Welcome to our website. Neque porro quisquam est qui dolorem ipsum dolor.

Lorem ipsum eu usu assum liberavisse, ut munere praesent complectitur mea. Sit an option maiorum principes. Ne per probo magna idque, est veniam exerci appareat no. Sit at amet propriae intellegebat, natum iusto forensibus duo ut. Pro hinc aperiri fabulas ut, probo tractatos euripidis an vis, ignota oblique.

Ad ius munere soluta deterruisset, quot veri id vim, te vel bonorum ornatus persequeris. Maecenas ornare tortor. Donec sed tellus eget sapien fringilla nonummy. Mauris a ante. Suspendisse quam sem, consequat at, commodo vitae, feugiat in, nunc. Morbi imperdiet augue quis tellus.




Oct 31, 2010

மூடப்பழக்கம் மண்மூடிப்போகட்டும் - 2

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

முந்திய பதிவில் குறிச்சொல்லுபவர்கள் பற்றியும், இஸ்லாத்தில் அதற்கு இடமில்லை என்பதைப் பற்றியும் சொல்லியிருந்தேன். குறி, ஜாதக (சுயதேவைத்) தொழில் செய்யும் தில்லுமுல்லுகளை ஆதாரத்துடன் பிடிபட்டவரைப் பற்றி சுவாரசியசமாக சொல்லப்போகிறேன். அது மட்டுமல்லாது சின்ன(த் திரையில்லாத) நாடக வடிவிலும் சில விசயங்களையும் நாம் பார்போம், இனி....

எங்க ஏரியாவில நொண்டி ஏகாம்பரம்னு ஒருத்தர்(கால் ஊனம்) ஜோசியம் சொல்லி வந்தார் அவரிடம் வெளியூர் மற்றும் நம்மூர் மாற்று மதத்தினரும் வந்து ஜோசியம் குறி கேட்டு வந்தனர். அதே வேளை நம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் வந்து அவரிடம் குறிகேட்டுப் பரிகாரம்(?) வாங்கிச் செல்வர். அவருடைய பையன்கள் எங்களுடன் படித்த தோடல்லாமல் , அவரின் மற்றுமொரு மகன் எனக்கு கணக்கு வாத்தியார் நான் அவருக்கு கவிதை வாத்தியார் ஆதலால் அந்த குடும்பம் எனக்கு நன்கு பரிச்சயம்.

ஒருநாள் அவர் வீட்டில் கணக்குப் பாடத்தின் டியூசன் நடந்து கொண்டிருந்தது. அந்த தெருவில் ஒரு முஸ்லிம் பெரியவர் இருந்தார்கள் நல்ல தைரியசாலி அவர் ஜோசியக்காரவீட்டுக்கு வந்தார். எங்களுக்கெல்லாம் ஆச்சரியம் ஏன் இவரு இங்கே வர்ராரு இவரும் ஜோசியம், குறிகேட்பாரோ? சந்தேகம் நாங்கள் அமைதியாக கவனித்து கொண்டிருந்தோம். வாத்தியாரும் குளித்துவிட்டு வருவதாய் சொல்லி சென்றிருந்தார். ஆகவே என்ன நடக்குதுன்னு பார்க்க ஆவலாக இருந்தோம். சிலர் வெளியூரிலிருந்து வந்திருந்திருந்தார்கள்.

அந்த பெரியவர் வந்ததும் ஜோசியருக்கு ஒரே பல்.

"என்ன .... இங்கே !?"

"எப்படி நீர் அக்கம் பக்கதிலேதான் இருக்கிறீர் இங்கே எல்லாம் எட்டி பார்க்க மாட்டீரே என்ன அத்திபூர்தார்போல????" (இருவரும் ஒரே வயதுடையவர்கள்)

"என்னப்பா பன்றது தேவை இருந்தாதான் வரமுடியும் நீயும் சும்மா வந்தா இப்படி வரவேற்பியா?"

"என்ன இப்படி சொல்லிட்டீர் ?"

"அது இல்லப்பா நீயும் எப்பவும் பிஸியா ஆட்களுடன் இருப்பே அதான், ஆனா இப்ப எனக்கு ஒரு காரியம் ஆகனும்!"

"சொல்லும் பேஸா செஞ்சிடலாம், யாருக்காவது முகமாத்து(????) பன்னனுமா? செய்வினை செய்யனுமா?"

"அப்படியெல்லாம் இல்லப்பா எங்கவீட்டு மாடு காணாப்போச்சு யாரவது திருடிக்கிட்டு போய்டாங்களா? இல்ல எந்த திசையிலாவது மேஞ்சுக்கிட்டு இருக்கான்னு பாத்து சொல்லனும்"

"சரி கொஞ்சம் பொறு வோய்..."

சொல்லிட்டு தன் மனைவியை கூப்பிட்டு குரல் கொடுத்தார் "போய் சாமிபடதுக்கு பக்கத்துல வெத்தல பாக்கு இருக்கு, அதோட மையும் இருக்கு எடுத்துகிட்டு வா !"

