Aug 9, 2010

முடங்கிப்போன "முஸ்லீம்களின் பொருளாதாரம்"

இந்த பகிர்வை எழுத தூண்டுகோலாக இருந்த சகோதரர் யாசிர் அவர்களுக்கு நன்றி.
                                                                    
சரி விசயத்துக்கு வருவோம்

இதன் ஆச்சர்யம் எது என்று ஆராய்ந்தால் வரதட்சணையை அறிமுகப்படுத்திய முதல் துரோகியும் ..அதை ஒரு வேதவாக்குமாதிரி காப்பாற்றி வரும் சில "பெருசுங்க'ளும்தான். இந்த நடைமுறையில் அழிந்தது சில இளைஞர்களும்தான் என்றால் அது மிகை இல்லை. வரதட்சணை வாங்கியதன் மூலம் படிக்காமலும் , சம்பாதிக்காமலும்ஊர் சுற்றும் சில வெறும்பயல்கள் தனக்கு ஏதோ ஓரு திறமை இருக்கிறது என்பது போல் ஊரில் நடமாடுவது பிறகு பிழைக்கபோகும் நாட்டில் உண்மை உச்சந்தலையில் அடித்த மாதிரி பாடம் நடத்தும்போது தடுமாறுவதும் உள்ளங்கை நெல்லிக்கனி [ என்னா உதாரணம் இது ...வேறு கனி வைத்தால் கண்ணுக்கு தெரியாதா?]

முதலில் ஒரு 20 வருட வரதட்சணையின் பரிணாமத்தை பார்ப்போம்.

நிச்சய தார்த்தம் என 10 பேரை கூப்பிட்டு கேசரி / கொஞ்சம் மணிக்காரபூந்தி +டீ என இருந்த விசயம் இப்போது அரசியல் கட்சிக்கு ஆள் சேர்ப்பதை விட மோசமாகி 100 பேரை கூப்பிடுகிறேன் 200 பேரை கூப்பிடுகிறேன் மோட்டோர் சைக்கிள் / லேப் டாப் கம்ப்யூட்டர் [VCD/DVD ஓடுமா காக்கா என அப்ரானியா கேட்கும் மாப்பிள்ளைகளுக்கும்] / பால்குடம் / 10, 15 சகன் அல்வா / செப்புக்குடம் , சில்வர்குடம் / அமுல்ஸ்ப்ரே , பூஸ்ட், சீனி/ வாசிங் மெசின், பவுன் நகை , மணைக்கட்டு....இப்போது சொல்லுங்கள் இது எல்லாம் வரதட்சணையின் புதிய பரிணாமம் எப்படி முஸ்லிம்களிடம் ஒரு வைரஸ் மாதிரி நுழைந்திருக்கிறது???.

நிச்சயதார்த்ததுக்கும் இவ்வளவு பில்டப்பா என கேட்டால் நம்மை ஏதோ தொண்டி,நம்புதாலையிலிருந்து பிழைக்க வந்தவனை பார்ப்பது போல் பார்ப்பார்கள்.

ஒரு மனிதனின் மொத்த உழைப்பை ஒரே ஒரு நாளில் களவாட கண்டுபிடிக்கப்பட்ட விசயம் வரதட்சனை. இதற்கு பெயர் வேண்டுமானால் வட்டார வழக்குபடி பெயர் வைத்துக்கொள்ளலாம்..மொத்தத்தில் இது ஒரு நவீன திருட்டு.சமிபத்திய இஸ்லாமிய புரிந்துணர்வில் முன்பு வரதட்சினை வாங்கியவர்கள அதை திருப்பி கொடுக்கும் அல்லது கொடுக்க நினைக்கும் நிலை கண்டு சந்தோசம்.


நம் ஊர்ப்பக்கம் ஏன் முஸ்லீம்கள் தொடர்ந்தாற்போல் வசதியாக இல்லை.?

பெண்களுக்கு வீடு என்ற சிஸ்டம் பெண்ணை பெற்றவர்களின் பொருளாதார விசயத்தில் ஒரு பெரும் பள்ளத்தை உருவாக்குகிறது.

ஆனால் அந்த வீட்டை கட்ட ஒரு பொறுப்புள்ள தகப்பனின் பல கால உழைப்பும் வருமானமும் அதற்காகவே செலவாகிறது.வீடு என்பது வருமானம் தரும் சொத்தல்ல என்று தெரிந்தும் அதற்காக பெரும்பணம் / வங்கியில் நகைக்கடன் / உறவினர்களிடம் கைமாத்து [ ஆயிரக்கணக்கில்] செலவழிப்பது ஏன் என்பது தெரியவில்லை.வசதியாக வீடு கட்டி வாழ்வதில் தவறில்லை...ஆனால் வீட்டில் உசுப்பேத்தும் பெண்களின் ஆசைக்காக கடனாளியாகி பிறகு கடனை அடைக்க உங்கள் ஆரோக்கியத்தை இழந்து விடாதீர்கள்..அதற்க்கு பதில் உங்கள் வருமானத்தை பெருக்கும் வழிகளில் கவனம் செலுத்துங்கள்.

