Jun 22, 2010

உமர்தம்பி பெயரில் விருது - சிங்கப்பூரில்

தேனீ உமர்தம்பி அவர்களின் பெயரில் விருது சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக சென்ற மாதம் விருது வழங்கப்பட்டது இது பற்றிய செய்தியை இங்கு மீண்டும் என் வலைப்பூவில் பதிவு செய்வவதில் பெருமையடைகிறேன்.

சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 நிறைவு விழா இன்று(மே 28,2010) மாலை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ஆர்கெட் அருகில் உள்ள அப்பல்லோ பனானிலீஃப் உணவகத்தில் மாலை 6.00 மணியிலிருந்து கலைக்கட்டியது.


விழாவின் முக்கிய நிகழ்வாக மணற்கேணி 2009 சிறந்த கட்டுரைகள் எழுதி வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு (திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம்) விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் வலைப்பதிவில் செயல்பட்டும் இணையத் தமிழ்வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்து தற்போது மறைந்துவிட்ட தேனி எழுத்துறு தந்த தேனி உமர் தம்பி, தேன்கூடு திரட்டி உருவாக்கி மாதம் தோறும் சிறுகதைகள் போட்டி நடத்தி தமிழ்பதிவர்களை ஊக்குவித்த திரு.தேன்கூடு சாகரன், கேன்சருடன் ஒரு யுத்தம் நடத்திக்கொண்டே தமிழ் வலையுலகில் கேன்சர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எழுதிய திருமதி.அனுராதா சுப்ரமணியன், தமிழ் கணிமை இணைய வளர்ச்சியில் பங்காற்றிய திரு.சிந்தாநதி அவர்களின் நினைவாக வழங்கப்பட்டது.


இந்த மாபெரும் விழாவை திரு.மா.அன்பழகன்,திருமதி சித்ரா ரமேஷ், திருமதி ஜெயந்தி சங்கர், திரு விஜயபாஸ்கர், திரு.இராமகண்ணபிரான், திரு.பாண்டியன், திரு.கவி, கவிஞர் பாலுமணிமாறன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள், வாசகர் வட்டம் உறுப்பினர்களும் கலந்துகொண்டு விழா சிறக்க துணையாக இருந்தார்கள். விழாவின் முடிவில் உணவும் வழங்கப்பட்டது.


நன்றி அம்மா அப்பா வலைப்பூ

தன்னலம் விரும்பாத தாய்தமிழ் தொண்டர் தேனீ உமர்தம்பி பெயரில் விருது வழங்கி சிறப்பித்த சிங்கப்பூர் வலைப்பதிவர்கள், தமிழ்வெளி திரட்டி இணையதளம் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் உமர்தம்பி குடும்பத்தார், நண்பர்கள் அதிரைவாசிகளின் சார்பாக அன்பான நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். உங்களின் தமிழ் சேவை இவ்வுலகம் இருக்கும் நாள் வரை தொடர எங்கள் வாழ்த்துக்கள்.

இச்செய்தியை மீண்டும் எனக்கு ஞாபகப்படுத்திய அன்பு சகோதரர் ஜோசப் பால்ராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More