Nov 13, 2010

ஒதுக்கப்பட்ட நம் வீட்டுப்பெரியவர்கள்

பொதுவாக ஹஜ்பெருநாளை நாம் தியாகத்திருநாள் என அழைக்கிறோம்...நம் வாழ்க்கையிலும் சில நல்ல உள்ளங்கள் மிகப் பெரிய தியாகங்களை செய்திருக்கிறார்கள்.
நமது இன்றைய இளமைக்கும் , வசதிக்கும் அவர்களின் பங்களிப்பும் தியாகமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது வெற்றி பெற்ற பிறகு அதற்க்கு 'நான்"தான் காரணம் என மார்தட்டுபவர்கள் மறவாமல் ஒரு மண்டலம் "மந்துகாபர்னி [வல்லாரை மாத்திரை ] எடுத்துக்கொள்ளலாம். ஒரு மாதிரியான செலக்டிவ் அம்னீசியா , ஞாபக சக்தியின்மை பிரச்சினைகளுக்கு உதவும்.
இந்த ஆர்டிக்கிள் நான் முன்பு எழுதி மற்ற வலைப்பூவில் வெளியானது. இந்த தியாகத்திருநாளில் பொருத்தமாக இருக்குமே என மறுவெளியீடு...

ஒதுக்கப்பட்ட நம் வீட்டுப்பெரியவர்கள்

நான் ஓவ்வொறு முறையும் ஊர்வரும்போது சில பெரியவர்களிடம் "மெனக்கட்டு" போய் பேசிக்கொண்டிருப்பேன், இதை எழுத இது போன்ற நம் ஊர் முதியவர்களின் மெளன அழுகையும் காரணம்.அப்போதெல்லாம் அவர்களின் குறைபடு லிஸ்ட் ரொம்ப நீளமாக இருக்கும். இதன் காரணம்தான் என்ன என்றால் இது பெரும்பாலும் பிரச்சினை possessiveness லிருந்து ஆரம்பித்ததாக இருக்கும்.
இவர்களின் குறை பெரும்பாலும் "பொட்டியோட நேரா பொண்டாட்டி வீட்டுலெ போயி எறங்கிட்டான் வாப்பா' ...இப்படித்தான் இருக்கும். நாம் இப்போது internet உலகத்தில் இருக்கிறோம் , சமயங்களில் "நானோ" டெக்னாலஜி பற்றி பேசுகிறோம், ஆனால் நமது சின்னவயதில் நம்மை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரி வாசலில் நின்ற இதுபோன்ற எத்தனையோ உயிர்களின் உள்ளத்தை புரிந்து கொள்ளத்தவறிவிட்டோம்.நம் ஊரில் எல்லோருக்கும் சம்பாதிப்பதின் முக்கியத்துவம் தெரிந்து விட்டது. இந்த நவீன காலத்தின் தாக்கம் [ தாக்கம் தவறல்ல] சில சமயங்களில் நம் கூட இருந்த முதியவ்ர்களை [அப்பா..உம்மும்மா/ராத்தம்மா, வாப்புச்சி உறவுகள்....அல்லது உங்கள் தாயாக கூட இருக்கலாம்] நம்மையும் அறியாமல் ஒதுக்கி விட்டோமா என கேட்கத்தோன்றுகிறது.

மாத வருமானம் ஆயிரம் ரூபாயில் 5 பிள்ளைகளை காப்பாற்றிய தாய் தந்தையருக்கு 10 ஆயிரம் வருமானம் பெரும் ஒரு பிள்ளை ஐநூறு கொடுக்க முடியாததற்க்கு ஆயிரம் காரணம் சொல்கிறது.
இந்த முதியர்களின் புழக்கத்தை அதிகம் போனால் ஒரு 40X50 ல் சுருக்கிவிட்டோம்
பெரும்பாலான பெரியவர்களை நாம் கல்யாணம்/காது குத்து / சுன்னத் மஜ்லீஸ்களில் " வாழ்ந்த மனுசிலெ..அவ்வொ கையாலெ மாலெ போடச்சொல்லுங்க" என்ற வசனத்துக்கு மட்டும் பயன்படுத்துகிறோம். அல்லது நோயில் விழுந்தால் கஞ்சி / மாத்திரை கொடுக்கும்போது மட்டும் பேசுகிறோம்
வெளிநாட்டிலிருந்து வரும் நண்பர்களுக்கு இதுவொரு வேண்டுகோள்..முடித்தால் இவர்களுக்கு நோய்க்கும் / பிணிக்கும் பார்க்கும் அம்பாசிடர்களை அழைக்கும்போது கொஞ்சம் காற்றோற்றமான பகுதியில் கொஞ்சம் நிறுத்தி உலகத்தின் விசாலம் காட்டுங்கள்..முடிந்தால் உங்களின் வாழ்வியல் முன்னேற்றத்தில் அவர்களின் கேட்டராக்ட் விழுந்த கண்களும், ரத்தம் சுண்டிப்போய் சுருங்கிய விரல்களும் எப்படி ஏணியாய் இருந்தது என்று அவர்கள் காது பட சொல்லுங்கள்.அந்த முதியவர்களை அழைத்துக்கொண்டு குளுமணாலிக்கும்,கொடைக்கானலுக்கும் அழைத்துபோக சொல்லவில்லை. அட்லீஸ்ட் பக்கத்தில் இருக்கும் அதிராம்பட்டினத்து கடற்கரை, கொஞ்சம் தூரப்போனால் ராஜாமடத்துபாலம் [ அங்கு உட்கார்ந்து அந்தி சாயும் பொழுதை ரசித்துப்பாருங்கள்] ...இப்படி அழைத்துசெல்ல பேரன் இருக்கிறான் / மகன் இருக்கிறான் .என்ற சூழ்நிலை இருந்தாலே இந்த வயதானவர்களின் கடைசிகாலம் கொஞ்சமாவது சந்தோசம் கலந்து இருக்கும்.

