க வேண்டும். இட ஒதுக்கீடு என்பது வேலை வாய்ப்பிற்கும் உயர் கல்விக்கும்தான். இரண்டிற்கும் ஒதுக்கீடு இருந்தாலும் வேலைக்கோ அல்லது உயர் கல்விக்கோ சேருவதற்கு குறைந்த அளவு தகுதி வைத்திருப்பார்கள். அனேகமாக அது மதிப்பெண்களாகத்தான் இருக்கும். அந்தக்குறைந்த தகுதியைப் பெறாதவர்களுக்கு ஒதுக்கீடு உதவ முடியாது. ஆகவே தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

இதையே லிண்டன் ஜான்சன் என்ற அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி "வாய்ப்பின் வாசலை நம் மக்களுக்குத் திறக்க வேண்டியது முக்கியம். அந்த வாயிலில் நுழைவதற்கு அவர்களைத் தயார் செய்வது அதைவிட முக்கியம்" என்று குறிப்பிட்டார்.

ஆகவே இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேற மிகவும் முக்கியமானது மாணவர்களின் தகுதியை வளர்ப்பதாகும். அதே போன்று வேலை தேடும் இளைஞர்களின் தகுதியையும் பொது அறிவையும் உயர்த்துவதாகும்.

வேண்டுவது என்ன ?

தரமும், தகுதியும் மந்திர சக்தியால் மாய வித்தைகளால் ஒரே கணத்தில் வருபவை அல்ல அதிக விளைச்சல் தரும் பயிரைக் கடைசி நாளில் கண்காணித்துப் பெற்றுவிட முடியாது ஆகவே அடிப்படையிலிருந்தே பிள்ளைகளைத் தயார் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மொத்த மக்கள் தொகையில் 73 சதவீதம் ஆகும். முஸ்லிம்களிடையே ஆண்கள் 81 சதவீதமும், 79 சதவீதம் பெண்களும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக உள்ளனர். ஆனால் 5 ம் வகுப்பைத்தாண்டும் நிலையிலும் அதன் பிறகும் முஸ்லிம்கள் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து விடுவது தான் வேதனையானது.

இதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன. மிக முக்கியமான காரணம், பொருளாதாரம் ஏழ்மையில் வாடும் முஸ்லிம்கள் வயிற்றுப் பாட்டையே கவனிக்க முடியாத நிலையில் கல்வியை எப்படி கவனிப்பது ?

இது ஒரு நியாயமான கேள்வி போல் தோன்றலாம். அதுவே முழுக்காரணம் அல்ல. ஆர்வமும், அக்கரையும் கல்விமேல் இல்லை என்பதும் ஒரு முக்கிய காரணமாகும். அக்கறையுள்ளவர்கள் ஏழையாக இருந்த போதும் பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்கான வழியை முயன்று தேடி வெற்றி பெற்றுள்ளதை முஸ்லிம் சமுதாயத்தினரும், அதிக அளவில் பிற சமூகத்திலும் சிறப்பாக கிருத்துவ சமூகத்திலும் காணலாம். இதற்கு சமுதாயம் பெரிய அளவில் அமைப்பு ரீதியாகப் பரவலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் பல வழிகளில் கல்வி வாய்ப்பையும், வசதியையும் உருவாக்க வேண்டும். பிள்ளைகளை நன்றாகப் படிக்க ஊக்குவிக்க வேண்டும். ஏழ்மை காரணமாக ஒரு முஸ்லிம் பிள்ளை படிக்க முடியவில்லை என்றால் சமுதாயமே அதற்குப் பொறுப்பு என்று உணரும் நிலை உருவாக வேண்டும்.