மனைவி இரண்டையும் எடுத்துகிட்டு வந்ததும், வந்திருந்த வெளியூர்காரங்க கிட்ட கொஞ்சம் காத்திருக்கும் படி சொல்ல அவர்களும் தலையாட்டி விட்டு இவர் மை போடுரத வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சாங்க.

வெத்திலையில் கருப்பா மைதடவிட்டு நம்ம பெரியவர் கையில் ஏதோ பொட்டலம் கொடுத்து இதை நான் சொல்றவர கெட்டியா பிடிச்சுக்குங்க என்றார். ஏகாம்பரம் ஏதோ கொஞ்ச நேரம் முனுமுனுத்தார் பிறகு மாடு எங்கே இருக்கு என்பதை விவரிக்க அரம்பித்தார்.

"மேக்காலா 60 கீ,மீ. தள்ளி ஒரு குளத்துல புல் மேஞ்ஜுகிட்டு இருக்கு யாரும் திருடிக்கிட்டுப்போகலா..."

"அப்படியா சந்தோசம் ஆனா உமக்கு ஒரு விசயம் சொல்லனும்னு" என்று பெரியவர் சொல்ல ...

"என்னாவோய்..."

"உனக்கு ஏன் இந்த ஏமாத்து பொலப்பு, என் மாடு எங்கேயும் கானாப்போகலா உன் வீட்டுக்கு எதுத்தாப்ல உள்ள போன் போஸ்ட்லதான் கட்டி வச்சிருக்கேன் நீ எல்லார்டையும் காசு புடிங்குறத பாக்காலாம்னுதான் வந்தேன் அப்புறம் நீ யாருக்கு வேனா ஜோசியம் பாரு ஆனா முஸ்லிம் யாருக்காவது பாத்தா உன் மறுகாலும் ஒடச்சுடுவேன்னு" சொல்லிட்டு வேகமா அசிஙமாதிடிட்டு போனார்.

ஏகாம்பரத்துக்கு திருடனுக்கு தேள் கொத்துனாமாறி ஆச்சு.அவர மூஞ்சிய அப்ப பார்கனுமே?? ஹஹ ஹஹ் ஹஹ்

....பசங்கலேல்லாம் இதைப்பார்த்ததும் நம்ம வாத்தியார் அவசர அவசரமா அன்று டியுசனை கேன்சல் செஞ்ஜுட்டார். பாவம் அந்த வெளியூர் காரங்களும், அப்பாவி மக்களும்.

குறி சொல்லும் பெண்னை பற்றி எழுதிய பின் நான் விசாரித்தேன் அவர் இன்னும் அந்த வேலையைதான் செய்கிறார் என்றும் ஆரம்பத்தில் காசுவாங்காமல் செய்தவர் இப்ப காசு வாங்குவதாகவும் அவரின் வீட்டின் முன் மாலை 6 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை உள்ளூர் வெளியூர் காரர்கள் டோக்கன் வாங்கி காத்திருக்கவும்ன்னும் கேள்விப்பட்டேன்.இவர் இரவில் தான் பெரும்பாலும் குறி சொல்வாராம். அதுவும் வெள்ளி இரவு, புதன் இரவுன்னு கணக்கு உண்டாம் (ஏ.ஆர்.ரஹ்மான்னு நினைப்பு இரவுலதான் குறி சொல்வாராம்) அந்த பெண்ணின் பெயர் மந்திர அம்மான்னு சொன்னங்க (இத சேவைன்னு நினைத்து செய்ராங்களோ என்னவோ).

ரொம்ப நாளைக்கு முன்னே நான் கேள்விப்பட்டது. ஒரு நாள் (அவுலியாவின் ஆவி மந்திர அம்மா) பச்சதலப்பா கட்டுன ஒரு ஆளை கணவுல பாத்தாங்களாம் அந்த ஆளுக்கு 400வயசு அதாவது ஒரு குறிப்பிட்ட வீட்டை பத்தி சொல்லி அந்த வீட்ல யாரோ செய்வினை செஞ்சிருக்காங்க அத எடுக்கனும் அப்படி எடுக்கலன்னா அந்த வீட்ல எட்டு நாள்ல ஒருதர் மொவுதா போயிடுவாங்களாம் எனவே என்னை அங்கே கூட்டிகிட்டுப்போங்கன்னு சொல்ல அந்த பெண்ணோட கணவன் (அப்படிண்டு ஒரு கையாள்) மறுபேச்சு பேசாம உடனே ஆட்டோவில மந்திர அம்மாளை அழைத்துகொண்டு அந்த வீட்டுக்கு போனார்.

அந்த வீட்டு வாசப்படிய அடஞ்சதும்..

"யாரு வீட்ல நான் மந்திர அம்மா வந்திருக்கேன் உங்க வீட்ல கிணறுக்குப் பக்கத்தில யாரோ செய்வினை செஞ்சி பொதச்சிருக்காங்க அப்படி அந்த செய்வினைய எடுக்கலான்னா, எட்டு நாள்ல உங்க வீட்ல யாராவது மவுத்தாயிடுவாங்க" என்று சொல்ல..