கல்யாணம் என்ற பெயரில் பெண்ணை பெற்ற தகப்பனை 'ஸ்பெசல் மொட்டை" அடிக்க நிறைய சம்பிரதாயங்களை நம் ஊரில் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.அதற்க்கக கல்யாணங்களை ஏதோ மகிழ்ச்சி இல்லாத விசயம் மாதிரி ஒரு விமரிசை இல்லாமல் நடத்தவும் என நான் பாடம் எடுக்கவில்லை. மாப்பிள்ளையை பெற்றவர்கள் கொஞ்சம் பெண்ணை பெற்றவர்களையும் நினைத்துப்பார்க்க சொல்கிறேன்

"எங்களுக்கா கேட்கிறோம் அவ்வ மவளுக்காதானே எல்லாம்" என்று தத்துவம் பேசும் ஞானிகளே ...எங்கே இருந்து வந்தது இந்த பெண்ணுக்கு வக்காலத்து..எங்கே போயிருந்தீர்கள் இவ்வளவு வருசமாய்?

வரதட்சணை வாங்குவது தவறு எனும் விழிப்புணர்வு வர முக்கியம் நாம் செய்ய வேண்டியது வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்த மாப்பிள்ளையின் பெயரையும் அவர்களது பெற்றோரின் பெயரையும் ஜும்மா பிரசங்கத்தின் போது ஒரு சிறு அறிவிப்பாக செய்யலாம். ஆடித்தள்ளுபடியையும் , நகைக்கடை/ புடவைக்கடை விளம்பரங்களையும் காது கொடுத்து கேட்கும் நம் ஊர்சனம் நிச்சயம் இதையும் கேட்கும்.

பெண்ணுக்கு வீடு என்பதால் நம் ஊரில் நிறைய புது வீடு இருக்கிறது, ஆனால் அதன் அஸ்திவாரத்துக்குள் கருங்கல்லும் சிமண்ட்டும் போடுவதற்க்கு பதில் நம் ஊர் ஆண்களின் வாழவேண்டிய இளமைக்காலமும் கனவுகளும் மொத்தமாக புதைக்கப்பட்டிருக்கிறது.

வரதட்சணை கேட்பதற்க்கு எதிர்காலத்தின் பொருளாதார சவால்களின் மீதான பயம் தான் காரணமா?..

நீங்கள் இந்த உலகத்தின் காற்றை சுவாசிக்குமுன் உங்களுக்கான தாய்ப்பாலை உருவாக்கி வைத்து இருக்கும் இறைவன் எப்படி உங்களை ஏமாற்றுவான்????

-- ஜாஹிர் ஹுசைன்

26 comments:

வரனுக்கு(தான்) தட்சனையாக வாங்கப்பட்டது இதுவும் வரன் பார்த்துக் கொடுக்கும் தரகர் அல்லது நபருக்குத்தான் கொடுக்கப் பட்டதாக அந்தக்கால வரலாறுன்னு படித்திருக்கிறோம், வெட்கக் கேடு இதுவே தரகரை / வரன் காட்டிய் நபரை புறந்தள்ளிட்டு அதனையும் பறித்துக் கொண்டு, நம் நபிவழிக்கு எதிர்மறையாக உலாவரும் இந்த வேடந்தாரிகளை / கொள்ளையர்கள் திருந்துவதற்கு இறைவனிடம் பிரார்த்திப்போம் இன்ஷா அல்லாஹ்..

சகோதரர் ஜாஹிர் தங்களின் வழக்கமான பாணியில் தூள் கிளப்பி இருக்கீங்க.

//ஒரு மனிதனின் மொத்த உழைப்பை ஒரே ஒரு நாளில் களவாட கண்டுபிடிக்கப்பட்ட விசயம் வரதட்சனை.//

சரியாக சொன்னீர்கள்.

இன்று அதீத மாற்றங்களை பார்க்கும் போது சந்தோசம் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் பெண்ணுக்கு வீடு என்ற சம்பிரதாயத்தை பார்க்கும்போது வேதனை, இந்த வகை நவீன திருட்டையும் ஒழிக்க ஒரு புரட்சி நம்மூரில் நடைப்பெற வேண்டும். இன்னும் இது ஒட்டிக்கொண்டிருக்கிறது.

* இது ஒரு நவீன திருட்டு

+ கூட்டு கொள்ளை

*கல்யாணம் என்ற பெயரில் பெண்ணை பெற்ற தகப்பனை 'ஸ்பெசல் மொட்டை"

தலையில் முடி இருக்கும் பணம் இருக்கும் இடம் மொட்டையாக இருக்கும் அதுவே 'ஸ்பெசல் மொட்டை"

*"எங்களுக்கா கேட்கிறோம் அவ்வ மவளுக்காதானே எல்லாம்"

இந்த தத்துவம் தெரியாத ஆல் கிடையாது ஊரில்

*வரதட்சணை வாங்குவது தவறு எனும் விழிப்புணர்வு வர முக்கியம் நாம் செய்ய வேண்டியது வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்த மாப்பிள்ளையின் பெயரையும் அவர்களது பெற்றோரின் பெயரையும் ஜும்மா பிரசங்கத்தின் போது ஒரு சிறு அறிவிப்பாக செய்யலாம்.