இட ஒதுக்கீடு : இன்னொரு பக்கம்

சிறுபான்மையினர் நடத்தும் உயர் கல்விக்கூடங்களில் 50 சதவீதம் இடங்களை சிறுபான்மையினரே நிரப்பிக் கொள்ளலாம் என்ற ஒரு ஏற்பாடு தமிழகத்தில் உள்ளது. மொத்தம் 14 முஸ்லிம் கல்லூரிகளில் 11 கல்லூரிகள் முஸ்லிம் சிறுபான்மைத் தகுதியைக் கேட்டுப் பெற்றுள்ளது. அவைகளில் ஆண்டுதோறும் சுமார் 4000 இடங்களில் 2000 இடங்கள் முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்டவை. இந்த ஏற்பாடு கூட ஒரு வகையில் இட ஒதுக்கீடுதான். ஆனால் 800 முதல் 1000 இடங்களில் முஸ்லிம்கள் சேராமல் அந்த வாய்ப்பு பிற சமூக மாணவர் களுக்குப் போய்க் கொண்டு இருக்கிறது.

ஏன் நமக்கென்று ஒதுக்கிய இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன? இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் அதிகமாக இருப்பதால், அதைச் செலுத்த முடியாமல், அவைகளில் சேராமல் இருக்கிறார்கள். இரண்டு பணம் இருந்தாலும் குறைந்த பட்சம் தகுதி மார்க் (Minimum Eligible Marks ) இல்லாத நிலையும் உள்ளது.

ஆகவே தகுதி மார்க்கும் வேண்டும். கட்டணம் மற்றும் வாழ்வுச் செலவும் பணமும் இல்லாமல் தனியார் கல்லூரிகளில் நமது இடங்கள் காலியாக உள்ளன. அவை அப்படியே காலியாக விடப்படவில்லை. பிற சமூகத்தினர் அவ்விடங்களை பெற்று வளர்கிறார்கள். எனவே, தகுதி மார்க் வாங்கும் வண்ணம் மாணவர்களை ஊக்குவித்தல் அவசியம். அதற்கு தொடக்கம் முதலே அவர்களைக் கண்காணித்து உதவி செய்து வளர்த்து வர வேண்டும். இது நம் சமுதாயக் கடமை.

அப்படிச் செய்கின்றபோது தானாகவே அதிக மதிப்பெண்கள் பெற்று அரசு கல்லூரிகளிலும், அண்ணா பல்கலைக் கழகத்தின் கல்லூரிகளிலும், அரசு உதவி பெற்ற கல்லூரிகளிலும் குறைந்த கட்டணத்துடன் நல்ல வாய்ப்பான பாடப் பிரிவுகளிலும் சேர முடியும். அப்போதுதான் உண்மையிலேயே அரசு தந்திருக்கும் 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு அர்த்தமுள்ளதாக அமையும்.

சமுதாயம் உயர்ந்த கல்விக் கட்டணத்திற்கும் ஏற்பாடு செய்தால் இரண்டாம் கட்டத்தில் உள்ள மாணவர்களும் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வாய்ப்பு உண்டு.

டாக்டர் சே.சாதிக்

( முன்னாள் துணை வேந்தர், சென்னை பல்கலைக்கழகம் )
நன்றி : சமநிலை சமுதாயம், மாத இதழ், சென்னை.

17 comments:

சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை நாட்டில் பல சர்ச்சைகளை உண்டு பண்ணியுள்ளன. வேண்டுமென்றே இதனைச் சர்ச்சைக்கு உட்படுத்துபவர்கள் இந்துத்துவாவாதிகள்; அவர்கள் முஸ்லிம்களுக்கான இந்தப் பிரச்சினையைப் பொறுத்தமட்டிலும் மட்டுமல்ல அவர்களின் எல்லாப் பிரச்சினைகளிலுமே மூக்கை நுழைத்து ஏதாவது தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டு இருக்கக்கூடியவர்கள்தாம்.

முஸ்லிம்களோ, கிறித்துவர்களோ தங்கள் மதங்களை இந்து மயமாக்கிக் கொள்ளவேண்டும் என்கிற அளவுக்கு இந்துத்துவாவாதிகளின் குரூரமான ஆதிக்கக் கரங்கள் நீள்வது எல்லோரும் அறிந்ததே.

முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக பல ஆணையங்கள் மத்திய அரசால் நியமிக்கப்பட்டன. இந்த வகையில் நீதிபதி சச்சார் குழு, நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா தலைமையிலான ஆணையங்கள் ஆய்வு செய்து பரிந்துரைகளையும் வழங்கியுள்ளன.

கேரளாவில் 12, தமிழ்நாட்டில் 3.5, பிகாரில் 3, கருநாடகாவில் 4, உத்தரப்பிரதேசத்தில் 2 விழுக்காடு ஒதுக்கீடுகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. மேற்கு வங்கத்தில் 10 விழுக்காடு அளிக்கப்படும் என்று மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் இராசசேகரரெட்டி தலைமையில் அமைந்த அமைச்சரவை முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்தது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது இந்திய அரசமைப்புச் சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என்று ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. (2004 செப்டம்பர்).

இதனைத் தொடர்ந்து மத அடிப்படையில் அல்லாமல் பிற்படுத்தப்பட்டோர் என்ற அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டம் இயற்றப்பட்டது.

முஸ்லிம்களுக்கு 5 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதன் மூலம் ஆந்திரப் பிரதேசத்தில் இட ஒதுக்கீடு அளவு 50 விழுக்காட்டைத் தாண்டுவதால், அதுவும் செல்லாது என ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் சிவப்பு மை கொண்டு அடித்து வீழ்த்திவிட்டது. (2005 நவம்பர்).

ஆந்திர மாநில அரசு தன் நிலையிலிருந்து பின்வாங்கவில்லை. முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட 5 விழுக்காட்டில் ஒரு விழுக்காட்டினைக் குறைத்துக் கொண்டு 4 விழுக்காடு வழங்கிட ஆணை பிறப்பித்தது.

இட ஒதுக்கீடு என்றாலே அதனை எதிர்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் இந்தியாவில் இருக்கிறதே, சும்மா இருந்துவிடுவார்களா? இதனை எதிர்த்தும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இப்பொழுது ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு (Bench) இந்த வழக்கினை விசாரித்தது. ஏழு நீதிபதிகளில் ஒருவர் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும், இன்னொருவர் கருத்து எதையும் சொல்லாமலும், மற்ற அய்வர் எதிராகவும் தீர்ப்பு அளித்த நிலையில், ஆந்திரப் பிரதேச அரசு சற்றும் களைப்பு அடையாமல் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் ஜே.எம்.பஞ்சால், பி.எஸ். சவுகான் ஆகியோர் உள்ளிட்ட அமர்வு வழக்கினை விசாரித்து தீர்ப்பு ஒன்றையளித்தது (25.3.2010)

ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று கூறி, முசுலிம்களுக்கு அளிக்கப்பட்ட 4 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்று இடைக்கால தீர்ப்பு அளிக்கப்பட்டது.

முசுலிம்களுக்கான இட ஒதுக்கீடு என்ற ஒன்று நீதிமன்றங்களால் எப்படியெல்லாம் பந்தாடப்படுகின்றது என்பதை எண்ணினால், சமூகநீதி பாதுகாப்பான நிலையை இன்னும் எட்டவில்லை.

2001 மக்கள் தொகைக் கணக்குப்படி இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 13.4 விழுக்காடாகும். ஒவ்வொரு சமூகமும் எந்த அளவு விகிதாச்சாரத்தைப் பெற்று இருக்கிறது என்பதற்கு ஜி.இ.ஆர். (Gross Enrollment Ratio) என்று குறிப்பிடுகிறார்கள். அந்த வகையில் பார்க்கும்போது உயர் கல்வியில் கிறித்துவர்கள் 19.85; சீக்கியர்கள் 17.81; இந்துக்கள் 13.13, முசுலிம்கள் 7.7. இந்துக்களில் தாழ்த்தப்பட்டோர் 7.37 விழுக்காடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புள்ளி விவரங்கள் உணர்த்துவது என்ன? இந்த ஏற்றத்தாழ்வுகளுக்குப் பரிகாரங்கள்தான் என்ன? சமூகநீதி என்ற கண்ணோட்டந்தானே இந்த அவல நோயைத் தீர்ப்பதற்கான கைகண்ட மருந்து? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சமூக நீதிக்கு முதன்மை இடம் அளிக்கப்படவில்லை?

