Nov 16, 2010

ஊருக்கும், நமக்கும் நல்ல விசயம்


 
நேற்றும் இன்றும் டெலிபோனில் நமது சொந்த பந்தங்களுடனும், நண்பர்களுடனும் ,மற்றும் நமது மாவட்டத்தில் ஆட்சியில் [ கலெக்டர் & அவரது அலுவலகம்] இருக்கும் சிலருடனும் , பேச வாய்ப்பு கிடைத்தது. இதில் நெத்தியடியாக சிலர் சொன்னது [ முக்கியமாக உங்கள் ஊரில் திறமையானவர்கள் ரொம்ப அதிகம் ..ஒற்றுமை இருந்தால் உங்கள் ஊர் ஒரு எடுத்துக்காட்டுக்குறிய ஊராக மாறி விடும்...'].நம்மிடம் ஒற்றுமை இல்லை என்பது கலெக்டர் அலுவளகம் , செக்ரடேரியட், இன்னும் கொஞ்சம் போனால் பாராளுமன்றம் வரை தெரிந்து இருக்கிறது..எப்படி ஊரில் உள்ள அடிப்படை வசதிகளில் மிக கடைசி நிலையில் இருக்கிறது என்பது மட்டும் அவர்களுக்கு தெரியவில்லை...பதில் மிக சுலபம் ....”ஓற்றுமை” நம்மிடம் இல்லை.

ஊர் சம்பந்தமாக ஒரு நிகழ்வு நடக்க உள்ளது. அதில் ஊரில் உள்ளவர்கள் கலந்து கொண்டால் நிச்சயம் நமது ஊரில் நல்ல மாற்றங்களை கொண்டு வர முடியும். முதலில் நிகழ்வை சொல்லிவிடுகிறேன்.

18-11-2010 [வியாழன்] காலை 10.00 மணிக்கு - சிஃபா மருத்துவமனை வளாகத்தில்.

இதை நடத்துவது அதிராம்பட்டினம் நகர வளர்ச்சி கழகம். Adirampattinam Rural Development Association - ARDA [இலங்கை தமிழில் ' அதிராம்பட்டின நலனபிவிருத்தி சம்மேளனம்.... மொழிபெயர்ப்பில் தவறு இருப்பின் இருக்கவே இருக்கிறார்கள் 'சகோதரர் அதிரை அஹ்மது, சகோதரர் கிரவுன்...' உங்கள் தமிழறிவு பொறாமைப்பட வைக்கிறது]

சரி ஏன் அனைத்து தெருவாசிகளும் கலந்து கொள்ளவேண்டும் என்கிறேன். நமது ஊரின் சுத்தம் மிகக்கேவல நிலைக்கு போய் விட்டது. ஆப்பிரிக்க நாடுகளை மிஞ்சும் கொசுக்கள். ஒரு மழை பெய்தாலே தஞ்சாவூரிலும் / பட்டுக்கோட்டையிலும் ஆஸ்பத்திரி டோக்கனுக்கு பிச்சை எடுக்காத குறையாக கெஞ்ச வேண்டிய நிலை. ஆயிரக்கணக்கில் மருந்து செலவு. இப்படி நமது வருமானத்தில் பெரும் பங்கை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். நம்மிடம் இந்த பிரச்சினைகள ஒழித்து கட்ட ஒற்றுமையுடன் சில செயல்களை சொன்னால் ஆயிரத்துஎட்டு பிரிவினை வாதங்கள்...

உங்களின் ECG யில் ஒரு சின்ன மாற்றம், ரத்த கிரியேட்டினைனில் கொஞ்சம் அதிகம், எப்போதும் ஒழுங்கா தூங்கும் நீங்கள் இரவில் ஒரு 3 ணிநேரம் தாமதமாகத்தான் தூங்க முடிகிறது போன்ற குறைகள் ... நீங்கள் எந்த தெருவை சார்ந்திருந்தாலும், எந்த கரை வேட்டி உடுத்தி, எந்த இயக்கதை சார்ந்திருந்தாலும் உடன் தேவை உங்களுக்கு “மருத்துவ சேவை..." பல சமயங்களில் நம் ஊர் காரர்கள் நம்மிடம் ஆஸ்பத்திரி வசதிகள் இருந்தும் [சில முன்னேறங்கள் செய்ய முடியாமல் இருப்பதால்] நம் ஊர் ஆட்களை ' ஆரம்ப கால அவசர சிகிச்சை' [Initial Emergency Treatment- செய்யாமல் [ இதய நோயாளிகளை ] பட்டுக்கோட்டைக்கும் / தஞ்சாவூருக்கும் காரில் கொண்டுபோய் 'எவ்வளவோ முயற்சி செய்தோம்... ப்ச்... ஒரு ஒரு மணிக்கு முன்னாலே கொண்டு வந்திருந்தா..., போன்ற பழைய வசனங்களை கேட்டு விட்டு... வழக்கம் போல் நம் ஊர் பள்ளிவாசல்களில் இதுவரை மைக்கை சரியாக “ஆன்’ (ON) பன்னதெரியாதவர்களை விட்டு "மரண அறிவிப்பு' சொல்ல பிசியாகிவிடுகிறோம்.