"
அப்படி ஒன்றும் ஒதுக்கவில்லை அவர்களை" என்ங்கிறீர்களா?..வாழ்துக்கள்...எப்படி
இப்படி வேறுபட்டு அனுசரனையாய் இருக்கிறீர்கள் என்று எழுதுங்கள். வரும் சந்ததியினருக்கு ஒரு reference கிடைக்கும்.
வீட்டுப்பிரச்சினைகளில் இவர்கள் சம்பந்த பட்டிருந்தால் ..தீர்ப்பை எழுதி வைத்துவிட்டு பிரச்சினையை விசாரிக்காதீர்கள்.சமயங்களில் காலம் மிகத்தாமதமாக சில விசயங்களை உணர்த்தும்..அது வரை அந்த முதியவர்களும் உயிருடன் இருக்க வேண்டும். அவர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களை சந்தோசமாக வைத்திருக்க கற்றுக்கொள்ளுங்கள்.
சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இருக்கிறது.

- Zakir Hussain

23 comments:

//சின்ன சின்ன அன்பில்தானே // அந்தப் பெரியவர்களின் ஆத்ம ஜீவன் இருக்கிறது..

ஜாஹிர் காக்கா உணர்ந்திருக்கிறேன்... அப்படியே, எனக்கு நினைவுக்குள் இருக்கும் மறக்க முடியாதவர்களில் பலரில் ஒருவரை மட்டும் இங்கே, எனது வாப்பா அவர்களை சின்ன வயதில் அதிகம் நேசித்த வளர்த்தவங்க அந்த வயதான பெண் எங்கள் சொந்தமென்ற வட்டத்தில் இல்லாவிட்டாலும் அவர்களின் அளப்பரிய அன்பும் கொஞ்சும் வார்த்தைகளால் தேடிச் செல்வேன் அவர்களிடம் குறைந்தது கால் மணிநேரமாவது அமர்ந்து அவர்கள் சொல்லும் எதனையும் அமைதியாக அவர்கள் சொல்வதை நியாப் படுத்தியே பேசி வருவேன் அச்சமயத்தில் அவர்கள் கண்களில் தெரியும் பளீர் ரசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும் நமக்கு...

இதேபோல் சென்று சந்தித்து நேசம் பாராட்ட நிறைய இருக்கிறார்கள் சொந்தமாகவும், தெருவோரத்திலும், பள்ளிவாயில்களிலும்..

அற்புதமான நினைவுகூறலோடு இன்னும் இருக்குன்னு சொல்லிய உங்கள் பானியே தனிதான் (அசத்தல் காக்கா !)

Al-hamdulillah last 15 yrs whenever I visit Adirai, I make a point to visit all my ailing relatives and especially elders. Truly they had done several impact to our lives, unfortunately we least care about them in there old age, I agree on your recommendations to treat the elders with respect, take them out and show the world.

Good reminder, Insha-Allah lets see if we can do this next time we see them.

Dawood

அன்பினிய சகோதரர் ஜாஹிர் அவர்களுக்கு,

தியாத்திருநாள் நம்மை எதிர்நோக்கும் இவ்வேலையில் மிக அருமையான ஞாபகமூட்டல்.

ஒரு காலத்தில் பெரியவர்கள் மேல் இருந்த அக்கரை இன்றைய அவசர காலத்தில் நம்மிடம் இல்லை என்பதை மனசாட்சியுடன் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

தலைப்பை படித்ததும் மனம் கலங்கிவிட்டது.