சமூகநீதிக்கு எதிரான சக்திகள் எதிர்க்குரல் கொடுக்கும்போது, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை மக்களும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதே கனிவான, உரிமையுடன் கூடிய வேண்டுகோளாகும்.
இது போல் அரசுவின் மூலம் நாம் அடைய வேண்டிய எத்தனை சலுகைகள் சரியான முறையான வழிக்காட்டுதல் இல்லாமல் வீனாகியே போய்வருகிறது.இதற்கு அந்த அந்த முஹல்லா நிர்வாகிகள் முயற்சிக்கலாமே?(சகோ. நைனா குறிப்பிட்டிருந்த கலைஞர் காப்பீடு திட்டம் கூட நம்மவர்களுக்கு சரியாக போய் சேர வில்லை யென்பது வேதனைதானே?).

கட்டுரையும் சரி, க்ரவ்ன் (well done) விரிவான பின்னுட்டமும் நல்ல தகவல்களுடன் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது விழித்துக் கொள்(ளுங்கள்) என்று(ம்).

crown.,
where did you CUT this large comments and what makes you PAST this in here ., any way lots of questins no one give single answer !!

இட ஒதுக்கீட்டை நம்பி இருக்கும் எந்த சமுதாயமும் முன்னேற போவதில்லை....ஏணியாக அதை சில சமயம் உபோகித்துகொண்டு எட்டி உதைய வேண்டியது தான் பிறகு...நமது சமுதாயம்தான் நம்மிடம் உள்ள குறைகளை(வறுமை,பள்ளிக்கல்வியை பாதியில் நிறுத்துதல் etc.. )களந்திட முயற்ச்சி செய்ய வேண்டும்.இட ஒதுக்கீடு நம்மை அடிமைப்படுத்தி வைக்க அரசாங்கள் செய்யும் முயற்ச்சிதான்...ஊட்டிவிட்டே பழக்கபட்ட குழந்தைக்கு நாளைடைவில் தனக்கு கைகள் இருப்பதே மறந்து விடும்

சில விசையத்தை பற்றி கட்டுரையாளர் மிக முக்கியமாக குறிப்பிட்டுள்ளார்.

//"வாய்ப்பின் வாசலை நம் மக்களுக்குத் திறக்க வேண்டியது முக்கியம். அந்த வாயிலில் நுழைவதற்கு அவர்களைத் தயார் செய்வது அதைவிட முக்கியம்" //

//சிறுபான்மையினர் நடத்தும் உயர் கல்விக்கூடங்களில் 50 சதவீதம் இடங்களை சிறுபான்மையினரே நிரப்பிக் கொள்ளலாம் என்ற ஒரு ஏற்பாடு தமிழகத்தில் உள்ளது. மொத்தம் 14 முஸ்லிம் கல்லூரிகளில் 11 கல்லூரிகள் முஸ்லிம் சிறுபான்மைத் தகுதியைக் கேட்டுப் பெற்றுள்ளது. அவைகளில் ஆண்டுதோறும் சுமார் 4000 இடங்களில் 2000 இடங்கள் முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்டவை. இந்த ஏற்பாடு கூட ஒரு வகையில் இட ஒதுக்கீடுதான். ஆனால் 800 முதல் 1000 இடங்களில் முஸ்லிம்கள் சேராமல் அந்த வாய்ப்பு பிற சமூக மாணவர் களுக்குப் போய்க் கொண்டு இருக்கிறது.

ஏன் நமக்கென்று ஒதுக்கிய இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன? இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் அதிகமாக இருப்பதால், அதைச் செலுத்த முடியாமல், அவைகளில் சேராமல் இருக்கிறார்கள். இரண்டு பணம் இருந்தாலும் குறைந்த பட்சம் தகுதி மார்க் (Minimum Eligible Marks ) இல்லாத நிலையும் உள்ளது.