கல்யாண பத்திரிகைலும் அறியத்தரலாம்

*வரதட்சணை கேட்பதற்க்கு எதிர்காலத்தின் பொருளாதார சவால்களின் மீதான பயம் தான் காரணமா?..

நெத்தியடி

* நீங்கள் இந்த உலகத்தின் காற்றை சுவாசிக்குமுன் உங்களுக்கான தாய்ப்பாலை உருவாக்கி வைத்து இருக்கும் இறைவன் எப்படி உங்களை ஏமாற்றுவான்????

இதை உணர்ந்தால் நிறைய விசயங்களில் தெளிவு பிறக்கும்

dear Jahir nana ..thanks you have honored your word given to me by writing this wonderful and deeply touched article
//ஆனால் அதன் அஸ்திவாரத்துக்குள் கருங்கல்லும் சிமண்ட்டும் போடுவதற்க்கு பதில் நம் ஊர் ஆண்களின் வாழவேண்டிய இளமைக்காலமும் கனவுகளும் மொத்தமாக புதைக்கப்பட்டிருக்கிறது// what a touching line these are....hats off to you....thanks ton once gain

சகோ ஜாகிர் தங்களின் ஒவ்ஒஒரு வரியும் மானிட்டரில் இருந்து கண்களில் குத்தி மூளையை மூச்சி தினரவைத்து தண்டுவடத்தை தாக்கி மொத்த உடம்பையும் ஆட்கொண்டு விட்டது

உங்கள் தலைப்பு எங்கலை மிரட்டுகிறது முகப்பு படம் சிந்தனை செய்ய வைய்க்கிறது. நல்ல எழுத்தாளர்களை உருவாக்கும் இணையதள நண்பருக்கு வாழ்த்துக்கள்.

அதிரை அஷ்ரப்

சகோ ஜாகிர்
நீங்கள் ரயில்வே ஸ்டேஷனிலும் கஸ்டம்ஸ் ஆபீஸ் பாலன்காய் மரத்தடியிலும் படித்தது பரிட்சைகு என்றல்லவா நினைத்து இருந்தேன் ,நீங்கள் படித்தது ஊரையும் ஊரின் வாழ்க்கை முறையும் என்பது இபோதுதான் தான் புரிகிறது

என்னா சாஹுல் கூட்டல் பெருக்கல் எல்லாம் ஜரூரா போட்டிருக்கீங்க..கனிப்பா ? நம்மூரில் ஏதுங்க வரதட்சனை ??? சீர் பணம்(தாங்க) சும்மா யாரோ வரதட்சனைன்னு பேர் வச்சு பொரளி கெளப்பி விட்டாங்க... சீர் பணம்தான் வாங்குவாங்க.. இது அதிரையின் (இன்னும்)அழிக்கப்படாத சட்டமாமே !!!!!!!!

உள்ளூர் பெண் குமர்களை கரை சேர்க்க அயல் தேசத்தில் கரை ஒதுங்கிய அப்பாவி அதிரை ஆண் மகன். இவ்வ‌ள‌வு சொல்லாத்துய‌ரை அடைந்து வீடு க‌ட்டி, கும‌ர்க‌ளை க‌ரை சேர்த்த‌ பின் "எந்த‌ ஊரு வ‌ந்து பாரு" என்ற‌ ஏள‌னப்போக்கும், அவ‌ ம‌ரியாதையும் பெற்ற‌ பிள்ளைகள் (அ) சகோதரிகளிட‌மிருந்தே அவ‌னுக்கு கால‌ப்போக்கில் வ‌ந்த‌டைகிற‌து.

என‌வே ம‌றுல‌க‌த்தின் தீராத‌ இன்ப‌த்தை அடைய‌ ஆண் ம‌க்க‌ளைப்பெற்ற‌ பெற்றோர்க‌ளும், அவ‌ர்க‌ளுட‌ன் இருக்கும் பெரிய‌வ‌ர்க‌ளும் பெண் வீட்டாரை வாட்டி, வ‌த‌க்கி, வ‌றுத்தெடுப்ப‌தை உட‌னே நிறுத்துக்கொள்ள‌ வேண்டும். இது தொட‌ருமாயின் நாளை மறுமையில் இன்று வ‌றுத்தெடுக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் வ‌றுத்தெடுப்பார்க‌ள்....எச்ச‌ரிக்கை.. உல‌கில் கொம்புள்ள‌ ஒரு ஆடு, கொம்பில்லாத‌ ம‌ற்றொரு ஆட்டை தேவையின்றி முட்டித்த‌ள்ளினால் நாளை ம‌றுமையில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ கொம்பில்லாத‌ அந்த‌ ஆட்டிற்கு கொம்புக‌ள் கொடுக்க‌ப்ப‌ட்டு அது த‌ன்னை உல‌கில் முட்டிய‌ ஆட்டை அங்கு முட்டித்த‌ள்ளும் என்று நாம் ஹ‌தீஸை மேற்கோள்காட்டி பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌க்கேட்டிருக்கிறோம். என‌வே உலகில் அநியாய‌மாக‌ ப‌ழி வாங்கிய‌வ‌ர்க‌ள் ம‌றுமையில் ப‌ழி வாங்க‌ப்ப‌டுவார்க‌ள்.