//அந்த முதியவர்களை அழைத்துக்கொண்டு குளுமணாலிக்கும்,கொடைக்கானலுக்கும் அழைத்துபோக சொல்லவில்லை. அட்லீஸ்ட் பக்கத்தில் இருக்கும் அதிராம்பட்டினத்து கடற்கரை, கொஞ்சம் தூரப்போனால் ராஜாமடத்துபாலம் [ அங்கு உட்கார்ந்து அந்தி சாயும் பொழுதை ரசித்துப்பாருங்கள்] ...இப்படி அழைத்துசெல்ல பேரன் இருக்கிறான் / மகன் இருக்கிறான் .என்ற சூழ்நிலை இருந்தாலே இந்த வயதானவர்களின் கடைசிகாலம் கொஞ்சமாவது சந்தோசம் கலந்து இருக்கும்.//

இந்த யோசனை ரொம்ப பிடித்திருக்கிறது. நாமும் முயற்சி செய்துப்பார்கலாமே. இன்ஷா அல்லாஹ்.

பெரியவர்கள் சந்தோசபடுவதை பார்க்கும் போது எழும் ஆனந்தம் வேறு எந்த ஆனந்தத்துக்கும் ஈடாகாது என்பது என் தனிப்பட்ட கருத்து.

அன்பு பாசம் கொண்ட நம் வீட்டு நல் எண்ணம் கொண்ட பெரியவர்கள் அனைவரும் அறிந்து அறியாமலும் செய்த சிறிய பெரிய பாவங்களை மன்னித்து பொருத்தருள. படைத்தவனிடம் கையேந்துவோமாக.

அல்லாஹ் போதுமானவன்.

அல்லாஹ் போதுமானவன்.

//வீட்டுப்பிரச்சினைகளில் இவர்கள் சம்பந்த பட்டிருந்தால் ..தீர்ப்பை எழுதி வைத்துவிட்டு பிரச்சினையை விசாரிக்காதீர்கள்.//

ஜாஹிர் காக்கா இவ்வரிகளில் ஆயிரம் அர்த்தங்கள்.

பெரியவர்கள் வீட்டு பிரச்சினைகளில் சம்பந்தப்பட்டிருந்தாலும் நிதானமிழந்து அவசரப்பட்டு பெரியவர்களின் மனது நோகும் விதமாக சில இளசுகள் தன் சொல், செயல்களில் வெளிகாட்டிவிடுகிறார்கள். நீங்கள் சொல்வது போல் காலம் கடந்து உண்மை வெளிவரும்போது மனம் வருந்தும் நோகடித்த இளசு.

நல்ல ஞாபகமூட்டலுக்கு மீண்டும் ஒருமுறை எங்கள் அன்பு சகோதரர் ஜாஹிர் ஹுசைன் அவர்களுக்கு நன்றி.

ஜாகிர்,

உன் நினைவூட்டல், நீ சொல்லிக் காட்டும் அக்கறையையும் அன்பையும் காட்டியவர்களுக்கு ஒரு மன திருப்தியையும்; காட்ட முடியாமல் 'பொட்டியோடு போய் பொன்டாட்டி வீட்ல இறங்கியவர்'களுக்கு ஒரு மன உருத்தலையும் தரும் அளவுக்கு உருக்கமாகவும் வேண்டுகோளாகவும் இருக்கிறது.

//கேட்டராக்ட் விழுந்த கண்களும், ரத்தம் சுண்டிப்போய் சுருங்கிய விரல்களும்//


கேட்டராக்ட் விழுந்த கண்கள்:

கேட்ட்ரக்ட் திரையிட்டு
காட்ச்சிகள் மங்கலாம்...
கண்ட கனவுகள் சற்றே
கலங்கியும் போகலாம்...
கனத்த நினைவுகளில் மனம்
கரைந்தே போகலாம்

ஆயினும்...

கண்களுக்குள் தேங்கிய
கரிசனையும்
கருணையும்
காலமெல்லாம் நிலைக்கும்!


ரத்தம் சுண்டிப்போய் சுருங்கிய விரல்களும்:

பிடித்துச் சென்ற விரல்
பாதை சொல்லித்தர
பாதுகாப்பாய் தொடர்ந்த
பயணங்கள்...

ரத்தம் சுண்டியபின்னும்
சுருங்கிய விரல்களோடு
இருக்கிப் பிடிக்க
இல்லை உறவுகள்!

ஆட்டோப் பிடித்து மெல்ல அணைத்து தாங்கிப் பிடித்து மருத்துவரிடம் கூட்டிச் சென்றது அவர்களுக்கு எப்படியோ, எனக்கு பலமுறை சுத்தமான் சுவாசக் காற்றாய் நெஞ்சை நிறைத்தது.