ஆகவே தகுதி மார்க்கும் வேண்டும். கட்டணம் மற்றும் வாழ்வுச் செலவும் பணமும் இல்லாமல் தனியார் கல்லூரிகளில் நமது இடங்கள் காலியாக உள்ளன. அவை அப்படியே காலியாக விடப்படவில்லை. பிற சமூகத்தினர் அவ்விடங்களை பெற்று வளர்கிறார்கள். எனவே, தகுதி மார்க் வாங்கும் வண்ணம் மாணவர்களை ஊக்குவித்தல் அவசியம். அதற்கு தொடக்கம் முதலே அவர்களைக் கண்காணித்து உதவி செய்து வளர்த்து வர வேண்டும். இது நம் சமுதாயக் கடமை.//

நமக்கு இருக்கும் வாய்ப்புகளை நாம் பயன்படுத்தவில்லை என்பது தான் நடைமுறை உண்மை. எத்தனைப் பேர் அரசு வேலை வாய்ப்பை பற்றி எண்ணியிருப்போம்? எத்தனை சமூக அமைப்புகள் நம் சமுதாயத்துக்கு உண்மையாகவே மேல் படிப்பு கல்வி விழிப்புணர்வு செய்கிறது?

நாம் இட ஒதுக்கீடு வாங்கிக்காட்டுவதில் உள்ள அதே வேகம் நம் சமுதாயத்து மக்களிடம் கல்வி அரசு வேலை வாய்ப்பு விழிப்புணர்வு செய்தால் நம் சமுதாயம் நல்ல முன்னேற்றம் அடையும். இதை விட்டு விட்டு அரசியல் லாபத்திற்காக இட ஒதுக்கீடு மட்டும் கோட்டுக் கொண்டிருந்தால் நாம் எந்த முன்னேற்றமும் காணப்போவதில்லை.

crown.,
where did you CUT this large comments and what makes you PAST this in here ., any way lots of questins no one give single answer !!
--------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நமக்குத்தேவையான விசயம் சில இடங்களில் பரவிக்கிடப்பதை எடுத்து கையாள்வது தேசகுற்றமா சகோதரரே!படித உங்களை போல் ஒருவன் சொல்லலாமா?மேலும் எல்லாத்தகவலும் திருட(கட்)பட்டதல்ல!(சமுதாயத்துக்காக திருடிய அந்த தண்டனை எனக்குத்தானே?)என்னைப்போல் ஒருவனுக்கும் சொந்த சுய புத்தி இருக்கு அதனாலேயே சிலதை இங்கு (உங்களைப்போல் ஆக்க முடியாவிட்டலும்) சிலதை ஆக்கி முன்பு திருடிய(கட்)துடன் இணைத்து வெளியிடப்பட்டது(இதனால் நம் சொல்லவந்த விசயம் , நேரவிரயம் மிச்சம்!)சொல்லவந்ததுயாதெனில் இவ்வளவு சிரமத்திற்கிடையில் கிடைக்கும் இட ஒதுக்கீ(ட்)டை வீனாக்கிவிடக்கூடாது என்பதே.தவறு இருப்பின் சமுதாயத்துக்காக
செய்த குற்றம் எனக்கருதி மன்னிக்கவும்(உங்க ரெண்டாம் பாகம் ஓரங்க நாடகம் எங்கே???)

இட ஒதிக்கீடு கிடைத்தாலும் அதை நம்மால் நிரப்ப முடியுமா? இட ஒதிக்கீட்டை நிரப்ப என்ன வழிவகை உள்ளது என்பதை முதலில் ஆராய வேண்டும்

