Jun 24, 2010

உமர்தம்பிக்கு செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம்

தேனீ எழுத்துரு தந்த தமிழ் இணைய மக்களால் யுனிகோட் உமர் என்று அன்போடு அழைக்கப்படும் அதிரை உமர்தம்பிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் முதல் அங்கீகாரம் கிடைத்த செய்தி முதலில் நண்பர்கள் மற்றும் INFIT இணையம் மூலமாகவும் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

தமிழ்கணிமைக் கொடையாளர் உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவைய அங்கீகரிக்கும் வகையில் முதற்கட்டமாக கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர்தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது

இந்த அங்கீகாரத்திற்கு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க ஆதரவு குரல் தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

உமர்தம்பி அங்கீகார செய்தி வேண்டுகோளை மீண்டும் மீண்டும் இணையத்தில் வெளியிட்டு தமிழ் இணைய ஆர்வளரர்களுக்கு ஞாபகப்படுத்தி வந்த அனைத்து வலைபூக்களுக்கும் மிக்க நன்றி.

உமர்தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று தங்கள் தளங்களில்
செய்திகள் வெளியிட்ட தமிழ்மணம், விகடன் இணையத்தளங்களுக்கும்
மிக்க நன்றி.

இத்தருணத்தில் இம்முயற்சியில் முக்கிய பங்களித்த நன்றி மறவாத
உமர்தம்பி அவர்களின் இணைய நண்பர் அவர்களுக்கு மிக்க நன்றி
அவரிடம் அனுமதி வாங்கிய பிறகு அவருடைய பெயரை வெளியிடுகிறேன்.

உத்தமம் அமைப்புத் தலைவர், நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும். உலகத் தமிழ் மாநாட்டில் உத்தமம் அமைப்பின் அனைத்து செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் தமிழக
அரசுக்கும், தமிழ முதல்வர் அவர்களுக்கும், துணை முதல்வர்கள் அவர்களுக்கும் மிக்க நன்றி.

இம்முயற்சியில் தனிப்பட்ட கவணம் செலுத்தி தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம் எழுதி, அரசின் கவணத்துக்கு எடுத்திச் சென்ற தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கும், தமுமுக சகோதரர்கள் அனைவருக்கும் எங்களின் அன்பான நன்றி.

இறுதியாக இம்முயற்சியில் முழு கவணம் செலுத்தி தமிழக முதல்வர்களுக்கு கடிதம் எழுதி, துணை முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் கவணத்துக்கு எடுத்துச் சென்ற அதிரை கவிஞர் சகோதரி 'அன்புடன் மலிக்க' அவர்களுக்கும், அவரின் முயற்சிக்கு பெருதவி செய்த அன்பு சகோதரர் திரு. காஞ்சி முரளி அவர்களுக்கும், திருவாரூர் வழக்கறிஞர் திரு. அசன் முகமது ஜின்னா அவர்களுக்கும் எங்களின் அன்பான கோடான கோடி நன்றிகள்.

வரும் நாட்களில் உமர்தம்பிக்கு அங்கீகாரம் தொடர்பாக இன்னும் பல நல்ல செய்திகளை எதிர்ப்பார்த்தவனாக விடைப்பெறுகிறேன்.

தாஜூதீன்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More