அந்த வீட்டு அம்மாவுக்கு கையும் ஓடல காலும் ஓடல. "என்னம்மா சொல்றே, உனக்கு யாரு சொன்னா என் பிள்ளை வந்தா சத்தம் போடுவான் இதல்லாம் அவனுக்குப்பிடிக்காது".

"ஏன் ராத்தா பயப்படுறியோ, எஜமான் தான் கணவுல வந்து சொன்னங்க உங்க வீட்ல செய்வினை செஞ்சிருக்குன்னு அதனாலதான் நான் ஓடிவந்தேன்."

"சரிவுல என்னவோ சொல்றே, புள்ள வந்தான்னா சத்தம் போடுவான் உடனே ஆகவேண்டியதை பாரு".

"சரி ராத்தா எலுமிச்சம் பழம் இருந்தா குடுங்க கொஞ்சம் உப்பும், டீஸ்பூனும் குடுங்க, (சர்பத் போடவானு சகோ.ஷஹுல் கேட்பது விளங்குகிறது) ராத்தா மம்முட்டி கொடுங்க, இந்தாங்க மசமசன்னு நிக்காம மம்முட்டி வாங்கிட்டு வாங்க நான் சொல்ற இடத்துல பள்ளம் வெட்டனும்".

மம்முட்டியும் வந்தது. மந்திர அம்மா தன் காலால் கோடு போட்டபடி ஒரு இடத்துக்கு வந்து, "ஏங்க இந்த இடத்தில் பள்ளம் தோண்டுங்க..."

"சரிவுல.."

"ஊட்டு காரவோல வர சொல்லுங்க அப்பவாச்சும் நாம சொன்னது சரியான்னு தெரியட்டும்"

மந்திர அம்மாவின் மாப்புள முதன் முறையா குரல் குடுத்தார்.

"அதெல்லா வேனா தம்பி நாம்ம புள்ளையல்வோ நாம நம்பவில்லைண்ட... யார நம்புறது" (காரணம் அதுவல்ல செய்வினை தாவிடும்னு பயம்... அபூஇப்றாகிம் கேட்பார் ..கிரவுன் நீளம் தாண்டுதலா?அகலம் தாண்டுதலா?)

செயல் வீரர் (காமராசர்) மந்திர அம்மாவின் கணவர் தோண்ட ஆரம்பிச்சார் ஒரு அடி தோண்டியிருப்பார் வெள்ள துணி சுத்தி ஏதோ தெரிந்தது.... உடனே மந்திர அம்மா "எஜமானே உங்க வார்த்தைய உண்மையாக்கி ராத்தாவூட்ட காப்பத்திடியல (நகூதுபில்லாஹ்) உங்களுக்கு நாகூருக்கு வந்து என்ன(எண்னெய்) விளக்கு ஏத்துரேன். ராத்தா இப்ப பாத்தியலா எந்த கெட்டு போவாரோ உங்க ஊட்ல எலவு விழனும்னு செய்வினை செஞ்சிருக்காங்க, யாரு செய்த புண்ணியமோ நல்லது நடந்துச்சு..."

"ஆமா மந்திர அம்மா, நீயும் திடுதிப்புன்னு வந்து சொன்னதும் எனக்கு என்ன செய்யுறதுன்னு தெரியல கொஞ்சம் நீயும் உன் மாப்புளையும் தேத்தனி குடியேன்."

"வேண்டா ராத்தா வூட்டுக்குப்போகனும் வெளியூர் காரவொ ரெண்டு பேருக்கு யாரொ மருந்து உட்டுருக்காகலாம் அதப்போய் எடுக்கனும்.."

"நல்ல இருபவுல மந்திர அம்மா, இங்க வா(ரூமிற்கு"

கூட்டிபோய் கையில ஏதோ தினிக்கிறாங்க... வந்த காரியம் நல்ல படியா முடிந்த சந்தோசம் மந்திரம்ம முகத்துல...

"ராத்தா கொஞ்சம் ஆட்டோவுக்கு போன் போட்டு சொல்ல முடியுமா?"

அந்த வீட்டுகாரம்மா போன் போட போறாங்க செயல் வீரர் மந்திரம்மாவைப் பார்த்து புன்சிரிப்பு சிரிக்கிறார்.

இது நடந்து பல வருடங்கள் இருக்கலாம், ஆனால் பல மேடைகள் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருந்தும் இன்னும் வியாபார நோக்கில் தகடு, தாயத்து, செய்வினை, மந்திரம், குறி சொல்றது போன்றவைகள் நம் மக்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பது தான் வேதனை. இவைகளை நம் மக்களிடம் மீண்டும் மீண்டும் எடுத்துச்சொல்லி, மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்கும் அறிந்தும் அறியாத நம் மக்களை நேர்வழி படுத்த நம்மால் முடிந்தவரை விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் அனைவரும் முயற்சி செய்யலாமே. அல்லாஹ் போதுமானவன்.