ஆம்.. ஆம்.. சின்னச் சின்ன அன்பில்தான் ஜீவன் இன்னும் இருக்கு

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.
பெரு(சு)சென்றும்.
கிழவன்,கிழவி யென்றும்.
வாய மூடிக்கிட்டு மூலைல கிடவென்றும்.
ஏச்சும்,பேச்சும்...
ஏன் இந்த கேவலம்?
ஒரு வாய் கவலம் சோற்றுக்கு,
அவர்கள் படும் அவலம்.
ஏன் இந்த இழி நிலை?
யார் அவர்கள்?
நீயும் நானும்...
இந்த புவியில் பிறக்க மூலமே அவர்கள்தான்.
அவர்கள் அளப்பறியா செல்வங்கள்.
நம்மை கண்ணாய் காத்த இமைகள்.
அவர்களின் தியாகங்களும்,காயங்களும்.....
நம்முடைய இன்றைய மகிழ்வும், வசந்த வாழ்கையும்.
அவர்கள் நம் குழைந்தைகளுக்குப்பின் வந்த குழந்தைகள்.
வயதான மழலைகள்.
அவர்களை பேணிக்காப்பது நம் கடமை.
பேனாதிருந்தால்.....
நாளை மறுமையில் தெரியும் உன் நிலைமை.

கண்களில் கண்ணீரும் , மனதில் இனம் புரியாத ஒரு வகை நெருடலும் எனக்கு உன் எழுத்துக்களை வாசிக்கும் போது. சுய பரிசோதனையில் அங்கே இங்கே என சில வெற்றிடங்கள். குறிப்பிட்டு எந்த வரிகளையும் கோடிட்டுக் காட்டமுடியாத அளவுக்கும் அனைத்து வரிகளுமே அழுத்தமானவை நாம் எல்லோரும் உறவுகளை குறித்து சுய பரிசோதனை செய்ய வேண்டிய தருணம் இது. அதிரைநிருபரின் பதிவுகளில் உள்ளத்தை ஆட்கொள்ளும் வரிகளுக்கு நீயும் , சபீரும் ( சபீர் அஸ்ஸலாமு அலைக்கும் ) சொந்தக்காரர்கள். உறவுகளின் உணர்வுகளைப் பற்றி வரைந்திட உணர்தல் அவசியம் அது உன்னிடம் சற்று அதிகமாகவே இருக்கிறது. உனக்கு பிடித்த ஒரு கவிஞனின் வரிகள் நினைவுக்கு வருகிறது " நீ தாய்மை பற்றி எழுத வேண்டுமெனில் உனது மார்புகள் சுரக்க வேண்டும் " என்பதே. எனது பால்ய கால , பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் கண்ட ஜாகிரா ? ஒரு கணம் வியந்து போகிறேன். உறவின் உணர்வுகளைப் பற்றி இன்னும் நீ அதிகம் எழத வேண்டும் என கேட்பதோடு, அதற்காக துஆ வும் செய்கிறேன்.

சகோதரர் அபு இப்ராஹிம் ...உங்கள் மனதின் விசாலம் கண்டு வியந்து போகிறேன்.

சகோதரர் தாவூத்...உங்களின் கரிசனையான வெளிப்பாடுகள் வருங்கால சந்ததியினருக்கு ஒரு வழிகாட்டல்.

சகோதரர் தாஜுதீன்...உங்களின் விமர்சனம் உங்களின் தூர நோக்குப்பார்வையை காண்பிக்கிறது.

சபீர் ...இயற்பியல் படித்ததால் என்னவோ மற்றவர்கள் மாஞ்சி மாஞ்சி
ஒரு பேரக்ராஃப் எழுதும் விசயத்தை 2 வரிகளில் விவரித்துவிடுகிறாய்.

சரபுதீன்...உன் எழுத்தை பார்த்தவுடன் எனக்கு என்னவோ உன்னை நேரில் பார்க்கனும் போல் இருந்தது....பணம் தேட நாம் தூரமாகிபோய் விட்டாலும் ஏதவது ஒரு வழியில் இறைவன் நம்மை ஒரு டிகேட் க்கு மேலாக தொடர்பில் வைத்திருக்கிறான்..அதற்கு நாம் நன்றி சொல்வோம்.

To Bro Crown
//அவர்கள் நம் குழைந்தைகளுக்குப்பின் வந்த குழந்தைகள்.
வயதான மழலைகள்.//

சகோதரர் Crown இந்த 2 வரியும் மொத்த ஆர்டிக்கிளின் ஒரே பிரதிபலிப்பு. கவிதை எழுதுபவர்களின் தனிதிறமை...உங்களின் அழகான புலமை.

// அவர்கள்
நம்
குழைந்தைகளுக்குப்பின்
வந்த குழந்தைகள்
வயதான மழலைகள் //

கிரவ்னு: ஜாஹிர் காக்கா சொன்னது போல் எட்டு வார்த்தைகளில் எழுந்து உட்காரவைக்கிறாய(டா)ப்பா ! முடங்கிக் கிடக்கும் இறக்கத்தை, கரிசனத்தை..

