Aug 11, 2010

ரமழான் வாழ்த்துக்கள் – தல நோன்பு

இன்று காலை முதல் நண்பர்கள் சிலர் தொலைப்பேசியில் கேட்ட கேள்வி இன்னிக்கு நோன்பு இருக்குமா? இருக்காதா?,                                      என்னிடம் இருந்த பதில் பிறையை பார்த்து சொல்கிறேன். என்ன சின்னபுள்ளைக்கு சொல்றமாதிரி சொல்லுகிறேன் என்று நினைக்காதிங்க, உண்மையாகவே என்னிடம் நோன்பை எதிர்ப்பார்க்கும் சந்தோசத்தில் சிலர் கேட்ட கேள்விகள் தான் இவை. தல நோன்பை எதிர்ப்பார்த்திருந்த சந்தோசம் நம் அனைவரிடம் இருந்திருப்பது உண்மைதானே…

இரவுத் தொழுகை, சஹர் சமையல், உரக்கம், சஹர், காலை சிறிய உரக்கம், வேலை, இஃப்தார் சமையல், இப்தார், மஃக்ரிப், சிறிய ஓய்வு, இஷா, இரவுத் தொழுகை, சஹர் சமையல்…….. நேரம் கிடைக்கும் போது குர் ஆன் ஓதுவது இப்படி தொடர்கிறது இங்கு எங்களுக்கு (அமீரகத்தில்) நோன்பு நாட்கள். ரொம்ப சீக்கிரம் நாட்கள் ஓடிவிடும். இருந்தாலும் எப்படா வெள்ளிக்கிழமை வரும் என்ற ஏக்கம் ஒவ்வொரு நாளும் வந்து செல்லும். இது இங்கு  எனக்கு, மற்றவர்களுக்கு எப்படி நோன்பு நாட்கள் செல்கிறது என்று சொன்னால் தெரிந்துக்கொள்ளலாம்.

பழைய நினைவுகளை மறக்க முடியவில்லை. அன்பு சகோதரர் MSM நெய்னா முகம்மது அவர்கள் ரமழான் தொடர்பான கட்டுரையில் நம் பழைய நினைவுகள் நிறைய ஞாபகப்படுத்தினார்.

அன்று - முதல் பிறை பார்ப்பதற்காக பள்ளிவாசல் சிறிய மனோராவில் ஏறி எட்டி எட்டி அதோ அந்தா தெரியுது.... அங்கே தெரியுது.... என்று ஏக்கம் நிறைந்த எதிர்ப்பார்ப்பு.
இன்று - டிவி முன்னாடியும், இணையத்திலும், மொபைலிலும் பத்து விரலை வைத்து முதல் பிறை எதிர்ப்பார்ப்பு.

அன்று முதல் shift இமாம், இரண்டாது shift இமாம் இரவுத்தொழுகை , தொழுகையில் இமாம் குர்ஆன் ஓதுவதை சரி பார்ப்பதுக்கு ஒரு ஆள்.
இன்று ஒரே இமாம் இரவுத்தொழுகை. இமாம் ஓதுவதில் தவறு வந்தால் யாராவது தொழுதுக்கொண்டிருக்கும் ஒரு நபர் திருத்திவிடுகிறார்.

அன்று சமையல் அறை பக்கம் போகாமல் சஹர் சாப்பாடு.
இன்று சமையல் அறை பக்கம் போனால் தான் சஹர் சாப்பாடு.

அன்று சுப்ஹ் தொழுதவுடன் ஆழ்ந்த நிம்மதியான தூக்கம்.
இன்று சுப்ஹ் தொழுதவுடன் அசந்துடுவோமோ என்ற அச்சம் தூக்கம்.

அன்று 30 நாளும் வித்ரு (நள்ளிரவில்) தொழுகை தொழ வாய்ப்புகள் அதிகம் இருந்தது பயன்படுத்திக்கொண்டோம்
இன்று கடைசி பத்தில் மட்டும் தான் வித்ரு(நள்ளிரவில்) அந்த வாய்ப்பு.