இட ஒதிக்கீடு கிடைத்தாலும் அதை நம்மால் நிரப்ப முடியுமா? இட ஒதிக்கீட்டை நிரப்ப என்ன வழிவகை உள்ளது என்பதை முதலில் ஆராய வேண்டும்.
--------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.மிகச்சரியான சந்தேகம் எழுப்பபட்டுள்ளது. எனக்குத்தோன்றிய சில யோசனைகள். நமக்கென்று சமுதாயக்கூடம் இருப்பதில்லை. அப்படி இருந்தால் நன்குப்படித்தவர்கள் (ஆசிரியர்கள்,வக்கீல்கள்...) சேர்ந்து இலவச சமுதாய ஆலோசனைக்கூடம் நடத்தலாம்.(இதை பைதுல்மால் கூட நடத்தலாம் அதில் பங்கு பெற்றிருபவர்கள் படித்த சான்றோரே!) ஊரில் படித்துவிட்டு வேலையற்று இருக்கும் இளைஙர்கள் இந்த சமுதாயகூடத்தில் சென்று ஆலோசனைபெற ஏதுவாக வாரத்தில் ஒரு நாள் சிறப்பு ஆலோசனை வகுப்பெடுக்கலாம்.இதை அந்த, அந்த தெரு சங்கங்கள் கூடச்செய்யலாமே? இதை ஒவ்வொரு ஊரிலும் உள்ள முஸ்லிம் சங்கங்கள் அல்லது சமுதாய அமைப்புகள் செய்யலாம்.

மேற்கண்ட கருதின் படி சமுதாயக்கூடம் அமைத்தால் இலவச சட்ட அலோசனைகள் கூட பெற்று பயனடையலாம்.

நல்ல யோசனை சகோதரர் தஸ்தகீர், நம்ம ஊரில் உயர்கல்வி மற்றும் சட்டம் சம்பந்தமாக ஒரு அமைப்பு நிச்சயம் தேவை, இந்த விசயத்தில் இயக்கங்கள் சமுதாய முன்னேற்ற நோக்கத்தில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.

எல்லாவற்றிற்கு மேல் வெளிநாட்டு சம்பாத்தியம் என்ற நோய் நம் இளைய மாணவ சமுதாயத்திடமும் பெற்றோர்களிடமும் இனி வராமல் இருக்க பிரச்சாரம் அவசியம். இவைகளை ஒவ்வொருத்தரும் தன் வீட்டில் உள்ளவர்களிடம் எடுத்துரைத்தாலே போதும். நம் நாட்டிலே முயற்சி எடுத்து நல்ல வேலையை தேடிப்பிடித்து சம்பாதிக்கும் எண்ணம் நம் இளைய மக்களிடம் உருவாகலாம்.

எல்லாவற்றிற்கு மேல் வெளிநாட்டு சம்பாத்தியம் என்ற நோய் நம் இளைய மாணவ சமுதாயத்திடமும் பெற்றோர்களிடமும் இனி வராமல் இருக்க பிரச்சாரம் அவசியம். இவைகளை ஒவ்வொருத்தரும் தன் வீட்டில் உள்ளவர்களிடம் எடுத்துரைத்தாலே போதும். நம் நாட்டிலே முயற்சி எடுத்து நல்ல வேலையை தேடிப்பிடித்து சம்பாதிக்கும் எண்ணம் நம் இளைய மக்களிடம் உருவாகலாம்.
------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் என்று சமுதாயக்கூடம் அமையுமோ அன்றிலிருந்து இவைகளையும் நடை முறைப்படுத்த சாத்தியமாகும்.மேலும் ஒன்றின் பின் ஒன்றாகத்தான் செல்லனும்.அதேவேளை ஒருவர் ஒருத்தொழில் ஊரில் ஆரம்பித்தால் அவருக்குப் போட்டியாக அதே தொழிலை அந்த ஏரியாவிலேயே மற்றவர்கள் போட்டியாக ஏற்படுத்துவதை ஒழிக்கனும்.அவ்வாறு செய்பவர்களைப் புறக்கனித்தால் இனி யெல்லாம் சுகமே!

சகோதரர் தஸ்தகீர் நீங்க சொல்வது சரிதான், ஆனால் ஒரு காலத்தில் இருந்த (சமுதாயக் கூடம் போன்ற) சங்கங்களின் கட்டுப்பாடுகள்(திருமணம் விவாகரத்து தவிர) இன்று நடைமுறையில் இல்லை என்பது தான் நம்மால் ஒத்துக்கொள்ளப்பட்ட வேதனையான விசயம்.