இந்த சீர் தாங்க ஊரில் பல குடுபங்களில் சீற்றத்தை ஏற்படுத்துகின்றது . சீர் இல்லாத சிறப்பான ஊரை சீரமைக்க சீமையில் உள்ளவர்கள் ஒரு சீரான முடிவு எடுகனுமுங்க ஊரில் உள்ளவர்களும் சீரப்பான வரவேற்பு கொடுத்தால் அனைவரும் நெரப்பமா வாழலாம் .

இந்த சீர் தாங்க ஊரில் பல குடுபங்களில் சீற்றத்தை ஏற்படுத்துகின்றது . சீர் இல்லாத சிறப்பான ஊரை சீரமைக்க சீமையில் உள்ளவர்கள் ஒரு சீரான முடிவு எடுகனுமுங்க ஊரில் உள்ளவர்களும் சீரப்பான வரவேற்பு கொடுத்தால் அனைவரும் நெரப்பமா வாழலாம் .
------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இந்த வார்தைகளை சீர்தூக்கிப்பார்த்து,சீர்செய்ய புறப்படட்டும் கொம்பு சீவப்பட்ட நம் இளங்காளைகள்.சீரிய நோக்கம் என்றும் சிறப்பாய் முடியும் சில சிறாய்ப்புகள் ஏற்பட்டாலும் சிந்தித்து செயல் படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்.

அஸ்ஸலாமு அலைகும் .சகோஜாஹிர் எழுதினாலே தவறு செய்ய்யும் சிலருகு பகீருன்னு தோன்றும் நல்லதொரு ஆக்கம்.(வேறு கனியை குறிப்பிட்டிருந்தால்???? முன்னோர் சொல் வார்தையும் ,முது நெல்லிக்கனியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் அதனாலே உள்ளங்கை நெல்லிகனி என்று வத்ததோ???)(ஒரு மனிதனின் மொத்த உழைப்பை ஒரே ஒரு நாளில் களவாட கண்டுபிடிக்கப்பட்ட விசயம் வரதட்சனை.மிகச்சரியான சொல்லாடல் வெல்டன் சகோதரரே!)மரணிக்கும் முன்பே சரிசெய்யாவிட்டால் மறுமையில் உன் நிலை என்ன?சிந்தித்து செயல் பட்டால் சுவர்கம் இல்லையெனில் கலமெல்லாம் நரகம்தான் சிந்திபீராக.

மூத்தோர் சொல் வார்தை என்று திருதிக்கொண்டு படிக்கவும்(மன்னிக்கவும்).

தீர்வென நான் நினைப்பது ........

அஸ்ஸலாமு அலைக்கும் ....
சகோ .நெய்னா,சகோ .ஜாகிர் இருவரின் ஆதங்கம் நாம் எல்லோர் உள்ளத்திலும் காலங்காலமகா அடைத்து வைத்த வேதனையின் வெளிப்பாடு...இருந்தாலும் நடந்துவிட்ட தவறுகள் அனைத்திற்கும் நமக்கும் மிகப்பெரிய பங்குள்ளதை
யாரும் மறுக்க முடியாது .....

(பல சம்பவங்கள்) ....கல்யாணத்திற்கு முன் ...திடீரென மாப்பிள்ளை வீட்டார் முழு வீடும் வேணும்,பணம் கூடுதலாக வேணும் இல்லையென்றால் திருமணம் நடக்காது என கோழைதனமாக அகங்கார பிச்சை
கேட்பார்கள் .நிலை குலைந்துதான் போவார்கள் பெண் வீட்டார் . .அநியாயத்தின்
உச்ச நிலை இதுதான் .

வெளிநாட்டு வாழ்கையின் அவலங்களை இதே தளத்தில் பல்வேறு வடிவங்களாக பதிவுகள் பதியப்பட்டன .
தினம் தினம் மன அவஸ்தைக்கு ஆளாகி பெரும்பாடுபட்டு சம்பாதித்ததை ஊரில்,தெருவில்,சொந்தத்தில்
படிக்காதே முட்டாள்களுக்கும் ராஜ கம்பளம் விரித்து கல்யாணம் செய்து வைக்கிறோம் ..இதில் மாப்பிளையின்
ஒரே தகுதி ஊரில் ,தெருவில் ,சொந்தத்தில் பிறந்தது மட்டுமேயன்றி வேற எந்த தகுதியும் அவனுக்கு இருக்கிறதா ,
இல்லையா என்று நிச்சயமாக நம்மில் பெரும்பாலானோர் பார்ப்பது இல்லை .