அன்று நோன்பு திறக்க பள்ளிவாசல் கன்ஞ்சி இல்லாட்டி வீட்டுல கன்ஞ்சி.
இன்று நோன்பு திறக்க நாம் காச்சினால் தான் கன்ஞ்சி இல்லாட்டி taste இல்லாத TASTY ஹோட்டல் கன்ஞ்சி.

அன்று நகரா அடிப்பவரின் கண்ரோலில் நோன்பு திறந்தோம்.
இன்று நம் கண்ரோலில் மட்டும் தான் நோன்பு திறக்கிறோம்.

அன்று நோன்பு திறந்த பின்பு தெரு கடைகளில் கடல்பாசி, பூஸ்ட், கவாப் மற்றும் பல உணவுகள் கிடைத்தது.
இன்று நோன்பு திறந்த பின்பு மலையாளி கடையின் ஒரு திர்கம் டீ மட்டும் தான்.

இன்னும் நிறையா சொல்லிகிட்டே போகலாம், நேரமில்லை.இதை படிப்பவர்கள் பின்னூட்டமிட்டு இன்னும் நிறைய ஞாபகப்படுத்தலாம்.

இந்த ஆண்டு ரமழானில் நாம் நல்ல இபாதத்கள் செய்து, நிறைய பாவ மன்னிப்பு தேடி, நம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும், ஒற்றுமைக்காகவும், நம் அனைவரின் உடல் ஆரோக்கியத்திற்காகவும், உற்றார் உறவினர்களின் நலன்களுக்காகவும் நம்மை படைத்த அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.

எல்லோருக்கும்  ரமழான் வாழத்துக்கள், சந்தோசம எல்லோரும் நோன்பு பிடிங்க...

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புடன் தாஜுதீன்.

15 comments:

கஞ்சிக்கு வழியில்லாத ஏழையும்....
கஞ்சியை ஒருவேளையும் உண்னாத சீமானும்,
நோன்பு கஞ்சிக்கு ஏங்கும் ஏக்கம்-
காரணம் நோன்பு கஞ்சியின் நோக்கம்.
ஒரே உணவு ஒற்றுமையை பறைசாற்றும்!
மாதம் முப்பது நாளும் தெவிட்டாத அமுதம்!
இறைவனின் சீரிய பரகத்தும்,
ரஹ்மத்தும் கலந்த கஞ்சி!
எல்லோரும் ஒரு வருசையில் அமர்ந்து,
நோன்பு கஞ்சி குடிக்கையிலே ....
சாந்தியும் சமாதானமும்,பக்தி மணமும் கலந்து
வயிற்றுக்கும்,மனதுக்கும் நிறைவு!
அஸ்ஸலாமு அலைக்கும் ,சென்ற ஆண்டு அதிரை போஸ்டிற்காய் நான் எழுதியதை இங்கு மீள்பதிவாக பதிகிறேன்.

அஸ்ஸலாமு அலைகும்.சகோ.சாகுல் வந்து என்னை கஞ்சி காய்ச்சாம இருந்தா சரி....

'நோன்புக்கஞ்சி' பிரியர்கள் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவமே தனி தான். "தனி மனிதனுக்கு கஞ்சி இல்லை எனில் இவ்வுலகினை சபித்திடுவோம்" என்று சூழுரைத்தாலும் சூழுரைப்பார்கள் போலும்.

எக்ஸ்பயரியான நம் பழைய நினைவுகளை இங்கு புதுப்பித்து நம் அனைவரின் பார்வைக்கு தந்தமைக்கு சகோ. தாஜூத்தீனுக்கு எம் நன்றிகளும், து'ஆவும்.

அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களையும் மன்னித்து, நோன்பையும், துவாக்களையும் ஏற்றுக்கொள்வானாக.. ஆமீன்

//'நோன்புக்கஞ்சி' பிரியர்கள் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவமே தனி தான்.// நம்ம எல்லோரையும் சேர்த்துதானே MSM(n)!!