கருத்துக்கள் பதிந்த யாவருக்கும் இணம் காண முடியாத சிலிர்ப்பு என்னால் உணர முடிகிறது !

அஸ்ஸலாமு அலைக்கும், அன்பு சகோதரர் தஸ்தகிர்.

//அவர்கள் நம் குழைந்தைகளுக்குப்பின் வந்த குழந்தைகள்.
வயதான மழலைகள்.//

இந்த வரிகளில் அருமை.

அறியா மழலைகள் செய்யும் தவறுகளை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது போல் நம் வீட்டு பெரியவர்கள் செய்யும் அறியாத தவறுகளை பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுவதே என் நிலைப்பாடு.

அல்லாஹ் போதுமானவன்.

அல்லாஹூ அக்பர்...
ஜாஹிர்,உனது கட்டுரையை படித்ததும் கண் கலங்கி விட்டது.தேவையான சமத்தில் அருமையான நினைவூட்டல்,குர்ஆனில், அதிகமாக வளியுறுத்தப்பட்ட‌தில் பெற்றோர்களை பேனுதலும் ஒன்று.
இவ்விசயத்தில் அரேபியர்கள் சரியான முறையில் பின்பற்றுகிரார்கள்.

நல்ல நினைவூட்டல் .....நல்ல யோசனை ..........

பொன் எழுத்துகளால் பதியப்பட வேண்டிய தஸ்தகீரின் பொன் வாக்கியம்

// அவர்கள்
நம்
குழைந்தைகளுக்குப்பின்
வந்த குழந்தைகள்
வயதான மழலைகள் //

காக்காவின் ஆக்கங்கள் எப்போழுதும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்..ஆனால் இந்த ஆக்கம் கண்களில் கண்ணீரை வர வழைத்து விட்டது...பெரியவர்கள் இறந்தவுடன் ஹத்தம் பாத்திகா ( இப்பொழுது குறைந்து இருக்கிறது ) விருந்து என்று தடபுடல் படுத்தும் பிள்ளைகள்..அவர்கள் உயிருடன் இருக்கும் போது எனோ ஒருவாய் சோறு கொடுக்க பாடாய் படுத்துவார்கள்...தியாகபெருநாள் நேரத்தில் நம்மை ஆளாக்க தியாக செய்தவர்களை பற்றிய டச்சிங் கட்டுரை

இவர்களின் குறை பெரும்பாலும் "பொட்டியோட நேரா பொண்டாட்டி வீட்டுலெ போயி எறங்கிட்டான் வாப்பா' ...இப்படித்தான் இருக்கும். நாம் இப்போது internet உலகத்தில் இருக்கிறோம் , சமயங்களில் "நானோ" டெக்னாலஜி பற்றி பேசுகிறோம், ஆனால் நமது சின்னவயதில் நம்மை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரி வாசலில் நின்ற இதுபோன்ற எத்தனையோ உயிர்களின் உள்ளத்தை புரிந்து கொள்ளத்தவறிவிட்டோம்.நம் ஊரில் எல்லோருக்கும் சம்பாதிப்பதின் முக்கியத்துவம் தெரிந்து விட்டது. இந்த நவீன காலத்தின் தாக்கம் [ தாக்கம் தவறல்ல] சில சமயங்களில் நம் கூட இருந்த முதியவ்ர்களை [அப்பா..உம்மும்மா/ராத்தம்மா, வாப்புச்சி உறவுகள்....அல்லது உங்கள் தாயாக கூட இருக்கலாம்] நம்மையும் அறியாமல் ஒதுக்கி விட்டோமா என கேட்கத்தோன்றுகிறது.

அன்புள்ள ஜாஹீர் படித்தவுடன் கண்களில் நீர் தழும்புகிரது.(அன்புடன் மீராசா காக்கா )

கண்ணீரும் - தண்ணீரும்.
இந்த ஆக்கம் தந்தது நிறைய தாக்கம்.!தகுந்த
(பெருநாள் )நேரம் ஆனதால் நெகிழ்ந்து போன அன்பர்களே! பாரா முகமாக யாரிடமாவது இருந்திருந்தால் உடனே ..விரைக! சின்ன சட்டைத்துண்டோ அல்லது சிறிதளாக ஏதாவது வழங்கி சந்தோஷியுங்கள்.இந்த தொடரை வாசித்துக் காணிக்கும்போது கண்கசிந்த நண்பர் ஒருவர் கண்ணுலே என்னமோ தூசி..என்றார்,மற்றவரோ ரெண்டுநாளா சரியதூங்களே..அதான்என் கண்சிவப்பா ஈக்கிது...இன்கிதமாக ரசித்த நான் மட்டும் அதிராமல் பாத்ரூம் சென்று ஒழு செய்து விட்டு(வேண்டுமென்றே துடைக்காமல்)வெளியே மிகுந்த கண்ணீரும் தண்ணீருமாய்....?!