நம்ம ஊரில் ஒருத்தனுக்கு ஒன்றுக்கும்மேற்பட்ட பெண் குழந்தைகள் இருந்தால் போதும் ......அவ்வுளவுதான்
குமராச்சு சீக்கிரம் எங்கயாவது புறப்பட்டு போ ..என வீட்டில் உள்ள பெரியவர்கள் மட்டுமல்ல பக்கத்து,
எதிர் வீட்டில்லுளவர்கலேல்லாம் அவனை விரக்தியின் விளிம்பு நிலைக்குத தள்ளிவிடுவார்கள் ..
அவனுடைய இனிமையான நாட்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாக புதைக்கப்படும் ..
சிறிய வேலையில் நம் நாட்டில் அவன் இருந்தாலும் ....அக்கம்பக்கதோடு ஒப்பிட்டு அவனை
நிம்மதி இழக்க வைத்து ..அவனே நாட்டை விட்டு ஓடிவிடுவான் ..

நாம் வாழ்கையை அளவிடும் முறை சரியில்லை ..
பொருளாதாரத்தை மட்டுமே குறிக்கோளாக வைக்கிறோம் ..
நம்மை நாமே சுய பரிசோதனை செய்வது அவசியம் ...

இந்த சோகம் ஏன் ?...பெண்ணிற்கு வீடு கொடுப்பதும் ,ஊரில் மட்டுமே கல்யாணம் முடிப்பதுதான் ..
அது என்ன சுன்னத்தா இல்ல கட்டாய கடமையா ?
வெளி ஊரில் உள்ள முஸ்லிம்கள் கலிமா சொல்லவில்லையா ?
அவர்கள் மன நிறைவுடன் வாழ்கை நடத்த வில்லையா ?
கொஞ்சம் மனதை விசாலமாக்கவோம்....
புது சொந்தங்களை வெளி ஊரில் தேடுவோம் ..
சக முஸ்லிம்களை அல்லாஹுவிர்க்கு பயந்து மதிப்போம் ...
மரியாதை கொடுப்போம் ...மரியாதை பெறுவோம் ..
நிஜ வாழ்க்கையை வாழ முயற்சிப்போம் ...
நம் குலபெருமைகள் பேசி ப பேசி பெருமை அடிப்பதை மறப்போம் ....
சிறு வயதில சம்மந்தம் பேசுவதை தவிர்ப்போம் ...

மேற்சொன்ன விசயங்களை செய்து காட்டி ,
நம்மை நாமே அடைத்து வைத்துள்ள மாய கண்ணாடியை உடைத்து ,
புதிய பொன்சாமரம் வீசிய (வெளி ஊரில் சம்மந்தம் )
கட்டபிள்ளையார் வீட்டு புஹாரி காக்கவை இந்த நேரத்தில் மனதார பாராட்டுவோம்......
(எனக்கு தெரிந்த வகையில்).......
அதே சமயம் நம் ஊரில் நிஜ மகர் கொடுத்து வீடும் வாங்காமல் திருமணம் செய்த
சில இளைங்கர்களையும் பாராட்டுவோம் ...

சபாஷ் அப்துல் ரஹ்மான் ! //அதே சமயம் நம் ஊரில் நிஜ மகர் கொடுத்து வீடும் வாங்காமல் திருமணம் செய்த சில இளைங்கர்களையும் பாராட்டுவோம். //

நபிவழித் திருமணங்கள் (மஹர் தொகை பெண்ணிடமே கேட்டு அதனை அப்படியே கொடுத்து) செய்த எத்தனையோ நல்லுள்ளம் கொண்ட இளைஞர்களையும் அவர்களுக்கு உறுதுனையாக இருந்த பெற்றோரையும் வாழ்த்துவோம் பாராட்டுவோம்.

//அதே சமயம் நம் ஊரில் நிஜ மகர் கொடுத்து வீடும் வாங்காமல் திருமணம் செய்த சில இளைங்கர்களையும் பாராட்டுவோம். //

சகோதரர் அப்துல் ரஹ்மான் பாரட்டியது போல் நாமும் பாராட்டுகிறோம்

வெளி ஊரில் உள்ள முஸ்லிம்கள் கலிமா சொல்லவில்லையா ?
அவர்கள் மன நிறைவுடன் வாழ்கை நடத்த வில்லையா ?
கொஞ்சம் மனதை விசாலமாக்கவோம்....
புது சொந்தங்களை வெளி ஊரில் தேடுவோம் ..
சக முஸ்லிம்களை அல்லாஹுவிர்க்கு பயந்து மதிப்போம் ...
மரியாதை கொடுப்போம் ...மரியாதை பெறுவோம் ..
நிஜ வாழ்க்கையை வாழ முயற்சிப்போம் ...