நோன்பு புடிக்காவந்தங்களுக்குகூட நோம்பு கஞ்சி(யை)ப் புடிக்கும் ! வழக்கம்போல் கரைவேட்டிக்காரர்களும் இலை விரித்துகாட்டும் கூட்டமும் போடுவார்களே வேஷம் இந்த நோன்புகாலங்களில் (ஓட்டுக்)கஞ்சிக்காக !

திருத்தம் : "நோன்பு புடிக்காத வங்களுக்குகூட"

காலத்திற்க்கு ஏற்ற கடுரை.

அதிரை அஷ்ரப்

காலத்திற்கு ஏற்ற கட்டுரை

அதிரை அஷ்ரப்

RAMADAN KAREEM

Assalamuallikum.
May Allah keep us on the right path, and accept our fasting and prayers.
We wish the best blessings of Ramadan to all. May Allah accept our worship and may He help us rejuvenate our faith. May He help us share the joy of this month with all our family, friends and neighbors.
Jazakkallahu khairan
Mohamed Ali jinnah

தல(கறி)நோம்பு (கஞ்சி) எப்படி இன்னைக்கு ? தலைங்களையே காணோம் ?

crown
சென்ற ஆண்டு அதிரை போஸ்டிற்காய் நான் எழுதியதை இங்கு மீள்பதிவாக பதிகிறேன்.

இந்த வருசத்துக்கு புதுசா கஞ்சி காய்ச்சாமல் போனவருசாது கஞ்சை இப்போது ஊத்துவது நியாயமா ?

இன்றைக்கு நோன்பு திறக்க மூன்று வீட்டு கஞ்சி (பக்கத்து வீடுகள் )பொறையார் ,லால்குடி அதிரை..தலை" யா கால் (லா)புரியவில்லை

அனைத்து சகோதரர்களின் வருகைக்கும் மிக்க நன்றி.

//இன்றைக்கு நோன்பு திறக்க மூன்று வீட்டு கஞ்சி //

குடுத்துவச்ச ஆள் சாஹுல் காக்கா...

தாஜுதீன் says
குடுத்துவச்ச ஆள் சாஹுல் காக்கா...

நன்றி சகோ தாஜுதீன் .எல்லோரும் இதைதான் சொல்கிறார்கள்

சகோ. தாஜூத்தீன் சொல்வது போல் சகோ. சாஹூல் 'குடுத்துவச்ச ஆளு'ண்டு சொல்றியெ...அப்போ 'வாங்கிவச்ச ஆளு' யாரு? ஒரு சமயம் நம்ம க்ரவுன் தஸ்தகீராக இருக்குமோ? என்னா ஆளே கண்மாசியாக் காணோம். என்னா தலெ நோன்புலெ புடிச்ச கெரக்கம் இன்னும் நிக்கலையா? வெரசனெ வாங்கெங்கெ செக்கடி கொளத்துக்கு குளிக்க போகனும்...பாத்து ஓவரா சத்தங்கித்தம் போட்டியெ கரையிலெ (மாடாக்குளி) வச்சிருக்கிற நம்ம வேட்டியெ பூராவும் பெரிசுஹெ அள்ளி தண்ணியிலெ வீசிடப்போவுதுவோ......இதமான குளிர்காற்றில் போடப்பட்ட உறை பனியாய் மேனியில் உறைந்த ஹமாம் சோப்பின் நறுமணம் இன்றும் மனதில் வீசுகிறது...உங்களுக்கும் அப்படித்தானே? 'பார்லா' அப்பாவிடம் குடும்ப பெயர் சொல்லி கூடிதலாக நோன்புக்கஞ்சி வாங்கிய நினைவுகள் இன்று ஏனோ வந்து அன்புத்தொல்லை செய்து செல்கின்றதோ?

அல்லாஹ் இப்புனித‌ ர‌ம‌ளானின் பொருட்டு ந‌ம‌க்கெல்லாம் நீண்ட‌ ஆயுசையும், நெற‌ப்ப‌மான‌ செல்வ‌த்தையும், சரீர சொஹத்தையும் தந்தருள‌‌ நாமெல்லாம் ஒருவ‌ருக்கொருவ‌ர் து'ஆச்செய்வோமாக‌. ஆமீன் யார‌ப்ப‌ல் ஆல‌மீன்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More