பல இயக்கங்களால் நம்மில் பொதுவான விசயங்களி பொது கருத்து ஏற்படுத்த முடியாமல், கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. அல்லாஹ் தான் இவைகளை மாற்ற வேண்டும். நல்ல ஒற்றுமையை ஏற்படுத்தும் சமூக சிந்தனையை நம் அனைவருக்கு அல்லாஹ் தர நாம் துஆ செய்வோம். இன்ஷா அல்லாஹ்.

(சமுதாயக் கூடம் போன்ற) சங்கங்களின் கட்டுப்பாடுகள்(திருமணம் விவாகர(ம்)த்து தவிர) இன்று நடைமுறையில் இல்லை என்பது தான் நம்மால் ஒத்துக்கொள்ளப்பட்ட வேதனையான விசயம்.
--------------------------------------------------அஸ்ஸலாமு அலைக்கும் நான் சொல்லும் சமூகக்கூடம் வருங்காலத்தூண்களை செதுக்க நல்வழிப்படுத்தி கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ,சட்ட ஆலோசனை சம்பந்த பட்டதை மட்டும் செய்யக்கூடியதாக இருக்கனும்.

crown said ....
///சொல்லவந்ததுயாதெனில் இவ்வளவு சிரமத்திற்கிடையில் கிடைக்கும் இட ஒதுக்கீ(ட்)டை வீனாக்கிவிடக்கூடாது என்பதே///

////வருங்காலத்தூண்களை செதுக்க நல்வழிப்படுத்தி கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ,சட்ட ஆலோசனை சம்பந்த பட்டதை மட்டும் செய்யக்கூடியதாக இருக்கனும்.

shahulhameed said....
///இட ஒதிக்கீடு கிடைத்தாலும் அதை நம்மால் நிரப்ப முடியுமா? இட ஒதிக்கீட்டை நிரப்ப என்ன வழிவகை உள்ளது என்பதை முதலில் ஆராய வேண்டும்///

crown said....
////ஊரில் படித்துவிட்டு வேலையற்று இருக்கும் இளைஙர்கள் இந்த சமுதாயகூடத்தில் சென்று ஆலோசனைபெற ஏதுவாக வாரத்தில் ஒரு நாள் சிறப்பு ஆலோசனை வகுப்பெடுக்கலாம்.இதை அந்த, அந்த தெரு சங்கங்கள் கூடச்செய்யலாமே? இதை ஒவ்வொரு ஊரிலும் உள்ள முஸ்லிம் சங்கங்கள் அல்லது சமுதாய அமைப்புகள் செய்யலாம்.////

சகோதரே இந்த வரிகள் தான் நாம் எதிர்பார்ப்பது.,

cut and past முறைகள் பதிவுலகில் மிக சகஜம்தான் ஒத்துக்கொள்கின்றேன் (உங்கள் வார்த்தையில் ஒருபதிவு திருடப்பட்டதாக cut and past இருந்தால் "நன்றி" என்ற‌வார்த்தையை உபயோகிப்பது
மீழ்பதிவு செய்பவ‌ரின் பெருந்தன்மையை காட்டும்). அல்லது நாம் வாசித்த மற்றவரின் பதிவு நமது சிந்தனைக்கு சமமாக இருந்தால் அதை நாம் ஆளுமைக்கு உட்படுத்தி சூல்நிளைகளுக்கு ஏற்றவாறு மையப்படுத்தி பதிய வேண்டும். ஆனால் அதை தனி பதிவாக எழுதினால் மக்களிடம் போய்சேர
வாய்ப்புள்ளது

ஆனால் ஒரு பதிவிற்கு பின்னூட்டமிடுவது இரண்டு வரியாக இருந்தாலும் நாளுபோருக்கு போய் சேர்ந்து அது உரைக்கும். அது சொந்த சரக்காக இருந்தால்
நம்மை பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