மிக சரியாக சொன்னீர்கள் அப்துல் ரஹ்மான்

நாம் தெரு விட்டு தெரு மாப்பிள்ளை எடுக்கவே நமக்கு இன்னும் மனபக்குவம் வரவில்லை .நாம் 5 வேலை தொழுவதின் அர்த்தாம் என்ன நாம் அனைவரும் சமம் என்பதுதான் நாம் 5 வேலை தொழுதாலும் நமக்கு கலிமா சொன்ன அனைவரும் சமம் என்ற எண்ணம் இன்னும் வரவில்லை

அது எப்படி சகோ ,ஜாகிர் மற்றும் நெய்னவும் ஒரே மேட்டரை கையில் எடுத்தார்கள் (இதற்கு பெயர் தான் டெலிபதி என்பதா?)

//நாம் தெரு விட்டு தெரு மாப்பிள்ளை எடுக்கவே நமக்கு இன்னும் மனபக்குவம் வரவில்லை//

அப்படின்னா பொண்ணு மட்டும் எடுத்துக்கிறோமா ? சாஹுல் மணம் முடிப்பவர்களின் மனமாற்றத்தை விட ஆண்மகனையும் பெண் மக்களையும் பெற்றவர்களுக்குத்தான் மனமாற்றம் வரவேண்டும் அதோடு உறுதுணையாக இருக்கும் உறவினர்களும் அதற்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும், கண்டிப்பாக சுற்றியிருக்கும் உறவினர்கள் பச்சைக் கொடி அசைத்தால் பெற்றோர் மனமிறங்கி இந்த மாற்றத்தை அங்கீகரிப்பார்கள் !

இங்கே எழுத களம் கிடைத்திருக்கிறதே என்பதற்காக நான் இதனை எழுதவில்லை நம் எல்லோரின் ஆதங்கமும் இதுவே.

மணமுடிக்கவிருப்பவர்கள் தயாராக இருந்தாலும் பெற்றெடுத்தவர்கள் அல்லது அவர்களைச் சார்ந்தவர்களின் அங்கீகாரம் கோலோச்சுகிறது நமதூர் திருமணங்களில் இதனை யாராலும் மறுக்க முடியாது ! மாற்றம் வேண்டும் என்று இங்கே எழுதுவர்களும், வாசிப்பவர்களும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தாலும் நமக்கென்று வரும்பட்சத்தில் எத்தனை பேர் உடைத்தெறியும் முடிவை எடுத்திருப்பார்கள் ? மனதில் ஓரத்தில் இருக்கும் இந்த இறுக்கத்தைதான் தளர்த்த வேண்டும், மாற வேண்டும் இன்ஷா அல்லாஹ்.

நன்றி..... மிகுந்த ஆர்வத்துடன் கருத்துக்களை பதிந்த சகோதரர் சாகுல் , யாசிர் , நெய்னா முஹம்மது , அபுஇப்ராஹிம்.தாஜுதீன் , Crown , Harmy

To Bro: Harmy ....

உங்கள் தீர்வுகள் உண்மையிலேயே மிகவும் பிரயோஜனமாகவும் , மார்க்கத்தில் சொல்லாத , கொஞ்சம் கூட லாஜிக் இல்லாத வரதட்சணை ஒழிப்புக்கு வழிவகுப்பது நிச்சயம். நீங்களும் ஆர்டிக்கில் எழுதி வெளியிடுங்கள் அதற்க்குறிய எல்லா அம்சமும் உங்கள் எழுத்தில் இருக்கிறது.


To Bro Shahul / Bro Abu Ibrahim
தெரு விட்டு தெரு சம்பந்தம் விசயமாக...இதற்க்கு காலமும் , விழிப்புணர்வும் தேவை ..ஏதோ ஒன்றிரன்டு பேர் சொல்லிவிடுவதால் மாறி விடாது. இதில் பெற்றோர்கள் / பெரியோர்கள் சம்மதம் எல்லாம் சம்பந்தபடும். பெரியவர்கள் பெரும்பாலும் வின்டோ 95 லும் / இளைஞர்கள் வின்டோ 7 லும் சிந்திப்பதால் சின்க்றொனைஸ் ஏற்படுத்த சிரமம் இப்போதைக்கு.


சகோதரர் Naina Mohamed நானும் ஆச்சர்யப்பட்டேன் எப்படி ஒரே விசயத்த நாம் எழுதினோம் என்று..Bro Shahul Also noted that.


