
இரண்டாம் உலகப்போருக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றை உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன். இங்கிலாந்துப் பிரதமராக ஆவதற்கு முன்பாக, வின்ஸ்டன் சர்ச்சில் சாதாரண பிரிட்டிஷ் டூரிஸ்ட்டாகச் சென்னை வந்து, அண்ணா சாலையில் முன்பு இருந்த அரசு வளாக (கவர்மெண்ட் எட்டேட்ஸ்) அட்மிராலிட்டிக் கட்டிடத்தில் ஓர் அறையில் தங்கியிருந்தாராம். அவருக்கு அடுத்த அறையில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிலிட்ரி கர்னல் ஒருவர் தங்கி இருந்தாராம். அப்போது கர்னல் போனில் லண்டனுக்குச் சப்தம் போட்டுப் பேசினாராம். அவர் பேசிய சப்தம் கேட்டு, சர்ச்சில் அவருடைய அறையை விட்டு வெளியே வந்து, அங்கிருந்த காவலாளியைக் கூப்பிட்டு, அந்த அறையில் தங்கிருந்தவர் யார் எனத் தெரிந்து கொண்டு காவலாளியிடம், ‘நீங்கள்...