Jul 30, 2010

நாதியற்றுக் கிடக்குதப்பா! கேட்பாரில்லை!

கடந்த சில மாதங்களாக அதிரை நடுத்தெருவில் சாலை அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது, ஏனோ இன்னும் இது முடிவடையாமல் உள்ளது, இது பற்றிய ஒரு ஆதங்கம்.                          



Dear brothers,

Assalamu alaikum. Myself and other middle street dwellers are facing a crucial problem of prolonged delay in the construction of new road. Several months ago, it was promised to me by one of the leading personalities that the road construction will be completed 'within a month'. But I don't know for what reason it is delayed until now! I want to express my concern and disturbed feeling in an article. But, as you all know, our brothers are not receptive to constructive criticism. Therefore, I decided to compose a poem in Tamil which will not be read by all but a few educated mass. Readers may pardon me for this. If you understand the content of my poem, you may understand the reality of my feeling. Thanks for your taking trouble!


உடைத்தெடுத்தார் கீழ்ப்புறத்தின் படிகள் தம்மை

உயர்நோக்காம் சாக்கடையைச் சீர்ப டுத்த


இடைத்தரகர் பலபேர்கள் நின்றே செய்தார்


இதையடுத்து மாதங்கள் பலவாய் வீதி

துடைப்பதுபோல் தார்ச்சாலை அமைப்ப தற்காய்த்


தூரெடுத்துக் காவிமண்ணும் கல்லும் போட்டார்


நடுத்தெருவே காவிமயம் இதனால் ஆகி


நாதியற்றுக் கிடக்குதப்பா! கேட்பா ரில்லை!



Is there anybody from the undertakers who has got wisdom?

-அதிரை அஹ்மது

புகைப்படம் : நன்றி அதிரை எக்ஸ்பிரஸ்
குறிப்பு: புகைப்படம் மார்ச் மாதம் எடுத்தது.

22 comments:

தெருவில்தான் காவிமயமான மண்களை பரத்திவிட்டிருக்கின்றனர் ஆனால் (மாமா)உங்கள் கவிமயமான வரிகளின் ஆதங்கம் நிதர்சனமே !

நடுத்தெருவை நடுத்தெருவில் விட்டனரே !
சாக்கடையை சரி செய்ய அரசியல் சாக்கடை கலந்துவிட்டதோ ?
மேல்(தெரு)புறத்தார் கண்கானிப்பில் இருக்கும் உயர்நோக்கம் கொண்டவர்ககள் தான் இதனைச் செய்கிறார்கள் ஆகவே நாம் அனைவரும் ஆதங்கத்தை தெரிவித்தே ஆகனும் சீக்கிரம் காவிமேல் கறுப்பு(தார்)போடச் சொல்லி(தான்).

ஓ இந்த காவியோ சொன்னியளா நான் அந்த காவி என்று நினைத்து படித்த பின்புதான் புரிந்தது !! தலைப்பை கொஞ்சம் மாற்றி வையுங்கள்

சட்மன்ற தேர்தலுக்கு ஒரு நாளைக்கு முன்னாடி தார்ரோடு போட்டிடுவாங்க எதிரிப்பார்க்கப்படுகிறது.

இன்னுமா பழைய அரசியல்?

வருவது நோன்பு, மழைகாலம் என்பது தெரியவில்லையா நடுத்தெரு வார்ட் உறுப்பினருக்கு?

நல்ல தலைப்பு நன்றி அதிரை நிருபர்

நா(ரி)தியற்றுக் கிடக்குதப்பா! கேட்பாரில்லை!

crown காக ஷாகுல்

திண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்போது போல் பிரியாணி சாப்ட்ட களைப்பில் யாரையும் காணோம்

எல்லோரும் வீட்டல நல்லா தூங்குறாங் சாஹுல் காக்கா.

இனி தான் வருவாங்க இந்த "நடுத்தெரு ரோட்டு" செய்தியை படிப்பதற்காக.

உயர்(நோக்காம்) சாக்கடையைச் சீர்ப டுத்த.
----------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.சாச்சா படைத்திட்டீர் நல் கவிவழியாய் நலன் நாடி.(ஆசிரியப்பாவா இது சாச்சா?)இன்னும் நானும் சொல்வேன் உங்களை பார்த்த பலன் கொண்டு இன்சா அல்லாஹ் அதன் முன்னே என் வழியில்(ஸ்டைல்)சிலவரிகள்...
உயர் நோக்காம் என்ற உயரிய நோக்கம்(no come) சொன்னீர் கவனித்தீரா அதில் கூட இந்த ஆங்கில சொல் வந்து இந்த உயர் நோக்கம் வீனோ என எண்ணும் வண்ணம் உள்ளதே!

இடைத்தரகர் பலபேர்கள் நின்றே செய்தார்.
---------------------------------------
இவரெல்லாம் கடைந்தெடுத்த கயவன் தானோ? அதனால் நான் உரைப்பேன் நன்றாய் இவரெல்லாரும் கடையரே!

இதையடுத்து மாதங்கள் பலவாய் வீதி.
-------------------------------------
சாச்சா இது உங்க பால்ய வீதியா?இல்லை நடுவில் தான் இந்த நடுத்தெருவில் குடி அமர்ந்தீரா?அறியதாருங்கள் அன்பா(ய்)ல் கேட்கின்றேன்.

அட க்ரவுன் : என்ன(பா) இப்புடி பால்ய(கால) வீதியான்னு இதெல்ல சாச்சாவோ நாங்களோ கண்ட பால்ய(கால)வீதியல்ல, அது அதிரையின் முகவரி(களை) சொன்னக் காலம் அன்று அகன்ற தெரு, அளவான மணல், இரைச்சல் குறைந்த சப்தங்கள்.. அதுதான் பால்யகால தெரு, நடுத்தெரு(வுக்குள்)தான் எங்கள் குடில் அன்றும் இன்றும்... - இப்படிக்கு : காக்கா

அதுசரி (மாமா)கவிதையின் குமுறலை நீ கோடுபோட்டு சொல்லிட்டே யாருப்பா ரோடு போடுறது ! சீக்கிரம் தேடிப் புடிங்கப்பா !!