இந்த விசயம் எழுத நான் தான் கொஞ்சம் பயந்தேன்...இது வரை வரதட்சணை வாஙியவர்கள் " ஏன் உனக்கு வேறெ சப்ஜக்ட்டே கிடைக்கலையா" என என்னை கேட்க்கவில்லை'

மற்றபடி Bro.Shahul எழுத்தில் கஸ்டம்ஸ் / ரயிலடி / அந்த பாலங்கா மரம் எல்லாம் ஒருமுறை என் கண்களுக்கு தெரிந்து அந்த உப்புக்காற்றை சுவாசித்து , தூரத்து ரயில் வரும் சத்தம் கேட்டு , மீன் லோடு சைக்கிள் மிதிப்பவர்களின் பிரில் விட்ட சைக்கிள் சத்தம் கேட்டு ...நம்ம வாழ்க்கையிலும் VCRல் உள்ள மாதிரி ஒரு REWIND BUTTON இருந்தால் தேவலாம்ல என தோன்றியது.

ZAKIR HUSSAIN

நன்றி..... மிகுந்த ஆர்வத்துடன் கருத்துக்களை பதிந்த சகோதரர் சாகுல் , யாசிர் , நெய்னா முஹம்மது , அபுஇப்ராஹிம்.தாஜுதீன் , Crown , Harmy

To Bro: Harmy ....

உங்கள் தீர்வுகள் உண்மையிலேயே மிகவும் பிரயோஜனமாகவும் , மார்க்கத்தில் சொல்லாத , கொஞ்சம் கூட லாஜிக் இல்லாத வரதட்சணை ஒழிப்புக்கு வழிவகுப்பது நிச்சயம். நீங்களும் ஆர்டிக்கில் எழுதி வெளியிடுங்கள் அதற்க்குறிய எல்லா அம்சமும் உங்கள் எழுத்தில் இருக்கிறது.


To Bro Shahul / Bro Abu Ibrahim
தெரு விட்டு தெரு சம்பந்தம் விசயமாக...இதற்க்கு காலமும் , விழிப்புணர்வும் தேவை ..ஏதோ ஒன்றிரன்டு பேர் சொல்லிவிடுவதால் மாறி விடாது. இதில் பெற்றோர்கள் / பெரியோர்கள் சம்மதம் எல்லாம் சம்பந்தபடும். பெரியவர்கள் பெரும்பாலும் வின்டோ 95 லும் / இளைஞர்கள் வின்டோ 7 லும் சிந்திப்பதால் சின்க்றொனைஸ் ஏற்படுத்த சிரமம் இப்போதைக்கு.


சகோதரர் Naina Mohamed நானும் ஆச்சர்யப்பட்டேன் எப்படி ஒரே விசயத்த நாம் எழுதினோம் என்று..Bro Shahul Also noted that.


இந்த விசயம் எழுத நான் தான் கொஞ்சம் பயந்தேன்...இது வரை வரதட்சணை வாஙியவர்கள் " ஏன் உனக்கு வேறெ சப்ஜக்ட்டே கிடைக்கலையா" என என்னை கேட்க்கவில்லை'

மற்றபடி Bro.Shahul எழுத்தில் கஸ்டம்ஸ் / ரயிலடி / அந்த பாலங்கா மரம் எல்லாம் ஒருமுறை என் கண்களுக்கு தெரிந்து அந்த உப்புக்காற்றை சுவாசித்து , தூரத்து ரயில் வரும் சத்தம் கேட்டு , மீன் லோடு சைக்கிள் மிதிப்பவர்களின் பிரில் விட்ட சைக்கிள் சத்தம் கேட்டு ...நம்ம வாழ்க்கையிலும் VCRல் உள்ள மாதிரி ஒரு REWIND BUTTON இருந்தால் தேவலாம்ல என தோன்றியது

/// பெரியவர்கள் பெரும்பாலும் வின்டோ 95 லும் / இளைஞர்கள் வின்டோ 7 லும் சிந்திப்பதால் சின்க்றொனைஸ் ஏற்படுத்த சிரமம் /// ஜாஹிர் மெய்யாலுமே ரசித்தேன் :)

இந்த மாதிரியான compatibility தொல்லைகளை களைய நிறைய கில்லாடிகள் நம்மிடையே இருக்காங்களே... யோசிப்பா(ய்)ங்களா !! :))