(அங்கு எப்படி அந்த செய்வினை வந்தது யோசிச்சி வைங்க அடுத்த பதிவில் சந்திக்கலாம் சந்திக்கலாம்)

இன்ஷாஅல்லாஹ் தொடரும்...

-- CROWN

<-- மூடப்பழக்கம் மண்மூடிப்போகட்டும் 1


 
அன்பானவர்களே,

மேலே பதியப்பட்ட ஆக்கத்தில் சில பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூட நம்பிக்கைகளை அறவே அகற்றப்பட வேண்டும் என்ற நோக்கதில் எழுதப்பட்ட இந்த ஆக்கத்தில் செல்லப்பட்ட நபர்கள், அவர்கள் செய்துவரும் மந்திர தொழிலை இன்னும் செய்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி இன்னும் அவர்கள் அத்தொழிலை செய்து வந்தால் அவர்கள் நேர் வழி பெறவும், மந்திர தந்திரங்களுக்கு அடிமையாகி மூட நம்பிக்கையில் இன்னும் மூழ்கி இருக்கும் நம் மக்களும் நேர் வழி பெற நம்மை எல்லாம் படைத்த அல்லாஹ்விடம் இத்தருணத்தில் நாம் அனைவரும் து ஆ செய்வோமாக.

--- அதிரைநிருபர் குழு

50000 செல்லக் குட்டுகள் வாங்கிய அதிரைநிருபர்

அதிரை நிருபருக்கு
கிடைத்த அடிகள்...
கண்ணடிகள்!


என்ன செய்தீர் - இத்தனை
இதயம் கொய்தீர்!
புன்னகை விற்றீர்
பூக்க்ள் பெற்றீர்!

படிப்படியாய் அடி சேர்வது
பழக்கமான சக்தி...
படீரென அடி சேர்வது
ஆக்க சக்தி...
நீர்தான் இனி
அதிரையின் ஆக்க சக்தி!

அதிரை நிருபருக்கு
ஆயிரக் கணக்கில் அடிகள்...
இடுகைகள் மூலம்
ஈட்டிய புகழ்
உலக மெங்கும் வாழும்


ஊர் மக்களுக்கு
எல்லாம் அறிய
ஏதுவாய் வார்த்து
ஐம்பதாயிர முத்தரை பெற்று
ஒற்றுமையோடு
ஒங்கிச் சொன்னதால்
ஓளவையின் சுவடிபோல் நிலைக்கும்
ஃஎனும் ஆயுதமும் துவக்கமாகும்!

Adirai nirubar...
Breaks the records!

Counting on continuously
Deriving lovely strikes!

Encourages everyone with
Friendly freedom and
Great gentleness!

Highly professional owners
Involving themselves
Just like mates!

Knowledges merge here
Learners learn creation
Mainly about Islam & hometown but
Not limited to!

Optimistic approach and
Progressive postings brought
Queue of readers with
Repeated attendance!

Seniors respected...
Teenagers well treated...
Ultimate result is
Victory...victory and victory!

Work hard Adirainirubar,
Xerox not anyone else,
Yet lot you to achieve in the
Zigzag path of life!!!


-sabeer


Oct 30, 2010

இன்று 30-10-2010

மொத்தமாக ஒரே தலைப்பை ஒட்டி எழுத விசயம் கிடைக்காதபோது இப்படி பல விசயங்களை ஒரு ஆர்டிக்கிளாக எழுதலாமே என மண்டைக்குள்பல்ப்” வெளிச்சம் தெரிந்ததால் இப்படி ஆரம்பித்து விட்டேன்...தலையெழுத்து யாரை விட்டது என படிக்க ஆரம்பிக்கும் உங்களுக்கு என்முதற்காது’ நன்றி.

பதிவர் உலகம்:
சமயங்களில் மற்றவர்கள் என்னதான் எழுதுகிறாரகள் என மற்ற வலைப்பூக்களை பார்ப்பதுண்டு [ தமிழ் / ஆங்கிலம் ] தமிழில் சிலருடைய Blogs பார்க்கும்போது மனசு கணத்து போகும் ...இது பொது மேடை என தெரிந்த்தும் அசிங்கமாக மாஞ்சி மாஞ்சி எழுதியிருப்பார்கள். எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால் அந்த Blogs எழுதுபவர்களின் உறவினர்கள் ஆசிரியர்கள் மரியாதைக்குறிய நண்பர்கள் யாருமே அதை பார்க்க மாட்டார்களா? பார்த்தால் நம்மை பற்றிய கருத்து மாறிவிடாதா?...நீ ஏன் அப்பு அதையெல்லாம் பார்க்குறே என அந்த வலைப்பூக்களின் சொந்தகாரர்கள் இதில் தாராளமாக கமென்ட் எழுதலாம். என்ன செய்வது பஸ் ஸ்டான்ட் கக்கூசில் கறித்துண்டிலும் , சாக் பீசிலும் எழுதியவர்களின் கையில் கம்ப்யூட்டர் கிடைத்திருக்கிறது. ஜமாய்ங்க அப்பூ