ஊரின் இப்போதைய நிலை என்ன தெரியுமா.... 70% அதிராம்பட்டினத்து மக்கள் World Helath Organisation [ WHO] குறிப்பிடும் fasting blood sugar level , Hba1C அளவை தாண்டி விட்டார்கள்..இதன் தாக்கம் பற்றி நான் எழுதினால் சில சர்க்கரை நோயாளிகள் கடுப்பில் எனக்கு வஞ்சினை வைத்தாலும் ஆச்சர்யம் இல்லை. மற்றும், இப்போது நமது நாட்டில் பரவி வரும் இந்த வைரஸ் NDM-1, New Delhi metallo-beta-lactamase-1 எந்த விதமான ஆன்டிபயோடிக்கும் 'பெப்பே' காட்டிவிடும்...விளையாட்டாக கருத வேண்டாம் சயனைட் மாதிரி மரணம் நிச்சயம்.,இந்த வைரஸில் பாதிக்கப்படுவதிலும் நம் உலகத்தை இறைவன் காப்பாற்ற வேண்டும். எல்லாவிதமான பயோ லேப்களிலும் இதற்கான ஆராய்ச்சி நடக்கிறது. இறைவன் அந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு உடன் மருந்தை கண்டுபிடிக்கும் இல்ஹாமை தர வேண்டும் என வேண்டிக்கொள்வோம். நம்மிடம் 'நான் அதிராம்படினத்தான்' என பெருமை பட்டுக்கொள்ள நிறைய விசயம் இருந்தாலும்

· சிஃபா மருத்துவமனை முன்னேற்றம் ,

· மார்க்க அறிவுடுன் கூடிய நல்ல கல்வி [ பள்ளிக்கூடம் / கல்லூரி] ,

· பைத்துல்மால் ,

· ' ஊரின் சுத்தம் பேணுதல் ,

· கடலைமிட்டாய் மாதிரி உள்ள அந்த காலத்து ரோடுகளை சீர்படுத்துதல்,

· தெரு விளக்குகள் இல்லாமை,

· ஊரையே மிரட்டும் குப்பை பிரச்சினை,

போன்ற விசயங்களில் முதல் முயற்சியை எடுத்து வைக்க வெகு காலமாக தவறி விட்டோம்.

குறைகளை பார்க்கவேண்டாம்... பெரிய பெரிய கம்பெனிகளில் C.E.Oக்கு ஏன் அவ்வளவு உயர்ந்த சம்பளம்... அவன் கம்பெனியின் குறைகளை நிவர்த்தி செய்பவன். குறை சொல்லிக்கொண்டிருப்பவன் அல்ல.

பெரும்பாலும் குறை சொல்வதை குலத்தொழிலாக செய்யும் சிலரை பார்த்திருக்கிறேன்... இவர்களின் குறை 'கூட்டத்துக்கு போனேன் கேசரிக்கு நெய் பத்தாது , டீ சூடா இல்லை , என்னை V.I.P சீட்டில் உட்கார வைக்கவில்லை என்று 'வேக்காட்டு' தனமாக குறை சொல்வார்கள்.