பழைய மேட்டராக இருந்தாலும் நான் திடீரென யோசித்து எழுதி அதிரை நிருபரில் வெளியான பின்பு தான் பார்த்தேன். சகோ. ஜாஹிரும் அதே மேட்டரை வேறொரு தலைப்பிட்டு அருமையாக எழுதி இருந்ததை எண்ணி வியந்தேன். நாம் சொல்ல வந்த சேதி இங்கு என்னவெனில் நிறைய பேரை அன்றாடம் பார்த்திருக்கிறோம். பெண் வீட்டாரிடம் இட ஒதுக்கீட்டை (தனி வீடு) இறுக்கிப்பிடித்து வாங்கியவர்கள். இன்று பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி அவஸ்தைப்படுவதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம். இருந்தும் ஆண் மகனைப்பெற்றவரின் வீட்டில் திருமணம் வரும் பொழுது மட்டும் என்னவோ கண்கள் தானாக கட்டப்பட்டு அதே பழைய பல்லவியைப்பாடி பெண் வீட்டினரிடம் கவுரவப்பிச்சை எடுப்பதில் கொஞ்சமும் தயங்குவதில்லை. முஸ்லிம்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு வேண்டுமென போராடுகிறோம். முழு இடத்தையும் ஒதுக்கிக்கொடுக்கும் கொடுமை நம்ம ஊரில் தாங்க நடக்குது. எத்தனையோ ஆண்மகன்கள் முழு வீட்டையும் பெண் வீட்டினரிடமிருந்து கசக்கிப்பிழிந்து எழுதி வாங்கி விட்டு பிறகு வீட்டின் கதவிற்கு ஒரு 'கொலிக்கி' வாங்கி மாட்டக்கூட காசு இல்லாமல் திண்டாடும் எத்தனையோ ஆண்கள் இன்றும் நம்மூரில் இருக்கத்தான் செய்கிறார்கள். சகோ. அப்துல் ரஹ்மானின் ஆதங்கம் நம் அனைவரின் வழிமொழிதலுக்குரியது.

கொடுக்க வேண்டிய தொந்தரைவுகளை பெண் வீட்டினருக்கு சூழ்நிலையை பயன் படுத்தி கொடுத்து விட்டு பிறகு "அவ்வொ புள்ளைக்குத்தானே எழுதிக்கொடுக்குறாஹெ" என்ற பவட்டு வார்த்தையில் நமக்கு சாயம் பூச நினைக்கிறார்கள். போலிச்சாயங்கள்/வேசங்கள் வெளுத்துப்போய் நாளை படைத்தவன் முன் நிராயுத பாணியாக நிற்க இருப்பதை மறந்தவர்களாய்.

//முஸ்லிம்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு வேண்டுமென போராடுகிறோம். முழு இடத்தையும் ஒதுக்கிக்கொடுக்கும் கொடுமை நம்ம ஊரில் தாங்க நடக்குது//

மேல் உள்ள வார்த்தகளை படிக்கும்போது நகைச்சுவையாக இருந்தாலும், பெண்ணுக்கு வீடு என்ற கிழட்டு சம்பிரதாயத்துக்கு போட்ட சரியான சாட்டை அடி.

//முழு வீட்டையும் பெண் வீட்டினரிடமிருந்து கசக்கிப்பிழிந்து எழுதி வாங்கி விட்டு பிறகு வீட்டின் கதவிற்கு ஒரு 'கொலிக்கி' வாங்கி மாட்டக்கூட காசு இல்லாமல் திண்டாடும் எத்தனையோ ஆண்கள் இன்றும் நம்மூரில் இருக்கத்தான் செய்கிறார்கள். //

சரியாக சொன்னீர்கள், கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம் பல குடும்பங்களில். இப்படி இருப்பவர்களை பார்த்தும் இன்னும் திருந்த மாட்டேங்கறாங்களே....

// எத்தனையோ ஆண்மகன்கள் முழு வீட்டையும் பெண் வீட்டினரிடமிருந்து கசக்கிப்பிழிந்து எழுதி வாங்கி விட்டு பிறகு வீட்டின் கதவிற்கு ஒரு 'கொலிக்கி' வாங்கி மாட்டக்கூட காசு இல்லாமல் திண்டாடும் எத்தனையோ ஆண்கள் இன்றும் நம்மூரில் இருக்கத்தான் செய்கிறார்கள்///

வேதனையான விஷயம் சொல்லித்தான் ஆகனும், MSM(n)சொன்னதுபோல் அடாவடியாக திருமணத்திற்கு முன்னர் தனி வீட்டை எழுதுவாங்கி திருமணம் முடிந்த சில வருடங்கள் கழித்து ஆண்மகன் வெளிநாடு சென்றுவிட்டான் பெண்மட்டும் தனிவீட்டில் வேறு வழியில்லாமல் உம்மா வீட்டிற்கு சென்று தங்கிவிட்டதால் அந்த வீடு பூட்டிதான் கெடக்கிறது... அந்த வீட்டை கட்டியெழுப்ப எப்படியெல்லாம் கஷ்டப்பட்டனர், அந்தப் பெண்னுடைய சகோதரர்களின் இளமை வளைகுடா காற்றிலும் கடற்கரையோரங்களிலும் கரைந்தது நினைத்தால் விம்முகிறது மனம்.

சரி சரி ஒரு சேஞ்சுக்கு டாக்டர் ஒருத்தர் புதுசா ஹாஸ்பிடல் கட்டி அதற்கான விளம்பரத்திற்கு நல்ல நச்சுன்னு வாசகம் தேடினார் அதற்கு ஒருவர் எழுதிக் கொடுத்த வாசகம். "நோயாளியை கூட்டிகிட்டு வாங்க திரும்பி போகும்போது தூக்கி கிட்டு போங்க" :)

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More