வெள்ளைக்காரனும் சலைத்தவன் அல்ல, வீட்டில் இருந்துகொண்டே ஆயிரக்கணக்கில் அமெரிக்கன் டாலரில் சம்பாதிக்களாம் தொடங்கி ஆஸ்திரேலியா / அமெரிக்க குடியுறிமை எல்லாம் எங்கள் சந்தையில் எழந்தப்பழம் விற்க்கும் பெண்களிடம் கேட்டால் கூரு இன்ன விலை என சொல்லிவிடுவார்கள் என்பது போல் சீன் வந்து போகும் [ பாப்-அப் ]
சிலரின் வலைப்பூவில் உள்ள விசயங்கள் தேங்காய் சீனிவாசன் , ஜெய்சங்கர் போன்றவர்கள் கதாநாயகனாக நடிக்கும் காலத்தில் உள்ளவை. அப் டேட் செய்யாமல் பல காலம் இருப்பதால் மற்ற வலைத்தளஙக்களில் உள்ளவைகளை அவர்களின் அனுமதியுடன் வெளியிடலாம். முடியாவிட்டால் தற்காலிகமாக Temporarily under construction என போர்ட் மாட்டி ரெஸ்ட் எடுக்களாம்.

நமது ஊர் இளைஞர்களின் சாதனை அதிகம் Blogs வைத்திருப்பது. அதில் நமது சகோதரிகளின் சமையல் சம்பந்தமான Blogs உண்மையிலேயே பாராட்டுக்குறியவை. [ அன்புடன் மலிக்கா , ஜலீலா கமால் மற்றும் பொதுவான விசயங்களை எழுதும் சகோதரி பாத்திமா ஜொஹரா. இதில் சமையல் குறிப்பு எழுதும் சகோதரிகள் தங்களது திறமையை டி.வி நிகழ்ச்சியில் காட்டலாம். இப்போது "ஹலால்" உணவு இன்டஸ்ட்ரி பெருமளவில் முன்னேறியிருக்கிறது. தேவை கொஞ்சம் Lobbying செய்யக்கூடிய முயற்ச்சி. Anthony Bourdine போன்றவர்கள் கண்ட குப்பைகளை சமைத்து சாப்பிட்டுhmmm… Very niceஎன்று சொல்லும்பொது உங்கள் சமையல் டிப்ஸ் எல்லாம் நிச்சயம் வெற்றி பெரும். ஆண்களில் சகோதரர் இர்ஷாத், சகோதரர் மூஜீப் வித்யாசமான அணுகுமுறை.இவர்களுக்கு சரியான தலம் கிடைத்தால் வெப் உலகத்தில் பெரும் சாதனையாளர்களாக வர முடியும். சகோதரர் தாஜுதீன் பற்றி இதில் எழுதவில்லை ஏனெனில் இது அதற்கான தலம் அல்ல.

சிலருக்கு எது செய்தாலும் பிடிக்காது. நம் ஊர் ஆட்கள் அதிகம் Blogs வைத்திருக்கிறார்கள், அதிகம் எழுதுகிறார்கள் அதனால் அவர்கள் சாதித்தது என்ன? என்று என்னிடம் சமீபத்தில்ஒருவர் வினவினார்...பதில் சொல்லும்போது ப்ளாக்ஸ் வைத்திருப்பவர்களை நான் தற்காத்து பேசுவேன் என நினைத்திருக்களாம் , அவரின் கேள்வியை பதிலாக அவரிடம் நான் கேட்டேன்."இந்த ப்ளாக்ஸ் எதுவும் இல்லாமல் நீங்கள் சாதித்தது என்ன?... அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

ஜப்பானிய மார்சியல் ஆர்டில் AKIDO ஒரு மிக உன்னதமான சண்டை, எதிரியின் சக்தியைவைத்தே அவனை மடக்குவது, மனோதத்துவத்தில் இதை பயன்படுத்த தெரிந்தவர்கள் டென்சன் இல்லாமல் வாழத்தெரிந்தவர்கள். உங்களுக்கு தெரிந்தவர்கள் , பிள்ளைகள் அல்லது நீங்கள் கூட இதை கற்றுக்கொள்ள வாய்ப்பு இருந்தால் பயன் படுத்தி கொள்ளலாம். விழிப்புணர்வின் மொத்த ப்ராக்டிசும் இதில் இருக்கிறது.
சில கேள்விகள்;

அதிரை எக்ஸ்பிரஸில் முன்பு அடிக்கடி எழுதும் சகோதரர் அபுஹசன், மற்றும் ஒரு ஆலிம் ஏன் இப்போது எதிலும் எழுதுவதில்லை.???