சகோதரர் ஜலீல், மீராசா ,யாசிர் அனைவருக்கும் என் நன்றி ....உங்கள் எழுத்திலேயே தெரிகிறது ,அங்கு உள்ள உணர்வுகள்...இறைவனுக்கு நன்றி சொல்வோம். இன்னும் சொல்லப்போனால் நான் எழுதிய ஆர்டிக்கில்களில் எனக்கு அதிகம் மன நிறைவை தந்தது இந்த ஆர்டிக்கில்தான் [ இதுவரை]

சகோ RAFIA உங்கள் எழுத்திலேயே அங்கு உள்ள சூழ்நிலையை படம் பிடித்து காண்பித்து விட்டீர்கள். நாம் மனிதர்கள் தவறு செய்வது இயல்பு. அதை திருத்திகொண்டு வாழும்போது மாமனிதர்கள் ஆகிறோம்...அதை நீங்களும் வழியுருத்தியிருப்பது கண்டு சந்தோசம்.உங்களை பார்த்து 5, 6 வருடமாகிவிட்டது என நினைக்கிறேன். ஜித்தாவில் உங்களுடைய பணிவன்பில் நான் மிக சந்தோசம் அடைந்தேன்.

ஆமாம் சஹோதரரே! ஊரில் இருப்பவர்கள் திருந்தவோ -திருத்தவோ உடனே முடியும்.இங்கு நாங்கள் தற்போதைக்கு வருந்த மட்டுந்தான் முடியும்.போன வருட சபுர்லே சந்திக்க இயலாமற் போன பெரியவங்க இந்த வருடம் கபுர்லே! மனசு உறுத்துதே?!திருச்சி -தஞ்சாவூர் பணிநிமித்தம் போய் கடைசி பஸ்ஸில் வந்திறங்க கொண்டவள் ஏக்கத்துடன் பெற்றவர்கள் கலக்கத்துடன் அவர்களைப் பெற்றவர்கள் கரிசனையோடும் 'யாண்டா வாப்பா உவ்ளோ நேரம்"வரவேற்று பொட்லத்தை வாங்கும்.நீங்க சாப்டியலா?என்று கேளுங்கள்,மகிழ்ந்து போகும்,(ஆமா அதே ஒன்னத்தா இந்தப் பெருசு ஒழுங்க செய்யுது)என்று உள்ளிருந்து எதோ முனக்கம்,
வாப்பிச்சா தூங்கிட்டியா வாழப்பழம் உங்களுக்கு பிடிச்ச கற்பூரவள்ளி..வாங்கியாந்திருக்கேன்.அப்டியா? ,,அதற்கு ஒரு ப்ளாஷ் பேக் 'உங்கப்பா ஒரு தடவை ,,,என்று எதையாவது சொல்லிக்கொண்டே நன்றிப் பெருக்கோடு திங்கும் ,உள்ளிருந்து
.அசரீ போல ;'கெழவி அவ்களே சாப்ட உடு" சும்மா தொனா தொனாண்டிக்கிட்டு.
நமக்கு அவர்கள் சொல்வதில் சுவாரசியம் இல்லையென்றாலும்ஓஹோ ? உம்-அப்டியா..? என்று கதை கேட்டால் ஏக குஷி.அவர்கள் நமக்கு பணிவிடை செய்ய முயலுவார்கள்.ரிசல்ட் முன்னெப் பின்னே இருந்தாலும் வெரிகுட் என்று நம் திருப்தியை தெரிவித்துவிட்டு அகமகிழும் முகவரிகளை வாசியுங்களேன்! உள்ளிருந்து முனக்கம் (சில நேரங்களில் முழக்கம்):இந்த கெளவிக் கொடுத்தா மட்டும் பால் சூடில்லட்டியும் இனிப்பு இல்லாட்டியும் ஒன்னும் கொரவு இல்லே..?!உண்மையில் தேங்காய் மட்டையை எரித்த தூசி கூட பாலில் மிதந்தது.பெரியவர்கள் மனத்தை நோகடிக்கக் கூடாதென்று தூசியை ஈசியாக (கிரௌன் கவனிக்க)
எடுத்துக்கொண்டோம்.இன்னும் வாழ்வில் நமக்கும் பிறருக்கும் நிகழ்ந்த நெகிழ்வுகள் -நெருடல்கள் நெறைய நெரய்ய உள்ளது. எழுத நாங்க ரெடி. நேரம் கொடுத்து வாசிக்க நீங்க ரெடியா?