வாசிப்பவர் எல்லாம் படித்தவர்கள்தான்
படித்தவர்கள் எல்லாம் வாசிப்பது கிடையாது
வாசிப்பவர்களில் சிலர் படிப்பை சுவாசிக்கின்றனர்
படித்ததை சுவாசிப்பவரில் சிலர்தான் விமர்சகர்கள்
விமர்சகரில் சிலர்தான் சிந்தைவதிகள்
சிந்தனைவாதிகளில் சிலர்தான் நடுநிலையாளர்கள்
நடுநிலையாலர்கள்தான் சிலர்தான் உரக்கசொல்பவர்கள்
உரக்கச்சொல்பவர்களில் சிலர்தான் சீர்திருத்தவாதிகள்
சீர்திருத்தவாதிகளில் சிலர்தான் மனிதாபிமான வாதிகள்

மன்னிக்கணும் சின்ன கிறுக்கல்கள்..........
தொடருங்கள் உங்கள் crown தகவல்களை

Insha Allah I will get you through my past on this post !!!

//வாசிப்பவர் எல்லாம் படித்தவர்கள்தான்
படித்தவர்கள் எல்லாம் வாசிப்பது கிடையாது
வாசிப்பவர்களில் சிலர் படிப்பை சுவாசிக்கின்றனர்
படித்ததை சுவாசிப்பவரில் சிலர்தான் விமர்சகர்கள்
விமர்சகரில் சிலர்தான் சிந்தைவதிகள்
சிந்தனைவாதிகளில் சிலர்தான் நடுநிலையாளர்கள்
நடுநிலையாலர்கள்தான் சிலர்தான் உரக்கசொல்பவர்கள்
உரக்கச்சொல்பவர்களில் சிலர்தான் சீர்திருத்தவாதிகள்
சீர்திருத்தவாதிகளில் சிலர்தான் மனிதாபிமான வாதிகள் ///

"CUT"ங்கிறீங்க "PASTE"ங்கிறீங்க அப்போ வெட்டியதெல்லாம் ஒட்டாதீர்(கள்)ன்னு சொல்லத்தான் செய்தீர் ஆனா மேலே சொன்னவைகள் எந்தவகை "வாதிகளில்" அல்லது "களில்" உள்ளவங்க(ன்னு) சொலுங்க பார்க்கலாம் !

அஸ்ஸலாமு அலைக்கும்.
வாசிப்பவருக்கு பெயர் படிப்பவர்
படிப்பவர்ரெல்லாம் படித்தவரல்ல.
படித்தவரில் சிலர் வாசிப்பை நேசிப்பர்,
(சுவாசிப்பர்),
படிப்பதை சுவாசிப்பவரில் சிலர்தான் விமர்சகர்கள்.
விமர்சகரில் பலர் சிந்தனை வாதிகள்.
சிந்தனைவாதிகளில் சிலர் நடுனிலையாளர்கள்.
நடுனிலையாளர்களில் சிலர்தான் உரக்கச்சொல்பவர்கள்.
உரக்கச்சொல்பவரில் சிலர் சீர்திருத்தவாதிகள்.
சீர்த்திருத்தவாதிகளில் பலர் மனிதபிமானிகள்.
நல்ல மனிதாபிமானியே தலைமைக்குச்சிறந்தவர்.
நல்ல தலைமையே நல்வழி காட்டி.
(மிகச்சிறந்த இரு நண்பர்களின் புதல்வர்கள்(சகோதரர்கள்)கருத்து பரிமாற்றம்(சிலனேரம் கருத்து யுத்தம்)எல்லாம் சமுதாய நலனுக்கே! நாம் கொடுத்துவைத்தவர்கள் அந்த இரு இணைபிரியா நண்பர்களின் பிள்ளையானதற்கு).(அல்லாஹுக்கே எல்லாப்புகழும்)

அஸ்ஸலாமு அலைக்கும் நல் தமைமை நம் உயிரினும் மேலான நபி (ஸல்)அவர்கள் அதன் பின் சகாபாக்கள் நல்லடியார்கல்...இப்ப யாரும் மில்லை ஆகவே மார்க அறிவுடன் கூடிய தலைமை வேண்டும்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More