சமீபத்தில் நடந்த்த [ சிலி நாட்டில்] சுரங்கத்தில் இருந்துமீட்ட பணியாளர்கள் பற்றியும் அந்த நிகழ்வு பற்றியும் அவர்கள் நமக்கு கற்றுத்தந்ததலைமத்துவம்” பற்றியும் ஏன் யாரும் எழுதவில்லை.??

இந்த பதிவிலும் சில படங்கள் இணைத்திருந்தேன்,ஒன்று கூட தெரியவில்லை. [ கட்டம் மட்டும் வருகிறது] வெத்திலையில் மை போட்டு பார்க்கும் கலையைவிட கஷ்டமான விசயமாகிவிட்டது எனக்கு .. கம்ப்யூட்டர் தெரிந்த கனவான்கள் உதவி செய்யும் கமென்ட்ஸ் வரவேற்கப்படுகிறது.


ZAKIR HUSSAIN

Oct 28, 2010

கடன் வாங்கலாம் வாங்க - 5

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! ( அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! )

வளைகுடா நாடுகளுக்கு வந்திருக்கும் சகோதரர்களிடம் தாயகத்தில் உள்ள உறவினர்கள் எத்தனை வகைகளில் எதற்கெல்லாம் கடன் கேட்கிறார்கள்.

â வீடு கட்டப்போகிறேன் அல்லது கட்டியவீடு பூர்த்தியாகவில்லை பணம் அனுப்பி வை.

â            நான் கடை வைக்கப்போகிறேன் பணம் குறைகிறது உன்னால் முடிந்தததை உடன் அனுப்பி வை.

â        வீடு கட்ட மனை இல்லை மனைக்கு முன்தொகை கொடுத்து விட்டேன். பாக்கி பணத்தை கொடுத்து பத்திரம் முடிக்க வேண்டும் அதனால் உடன் தாமதம் இல்லாமல் பணம் அனுப்பி வை.

â        பிள்ளையை காலேஜில் சேர்க்க பணம் வேண்டும் உன்னை நம்பித்தான் இருக்கிறேன் உடன் பணம் அனுப்பி வை.

â        எல்லா நகையும் பேங்கில் அடகு வைத்து விட்டேன். ஏல நோட்டீஸ் வந்து விட்டது. நீ பணம் அனுப்பி வைக்காவிட்டால் என் நகைகளை இழக்க நேரிடும். அதனால் உடன் பணம் அனுப்பி வை.

இப்படி உறவினர்கள் மூலம் வளைகுடா சகோதரர்களுக்கு ஏகப்பட்ட கடன்கள் கேட்டு தொலைபேசி வருகிறது. இதில் நியாயமான கடன் எது என்று தங்களுக்கு புரியும் இதற்கு உதவலாம். திருப்பி அடைக்கும் வழியே தெரியாமல் கடன் வாங்கி தன் தேவைகளை நிறைவேற்றி கொள்பவர்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும்.

இங்கு வந்துள்ள சகோதரர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக ஊரில் உள்ளவர்கள் நினைத்துக்கொண்டு கடன் கேட்கிறார்கள். நாம் கேட்கும் தொகையை எப்படி ஏற்பாடு செய்வார்கள் என்ற நினைப்பும், இப்படி கேட்டு வாங்கும் கடனை நாம் எப்படி திருப்பி அடைப்போம் என்ற சிந்தனையும் இல்லாமல் கேட்கிறார்கள். இதில் வாங்கிய கடனை அடைக்காமல் இருந்து விடுவோமா? என்ற கோபமான பதில் வேறு. எந்த சிந்தனையும் இல்லாமல் வெளிநாட்டுக்கு சென்றவர்களிடம் நிறைய இருக்கும் என்ற நினைப்பில் கடன்களை கேட்டு விடுகிறார்கள்.

சகோதரர்களே அவசிய, அத்தியாவசிய கடன் என்ன தெரியுமா? வயிற்று பசியும், மருத்துவ செலவும், தங்க இடம் இருந்தும் வானம்  பார்த்த பூமியாக இருந்தால் ஓடோ அல்லது கூரையோ போட்டுக்கொள்ள வாங்கும் கடன்களை சொல்லலாம். (இதோடு கல்வி கடன்களையும் சேர்த்துக்கொள்ளலாம்). இதுவும் நம்மிடம் விற்று பணமாக்க எந்த பொருளும் இல்லாத நிலையில்தான் வாங்க வேண்டும்.

ஆடம்பர கடன் எது தெரியுமா?