ஆமாம் சஹோதரரே! ஊரில் இருப்பவர்கள் திருந்தவோ -திருத்தவோ உடனே முடியும்.இங்கு நாங்கள் தற்போதைக்கு வருந்த மட்டுந்தான் முடியும்.போன வருட சபுர்லே சந்திக்க இயலாமற் போன பெரியவங்க இந்த வருடம் கபுர்லே! மனசு உறுத்துதே?!திருச்சி -தஞ்சாவூர் பணிநிமித்தம் போய் கடைசி பஸ்ஸில் வந்திறங்க கொண்டவள் ஏக்கத்துடன் பெற்றவர்கள் கலக்கத்துடன் அவர்களைப் பெற்றவர்கள் கரிசனையோடும் 'யாண்டா வாப்பா உவ்ளோ நேரம்"வரவேற்று பொட்லத்தை வாங்கும்.நீங்க சாப்டியலா?என்று கேளுங்கள்,மகிழ்ந்து போகும்,(ஆமா அதே ஒன்னத்தா இந்தப் பெருசு ஒழுங்க செய்யுது)என்று உள்ளிருந்து எதோ முனக்கம்,
வாப்பிச்சா தூங்கிட்டியா வாழப்பழம் உங்களுக்கு பிடிச்ச கற்பூரவள்ளி..வாங்கியாந்திருக்கேன்.அப்டியா? ,,அதற்கு ஒரு ப்ளாஷ் பேக் 'உங்கப்பா ஒரு தடவை ,,,என்று எதையாவது சொல்லிக்கொண்டே நன்றிப் பெருக்கோடு திங்கும் ,உள்ளிருந்து
.அசரீ போல ;'கெழவி அவ்களே சாப்ட உடு" சும்மா தொனா தொனாண்டிக்கிட்டு.
நமக்கு அவர்கள் சொல்வதில் சுவாரசியம் இல்லையென்றாலும்ஓஹோ ? உம்-அப்டியா..? என்று கதை கேட்டால் ஏக குஷி.அவர்கள் நமக்கு பணிவிடை செய்ய முயலுவார்கள்.ரிசல்ட் முன்னெப் பின்னே இருந்தாலும் வெரிகுட் என்று நம் திருப்தியை தெரிவித்துவிட்டு அகமகிழும் முகவரிகளை வாசியுங்களேன்! உள்ளிருந்து முனக்கம் (சில நேரங்களில் முழக்கம்):இந்த கெளவிக் கொடுத்தா மட்டும் பால் சூடில்லட்டியும் இனிப்பு இல்லாட்டியும் ஒன்னும் கொரவு இல்லே..?!உண்மையில் தேங்காய் மட்டையை எரித்த தூசி கூட பாலில் மிதந்தது.பெரியவர்கள் மனத்தை நோகடிக்கக் கூடாதென்று தூசியை ஈசியாக (கிரௌன் கவனிக்க)
எடுத்துக்கொண்டோம்.இன்னும் வாழ்வில் நமக்கும் பிறருக்கும் நிகழ்ந்த நெகிழ்வுகள் -நெருடல்கள் நெறைய நெரய்ய உள்ளது. எழுத நாங்க ரெடி. நேரம் கொடுத்து வாசிக்க நீங்க ரெடியா?

Rafia சொன்னது…

கண்ணீரும் - தண்ணீரும்.
இந்த ஆக்கம் தந்தது நிறைய தாக்கம்.!தகுந்த
(பெருநாள் )நேரம் ஆனதால் நெகிழ்ந்து போன அன்பர்களே! பாரா முகமாக யாரிடமாவது இருந்திருந்தால் உடனே ..விரைக! சின்ன சட்டைத்துண்டோ அல்லது சிறிதளாக ஏதாவது வழங்கி சந்தோஷியுங்கள்.இந்த தொடரை வாசித்துக் காணிக்கும்போது கண்கசிந்த நண்பர் ஒருவர் கண்ணுலே என்னமோ தூசி..என்றார்,மற்றவரோ ரெண்டுநாளா சரியதூங்களே..அதான்என் கண்சிவப்பா ஈக்கிது...இன்கிதமாக ரசித்த நான் மட்டும் அதிராமல் பாத்ரூம் சென்று ஒழு செய்து விட்டு(வேண்டுமென்றே துடைக்காமல்)வெளியே மிகுந்த கண்ணீரும் தண்ணீருமாய்....?
------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.காக்கா! நீண்ட நாளுக்குப்பின் நெகிழ்சித்தரும், நிகழ்சியினை,மகிழ்சியுடன் எழுதியதைப்பார்த்து கொஞ்சம் பரவசம் கொண்டேன்.சகோ.ஜாஹீர் உயிர் அணுக்களை உசுப்பி பார்க்கும் ஒரு உன்னத எழுத்தாளர்.
அப்பனை,ஆத்தாளை மறக்க முடியாத ஜீவன்கள் இன்னும் உள்ளது.கண்ணீரை தண்ணீர் கொண்டு ஒப்பனை செய்து மறைத்த உங்கள் பாவம்.அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்? .இன்று புண் கணீர் (கண்ணீரை) மறைத்த தாள் தண்ணீரோ? அதையும் மறைக்காமல் சொல்லிவிட்டீர் அவ்வளவு வீரியம் அன்பிற்கு.அல்ஹம்துலில்லாஹ்.