சரி இதைப்படிப்பவர்கள் என்ன செய்யலாம்..சிஃபா மருத்துவமனையில் நடக்கபோகும் நிகழ்வு நம் ஊருக்கு நல்லது செய்யும் விசயம்... ஊருக்கு பெரு நாள் வாழ்த்து சொல்ல அழைப்பவர்கள் அப்படியெ வீட்டில் இருக்கும் ஆண்களை இதில் கலந்து கொள்ள சொல்லளாம், அதிராம்பட்டினத்தில் இருப்பவர்கள் நிச்சயம் கலந்து கொண்டு உங்கள் ஆலோசனைகளை எடுத்து சொல்லளாம். [ இது எல்லா தெருவுக்கும் / முஹல்லாவுக்கும் பொருந்தும்]

இந்தியாவின் சுதந்திர போராட்ட விதை தென் ஆப்பிரிக்க ரயில்வேஸ்டேசனில் விதைக்கப்பட்டது. நம் ஊர் சிறக்க ஏதாவது விதைப்போமே...இப்போதே...

--ZAKIR HUSSAIN

Note:- இதைப்படிப்பவர்களின் கமென்ட்ஸ்யையும் நான் நிகழ்வுக்கு முன் ஊருக்கு அனுப்பிவிடுகிறேன் [ இன்ஷா அல்லாஹ்]

12 comments:

ஜாஹிர் ஹுஸைன் காக்கா நல்ல தகவல் சொன்னீர்கள்.சுள்'லென்றும் ரொம்ப அழகாகவும் சுவைபடவும் இவ்வழைப்பை அமைத்திருக்கிறீர்கள். கலந்து கொண்டு பயன்பெற வேண்டியது நமது கடமையும் கடப்பாடுமாகும்!
//இந்தியாவின் சுதந்திர போராட்ட விதை தென் ஆப்பிரிக்க ரயில்வேஸ்டேசனில் விதைக்கப்பட்டது. நம் ஊர் சிறக்க ஏதாவது விதைப்போமே...// நல்ல வித்து

இன்று(16/11/2010) தியாகத் திருநாள் தொழுகையை முடித்ததும் நான் வாசித்த முதல் பதிவு.
கொஞ்சமேனும் தியாகம் செய்தால் எதையும் சாதிக்கமுடியுமென்ற செய்தியை இந்த தியாக திருநாள் செய்தியாக எடுக்கொள்கிறேன்.

(இன்னக்கி பெருநாள் கொண்டாடியாச்சுன்னு சொல்ல இவ்வளவு சுத்தானு கேட்ட தோனுதா? ஆமாங்க. உலகம் முழுவதும் ஒரே பெருநாள்,நோன்பு என்பதில் முழு உடன்பாடே.

சில இடங்களில் நாளை17/11/2010 பெருநாள் இன்னும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுள்ளவர்கள் இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்து அடுத்த நாள் பெருநாள் 'ஏற்பாடு' செய்திருக்கிறார்கள்.
எப்ப யார் கொண்டாடினாலும் அனைவருக்கும் எமது தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்!

'அதிராம்பட்டினம் நகர அபிவிருத்தி கழகம்' இதுவும் சரியா?

ஜாஹிர் காக்கா : ஆழ்ந்த அக்கறையுடன் கூடிய உங்களின் உணர்வுகள் ஆதங்கம் ஒவ்வொரு அதிரைப்பட்டினத்து வாசிகளுக்கு வைத்திருக்கும் குட்டு, நாம் இதுமாதிரியான நல்ல தருனங்களை தவறவிடாமல், அதே நேரத்தில் நான் / நீ என்றும் குறைகானும் போக்குகளை தூக்கி எறிய செய்துவிட்டு மேல் சொல்லியிருக்கும் நலனுக்காக கூடும் நாளில் (வேட்டி மடித்து)கச்சல் கட்டாமல், விரல்கள் நீட்டாமல், முனுமுனுக்காமல், தங்களின் பங்கிற்கு நல்ல ஆலோசனைகளை தெரிவிக்கலாம், நல்ல திட்டங்கள் முன்வைத்தால் ஆதரித்து உற்சாகமும் ஊட்ட வேண்டும், அதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் நம் அனைத்து முஹல்லா வாசிகள்.

// குறைகளை பார்க்கவேண்டாம்... பெரிய பெரிய கம்பெனிகளில் C.E.Oக்கு ஏன் அவ்வளவு உயர்ந்த சம்பளம்... அவன் கம்பெனியின் குறைகளை நிவர்த்தி செய்பவன். குறை சொல்லிக்கொண்டிருப்பவன் அல்ல. //

இந்தச் சூழலை பெரும்பாலான அதிரைப்பட்டின நல்லுங்களும் நல்ல பணியில் இருப்பவர்கள் அனுபவதித்த உண்மை - இதனையே சமுதாய நோக்கோடும் செய்யலாமே !