வீடு இருக்கும்பொழுது அதை மேலும் தேவையில்லாமல் ஆடம்பரமாக கட்டுவதற்கு கடன் வாங்குவது. மார்க்கத்தில் இல்லாத காரியங்களை வழிவழியாக முன்னோர்கள் செய்து வந்தார்கள் என்ற காரணத்தால் நாம் செய்யாவிட்டால் ஊர்வாசிகள் என்ன சொல்லுவார்களோ??? நம் கௌரவம்??? குறைந்து விடுமே என்று எதற்கெல்லாம் கடன் வாங்குகிறோம். சுன்னத் செய்வதற்கு, குழந்தைக்கு காது குத்துவதற்கு, பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்து விட்டால் பூப்பெய்து நீராட்டு விழா என்று நடத்த, பிள்ளை பிறந்தால் பெயர் வைக்க ஒரு விழா நடத்துவதற்கு என்று இதுபோல் பல ஆடம்பர காரியத்திற்காக கடன் வாங்குகிறோம்.  இவைகள் அனைத்தும் அவசியமில்லாத ஆடம்பர கடன்கள். சகோதர சகோதரிகளே சிந்தித்து தெளிவு பெறுங்கள்.

சகோதரிகள் வாங்கும் கடன்கள் :

சகோதரிகளே! தாங்கள் வாங்கும் கடன்களைப் பற்றித்தான் இனி அலசப்போகிறோம். கவனமாக படியுங்கள். குடும்பத்தில் ஏற்படும் அனைத்து காரியங்களுக்கும் சிக்கனம் என்றாலும், வீண் விரயம் என்றாலும் குடும்பத்தலைவியே முழு பொறுப்பாளியாவார். ஆண்களை கடன் வாங்கும் சூழ்நிலைக்கு விரட்டுவதற்கு காரணம் யார் என்று பார்த்தால் நிறைய இடங்களில் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். சகோதரிகளின் வீண் விரயங்களைப் பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.

புதிய நகை :

நகைகளில் ஒரு டிசைனை பார்த்து விட்டால் உடனே அதுபோல் செய்து போட வேண்டும் என்று தன்னிடம் இருக்கும் நல்ல நகைகளையே, நகை கடையில் கொடுத்து புதிய டிசைன் செய்கிறார்கள். இதற்கு ஆகும் சேதாரம், நாம் கொடுக்கும் நகையில் அவர்கள் கழிக்கும் சேதாரம், பிறகு கூலி. (கூலி கூட குறைவாகத்தான் இருக்கும் காரணம் சேதாரத்தில் நகை கடைக்கு ஒரு தொகை கிடைத்து விடும்). இப்படி இதில் நிறைய வீண் விரயம் உள்ளதே என்று நினைத்துப் பார்ப்பதில்லை. இதனால் அன்று குடிசையில் பத்தர் கடை என்று வைத்திருந்தவர்கள் இன்று பங்களா கட்டி பெரிய நகை கடையே வைத்திருக்கிறார்கள். சகோதரிகளே நீங்கள் இருந்த இடத்தில் எந்தவித சிரமமும் இல்லாமல் நிமிடத்தில் புதிய நகைகளை செய்து விடுகிறீர்கள். தங்கள் குடும்பத்தின் ஆண்கள் எத்தனை சிரமப்பட்டு (பாலைவனத்தின் வெயிலை தலையில் சுமந்து) இந்த பணத்தை எப்படி சம்பாதித்து இருப்பார்கள் என்பதை ஒரு நாளாவது சிந்தனை செய்து பார்த்து இருப்பீர்களா? அவசியத்திற்கு நகைகள் செய்தாலும் கவனமாக இருங்கள். ஆடம்பரத்தை அறவே தவிர்த்து விடுங்கள். வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுவதை மனதில் வைத்து செயல்படுங்கள்:

... உண்ணுங்கள் பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன் : 7:31)

நகை கடன் :

நகைகளை வங்கியிலும், அடகு கடையிலும் வைக்கும் எனதருமை தாய்மார்களே! சகோதரிகளே! கொஞ்சம் நில்லுங்கள்! எதற்காக மாதா மாதம் நகைகளை எடுத்துக்கொண்டு வங்கிக்கும், அடகு கடைக்கும் ஓடுகிறீர்கள் பசிக் கொடுமையா? அல்லது மருத்துவ செலவுக்கா? (இதற்காக சில பேர் அடகு வைக்கலாம்)  பெரும்பாலும்  வெளிநாட்டில் இருக்கும் குடும்ப ஆண்களிடம் இருந்து பணம் வர தாமதமானாலும் மற்றும் குடும்பத்தில் நடக்கும் அனைத்து விதமான ஆடம்பர காரியங்களுக்காகவும், மனை வாங்கி போடவும், இன்னும் வெளிநாடு செல்லாமல் இருக்கும் வீட்டில் உள்ள ஆண்களுக்கு விஸா வந்து விட்டது உடனே பணம் கட்டியாக வேண்டும் என்று இது போன்ற பல காரியங்களுக்காகத்தானே செல்கிறீர்கள்.