Rafia சொன்னது…
உண்மையில் தேங்காய் மட்டையை எரித்த தூசி கூட பாலில் மிதந்தது.பெரியவர்கள் மனத்தை நோகடிக்கக் கூடாதென்று தூசியை ஈசியாக (கிரௌன் கவனிக்க)
எடுத்துக்கொண்டோம்.
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.காக்கா! இது எனக்கு கிடைத்த பாராட்டு என்றால் இந்த பெருனாள் எனக்கு இனிதாய் அமையும்.கடிந்து சொன்ன வார்தையென்றால் சோகமே மிஞ்சும். நீங்கள் தூசியை (ஈசியா= லேசா) இலகுவா எடுத்துகிட்டிங்க.இந்த வார்தை இலகுவா? கடினமா? மருபடியும் உங்களிடமிருந்து விடை வரும் வரை.கொஞ்சம் திக்...திக்... காரணம் நம்மிடையே உள்ள திக்.
அப்புறம் கிரவுன் கவனிக்க! என்ன கிரவுன்? தம்பி என்று சொன்னால்தான் எனக்கே கிரவுன் அணிந்த சுகம்.கலைஞர் கருனானிதிக்கு காஞ்சி அன்னா உண்மையோ,அரசியலோ ஆனால் எனக்கு நீங்கள் உடன் பிறவா அன்னாதான்.(உடன் பிறப்பே!கலைஞர் உபயம்)

தம்பி தஸ்தகீர் உனது திக்கான பாசத்தில் "திக்'குமுக்காடிப் போனேன்.அண்ணா கலைஞரைப் பற்றி அந்நாளிலே 'எம் தம்பிகளில் சற்று துடிப்பான தம்பி' என்று. .நீயோ எமக்கு துடிப்புடன் கூடிய மிடுக்குத் தம்பி.
உன்னைத்தான் தம்பி என்று சொல்லி நீ ஒரு விரலை (மவுண்ட்ரோடு சிலையில்)'காண்பித்ததை நாங்கள் நீ இன்னும் ஒரு வருடம்தான் இருப்பாய் " என்று புரிந்துகொள்ளாமல் விட்டோமே..என மொழிந்தது கட்சியைக் கடந்து நாம் ரசித்தது .

அஸ்ஸலாமுஅலைக்கும் .காக்கா! தித்"திக்"கும் செய்தி வந்து பெருனாளும்,திருனாளாய் தித்தித்தது. நம் நட்பு, அன்பு எட்டு"திக்"கும் "திக்"கட்டும் எடுத்துகாட்டாய் நி(ற்)க்கட்டும்.
முத்தாய்பாய் அண்ணாவின் சிலையை பற்றி கருனானிதி சொன்னதை நினைவூட்டியதும்.மெழுகுச்சிலையை பற்றி நீங்கள் சொன்ன நினைவலை வந்து ஒருகணம் வீசுயது.லண்டனில் இந்திராகாந்தியின் மெழுகு சிலைப்பார்த்துவிட்டு,ஜித்தா வந்ததுடன் சிலாகித்து சொன்னதை சிலையாய் நின்று கேட்டுக்கொண்டிருந்ததும்,அந்த மெழுகுச்சிலையைப்பார்த்து நீங்கள்(மெழுகாய்) உருகினின்றீர்களா? என நான் கேட்க? தம்பி! நீ வார்தையில் வடிக்கும் சொல் சிலையும்,வார்தை விளையாட்டையும் பற்றித்தான் நான் வியக்கிறேன். என்று சொல்லி அகமகிழ்ந்து பாராட்டியதும், நினைவில் வந்து சந்தனமாய் மணந்(த்)து செல்கிறது.எதை சொல்ல ,எதை விட?
உங்களுடன் கழி(ன்)த்த நாட்கள் பாலாச்சுலையின் மேல் மொய்க்கும் மொத்த ஈக்களைப்போல் உங்கள் நகைச்சுவையில் நனைந்து என் ஈறுகெல்லெல்லாம் தெரிய சிரித்து, மகிழ்ந்தை சொல்லவா?
இரவானாளும் நான் தங்கி இருந்த இடத்தில் சங்கோஜத்தில் சாப்பிடாமல் பட்டிணியாக இருந்திருப்பேன் என்று எண்ணி, தம்பி! சாப்பிடியளா? ன்னு தாய் போல் கேட்டும் கரிசனம் மறப்பேனா? எனக்காக அழுததை மறப்பேனா? எதை எழுத எதை விட?
விம்மளுடனும்,விசும்பலுடனும்,
அன்புடனும் இந்த சிறு நினைவூட்டலை முடிக்கிறேன்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More