// Hba1C அளவை தாண்டி விட்டார்கள்..இதன் தாக்கம் பற்றி நான் எழுதினால் சில சர்க்கரை நோயாளிகள் கடுப்பில் எனக்கு வஞ்சினை வைத்தாலும் ஆச்சர்யம் இல்லை.//

கவலையே வேண்டாம் இந்த வியாதியை (வஞ்சினை) ஈஸியா ஒரு கட்டுரை போட்டு எடுத்திடலாம், ஆனால் சக்கரை வியாதியை எத்தனை கட்டுப் பாடுகள் போட்டாலும் தடுத்திட முடியவில்லையே சிந்திப்பார்களா ?

அஸ்ஸலாமு அலைக்கும்.வழக்கம் போல் காலர தூக்கிவிட்டுகிட்டு ரிலாக்ஸா,ஹாஸ்யமா ஒரு செய்தி இவ்வளவு லாவகமா யார்தான் எழுத முடியும்? நல்லதொரு பதிவு.மேலும் இதை நடத்துவது அதிராம்பட்டினம் நகர வளர்ச்சி கழகம். [இலங்கை தமிழில் ' அதிராம்பட்டின நலனபிவிருத்தி சம்மேளனம்.... மொழிபெயர்ப்பில் தவறு இருப்பின் இருக்கவே இருக்கிறார்கள் 'சகோதரர் அதிரை அஹ்மது, சகோதரர் கிரவுன்...' உங்கள் தமிழறிவு பொறாமைப்பட வைக்கிறது]இதை சொன்னதற்காக பதிகிறேன்.
ஒரு மலையின் அருகில் இந்த மடுவை வைத்தது,உங்களின் பெருந்தன்மை.அந்த அன்பிற்கும்,பெருந்தன்மைக்கும் நன்றி. நீங்கள் சொன்னது சரிதான்,அபிப்ராயம் கேட்டதால் சொல்கிறேன். அதிரை ஊராச்சியின் அபிவிருத்தி சம்மேளனம்.(கழகம்).என்பது மிகச்சரியான வார்தையாக அமையும் என்பது என் கருத்து.மேதைகள் இங்கே இதற்கு மறுப்பு சொல்லலாம்.அல்லது சரியா என்பதை சரிபார்க்கலாம்.

Thanks for the commendation...! However, the article is very nice...! Thought provoking...! Thank you brother Zakir for bringing out this timely message...! May Allah reward you for your efforts. Insha Allah, I'll be attending the said meeting and will give my feed backs and outcome of the meeting.

ஜாகிர் காக்கா உங்களின் இந்த அர்டிகிளின் கருத்து எல்லோருக்கும் போய் சேர வேண்டும் ....
ஊரில் இருப்பவர்கள் நல்லெண்ண அடிப்படையில் அதிரை நிருபர் சார்பாக நோட்டீஸ்
அடித்து விநியோகித்தால் என்ன ?............இது ஒரு முதல் படியாக அமையலாம் .இன்ஷா அல்லாஹ்.............

நாளை நடைபெற இருக்கும் இந்நிகழ்வுக்கு, ஊரில் இருக்கும் சகோதரர்கள் இம்முயற்சியை செய்யலாம் ஏன் ARDAகூட இந்த விழிப்புணர்வு ஆக்கத்தை அச்சிட்டு விநியோகிக்கலாமே சம்பதப்பட்ட ச்கோதரர்கள் கவனத்தில் கொள்ளலாமே... இன்ஷா அல்லாஹ் !

ஊரில் உள்ள அனைவரின் இரத்தத்தையும் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று நான்கு பேர் அடங்கிய குழு நம் பகுதிக்குள் வந்திருக்கிறது இதற்க்கு நம் மக்கள் சரிவர ஆதரவு தரவில்லை என்று விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த என் நண்பரிடம் குறை பட்டிருக்கிறது இந்த குழு. சகோ. ஜாகிர் அவர்களின் செய்தி சரியான நேரத்தில் தரப்பட்ட செய்தியாகும் காரணம் அறியாமலேயே சில உடல் உபாதைகளுக்கு நம் மக்கள் உள்ளகிக்கொண்டு இருக்கிறார்கள் இதற்க்கு மிக முக்கிய காரணம் கொசுக்கள் என்பது சமீபத்தில் தெரிய வந்துள்ளது எனவே கொசுக்களை ஒழிக்க பயன் இல்லாத குளங்கள் மற்றும் சாக்கடைகளை சரி செய்ய இந்நிகழ்வின் மூலம் தக்க நடவடிக்கைக்கு ஆவன செய்ய வேண்டும் என்பது என் கருத்து.