//திண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்போது போல் பிரியாணி //

கடைசிவரைக்கும் கனவா பிரினானி எப்புடி ஆக்குறதுன்னு நீங்களும் க்ரவுன்னும் பக்குவம் சொல்றதுக்குள்ள நம்ம MSM(n) அஜினமோட்டோ மேட்டரு முடக்கிடுச்சு, அதனலென்ன இன்னைக்கு(ம்) வெள்ள சோறு கறிதான் சாஹுல்.. :)

ஒரு மாறுதலுக்காக (தேர்தலும் வரவிருப்பதால்) : சென்ற வாரப் பத்திரிக்கையில் படித்தது, தமிழக முதல்வர் யாரும் எதிர்பாரதவிதத்தில் அண்ணா நினைவிடத்திற்கு சென்றாராம் அங்கே ஒரு மணிநேரம் தன்னோட பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டாரம் அப்போது கண்களில் கண்ணீர் வடிந்தாதாக.. செய்தி நீண்டது. அங்கே பின்னுடம் இட்டவர் சொல்லியிருந்தார் என் கண்களிலும் கண்ணீர் வந்தது ஆனா அவரைப் போல அல்ல இந்த நெகிழ்ச்சிய படிச்சுட்டு சிரிச்சு சிரிச்சு(ன்னு) !

துடைப்பதுபோல் தார்ச்சாலை அமைப்ப தற்காய்த்
தூரெடுத்துக் காவிமண்ணும் கல்லும் போட்டார்.
நடுத்தெருவே காவிமயம் இதனால் ஆகி
நாதியற்றுக் கிடக்குதப்பா! கேட்பா ரில்லை!.
-----------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
கண் துடைப்பே கானும் போதில்
ஏறெடுத்து பாரா முகம் ,
வேலை தண்னில் மண்ணள்ளி போட்டதுயார்?? மவுனம் ஏனோ? உன்மையிலே காவி மனம் படைத்தவன் செயல் இதில் உண்டாம் என்பேன்., முசுலீம் தெருவல்லவா?
நாதியற்ற வீதியாய் போக விடாமல் வீதியிலே வந்து போராடி உரிமை மீட்போம்.

திண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்போது போல் பிரியாணி சாப்ட்ட களைப்பில் யாரையும் காணோம்.
--------------------------------------------------
உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு என்பர் ஆதனால் திட்டு முட்டு திகரடியில் தினறிபோய் கானா முகம் ஆனதுவோ இல்லை பகல் கானா கானும் தூக்கம் தழுவியதோ? nap????(Naps may be taken when one becomes drowsy during the day or as a traditional daily practice).

தயவு கூர்ந்து தனிமனித (தாக்குதல் நோக்கத்தில்) பெயர்களை பயன்படுத்தி இங்கு பினூட்டமிட வேண்டாம் !

யாங்காக்கா, இவ்ளோ ஒசரமா நம்ம நடுத்தெருவுலெ கானு (வாய்க்கால்) கட்டுராஹெலெ அப்பொ அவசரத்துக்கு முடுக்குலெ (சந்துலெ) ஆட்டோ எப்புடி போவும்? செரமமில்லையா? அப்பண்டாக்கா எல்லா ஊட்டையும் ஜாக்கி வச்சி தூக்க சொல்லனுமா? இல்லை ஆட்டோவை ஜம்ப் பண்ண சொல்லனுமா? என்னா ப்ளேன்லெ தான் கட்டுராஹெலோ ஒன்னும் லெக்கு தெரிய மாட்டிக்கிது. ஒரு வாட்டி மழை,கிழெ வந்தா தெரியும் இந்த கானொடெ வண்டவாளம், தண்டவாளமெல்லாம் என்னான்டு. (எதையும் ப்ளேன் பண்ணாமெ இறங்கக்கூடாது).

வணடவாளம் தான் கீழே கால்வாயக ஓடப்போகுதாம், தண்டவாளமில்லையாம் மேலே காண்கீரீட் போட்டு மண்ணை அள்ளிப் போடுவாங்க போல..

அப்பாடா! கடைசியாக.... இன்று ரோடு போட்டு முடித்துள்ளார்கள்! திடீரென்று மழை வந்து தாரையும் ஜல்லிகளையும் அடித்துக்கொண்டு போய்விடுமோ என்று பயம்! ரோடு உறுதியான பிறகு மழை வரட்டும் எனப் பிரார்த்திப்போம்!

//அப்பாடா! கடைசியாக.... இன்று ரோடு போட்டு முடித்துள்ளார்கள்!//

நல்ல செய்தி, அதிரை அஹ்மது அவர்களின் ஆதங்க கட்டுரைக்கு பலன் கிடைத்துள்ளது. ரமலான் ஆரம்பிப்பதற்கு முன்பு நடுத்தெருவில் ரோடு போட்டு முடித்துவிட்டார்கள் என்பது தான் மிக முக்கியமான செய்தி.

//ரோடு உறுதியான பிறகு மழை வரட்டும் எனப் பிரார்த்திப்போம்!//

நாமும் பிராத்திக்கிறோம்.

மாமா கோடு போட்டீங்க அவங்க ரோடு போட்டுட்டாங்களே ! (சந்தோஷம்) - மழைக்கு முன்னாடி யாரவது தண்ணீரை ஊத்திடப் போறாங்க !

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More