சகோதரர் அதிரை அஹ்மது, கிரவுன்,ஹார்மி, அபு இப்ராஹிம் ..உங்களின் உயரிய கருத்துக்கு நன்றி..

என்னுடைய இந்த ஆக்கம் நோட்டீஸ் அடித்து வெளியிடும் அளவுகோலுக்குள் அடங்காது...காரணம் சில பேரக்ராஃப் எடிட் செய்யவேண்டும்.

இப்படி ஒரு விசயம் நம் ஊரின் நலனுக்காக ஒன்றாய் கூட இருக்கிறார்கள் என பள்ளிவாசலில் அறிவிப்பு செய்தால் நலமாக இருக்கும். எனக்கும் நம் ஊர் ஒரு உதாரண ஊராக வர வேண்டும் என ஆசை இருக்கிறது. நம் ஊரில் எத்தனையோ பட்டதாரிகள், வாழ்க்கையை கற்று உணர்ந்தவர்கள் ...இன்னும் கொசுப்பிரச்சினையை ஒழிக்க முடியவில்லை எனும்போது..PEST CONTROL என்ற ஒரு விசயம் இருக்கிறது அதற்கு ஒரு
Co-Ordinate Effort தேவை என்பது எப்படி என் மக்களுக்கு தெரியாமல் போனது என ஆச்சர்யமாக இருக்கிறது.

//18-11-2010 [வியாழன்] காலை 10.00 மணிக்கு - சிஃபா மருத்துவமனை வளாகத்தில்.//

நிச்சயம் ஊருக்கும் நமக்கும் நல்ல விசயம் நடக்கும் என்று நம்புவோம். துஆவும் செய்வோம்.

அதிரையில் சுகாதாரம், மருத்துவம் தொடர்பாக ஏதாவது நல்ல முடிவுகள் எடுக்கபடவேண்டும்.

ஷிஃபாவின் மறுமலர்ச்சி இன்னும் சிறப்பாக தொடர நல்ல விதைவிதக்கப்படும் என்று நம்புவோம்.

சகோதரர் ஜாஹிர் அவர்களின் ஸ்டைலில் அழைப்பிதழ் மிக அருமை. சகோதரர் ஜாஹிர் அவர்கள் எழுதியை பசிக்காக சாப்பாடு கட்டுரை மீண்டும் ஒரு முறை நாம் படித்துப்பார்ப்பது மிக அவசியம் என்று நான் கருதுகிறேன்.

This is my first comment in adirai nirubar. Reason is, the way this article is published impressed me and made me think that it reflects the views of most of the fellow adirai graduates mentioned in this article. As you all aware, LTTE is trying to form a government virtually, if they can do that big job, why can't we get together virtually (first) and try to achieve something good for our home town. I do expect our home staying brothers to do field work but whoever is living abroad can come closer and get something done for good. Lets think about a plan.

சகோ.ஜாஹிர் காக்கா அவர்கள் முத்து முத்தான யோசனைகளை முன்வைத்து உள்ளார்கள்...இதை முன்னின்று நடத்த வேண்டியது நமது சமுதாய கடமை...படித்தவுடன் விட்டுவிடாமல் செயல் படுத்த வேண்டியது அவசரம் அவசியம்..இதற்க்காக ஒரு குழுவை அமைத்து ஆலோசனைகளை தொடங்கலாம்..அதிரை நிருபர் குழு இதை முன்னின்று நடத்தலாம் இது எனது தனிப்பட்ட யோசனை

தனித் தனி இயக்கமாகவோ அல்லது குழுவாகவோ செயல்படுவதை விடுத்து, இருக்கும் அருமையான அமைப்புகளுக்கு (ARDA) முழு ஒத்துழைப்பு நாம் யாவரும் கொடுக்கலாம். இவர்கள்தான் இன்றையச் சூழலில் களத்தில் இருப்பவர்கள் மேலேச் சொன்ன நிகழ்வு நடப்பதில் இவர்களின் ப்ங்கும் அங்கிருப்பதால்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More