வங்கியின் நிலைபாடு :

வங்கிக்கு உங்களுடைய நகைகளை எடுத்துக்கொண்டு செல்கிறீர்கள். உங்களுடைய பொருளை வைத்து பணம் வாங்குவதற்கு நீங்கள் எத்தனை சிரமங்களை வங்கியின் ஊழியர்களால் அனுபவிக்க நேரிடுகிறது. அந்த மேஜைக்கு செல், இந்த மேஜைக்கு வா, பத்தர் வர வேண்டும் நகை அசலா என்று பார்க்க, நீங்கள் கேட்ட தொகை அதிகம் தரமுடியாது. இப்படி வங்கியின் அலட்டல் அதிகமாகத்தான் உள்ளது.

உங்களின் சொந்த பொருளை வைத்து பணம் வாங்குவதற்கு இலவசமாக உங்களுக்கு பணம் தருவதாக நினைத்துக் கொண்டு வங்கியும், வட்டி கடையும் போடும் நிபந்தனைகளுக்கும், ஆட்டங்களுக்கும் நாம் அடிபணிந்து பணம் வாங்க வேண்டுமா? சிந்திப்பீர்களா சகோதரிகளே! (இங்கு சகோதரர்களும் சிந்திக்க வேண்டும். பெண்கள் படும் சிரமங்களை நேரில் நீங்கள் கண்டால் வேதனையடைவீர்கள்.) (என் கணக்கில் பணம் எடுக்கச் செல்லும்பொழுதெல்லாம் இதை நேரில் பார்த்து வேதனையடைவேன். என் உறவினர்களை மட்டும் கண்டித்து நகையை அடகு வைக்க வங்கிற்கு வருவதை (சாதக பாதகங்களை கூறி) தவிர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்வேன். தீமையை கண்டால் தடுப்பது நமது கடமை. தீமையிலிருந்து விலக அவர்கள்தான் முயற்சி செய்ய வேண்டும்).
இவ்வளவு சிரமங்களையும் அனுபவித்து வட்டிக்கு பணம் வாங்குகிறீர்கள். வட்டி வாங்குவது மட்டும் பாவமில்லை, கொடுப்பதும் பாவம்தான் என்பதை அறியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. நாங்களா வட்டி? வாங்குகிறோம் எங்கள் அவசரத்திற்கு கடன் தர யாரும் இல்லை. அதனால் எங்கள் நகையை வைத்து பணம் வாங்குகிறோம். வங்கியில் நகையை வைத்துக்கொண்டு சும்மா கடன் தருவானா வட்டி கட்டத்தானே வேண்டும். நாங்கள் வட்டி வாங்கினால்தானே பாவம். வட்டியை கொடுக்கத்தானே செய்கிறோம். என்று நிறையபேர் நியாயம் பேசி வருகிறார்கள். இதில் ஐந்து வேளை தொழுபவர்களும், ஹஜ்ஜூக்கு போய் வந்தவர்களும் இது ஒன்றும் பெரிய பாவம் கிடையாது என்று சொல்லி வருகிறார்கள். (ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இந்த பதில்தான் கிடைக்கும்). இதற்கு காரணம் மார்க்கம் என்ன சொல்கிறது என்ற அறியாமைதான்.

வட்டியை உண்பவரையும், அதை உண்ணக் கொடுப்பவரையும், அதற்காக எழுதுபவரையும், அதற்கு சாட்சி சொல்பவர்களையும் நபி(ஸல்) அவர்கள் சபித்து விட்டு, 'அவர்கள் (குற்றத்தில்) சமமானவர்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி),புகாரி பாடம்: 24)

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் வட்டி வாங்கினால்தான் பாவம் என்று இல்லை. தாங்கள் வாங்கிய கடனுக்கு வட்டியை செலுத்தி வங்கி அல்லது தனியார் வட்டிகடைகளின் வியாபாரம் பெருகுவதற்கு தாங்களே உதவியாக இருந்தாலும் பாவம்தான். அப்படி என்றால் என்னதான் வழி என்று கேட்கிறீர்களா? நல்ல வழி ஒன்று உள்ளது. தங்களுக்கு தவிர்க்க முடியாத மிக மிக அத்தியாவசிய செலவுகள் என்று வரும்பொழுது (ஆடம்பர செலவு இல்லை) தங்களின் நகைகளை விற்று விடுங்கள். என்ன?????? நகையை விற்றால் வாங்க முடியுமா????? அடகு வைத்தாலாவது நம் நகை அடகில் இருக்கிறதே என்று நிம்மதியாக இருப்போம். சிறிது சிறிதாக பணத்தை செலுத்தி நகையை திருப்பி விடுவோம். விற்று விட்டால் வாங்க முடியுமா? என்று சொல்ல வருகிறீர்கள். (பல நேரங்களில் அடகு வைத்த நகையை வாங்கமுடியாமலே பறி கொடுத்துவிடுகிறோமே இதைப்பற்றியும் சிந்தித்து பாருங்கள்).

வட்டி கொடுப்பதும், வாங்குவதும் பாவம் என்று தெரிந்த பிறகு தங்களின் உலக லாபங்களுக்காக நகைகளை அடகு வைத்துக்கொண்டே இருப்பவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்: மறுமையில் வல்ல அல்லாஹ்வின் தண்டனை கடினமாக இருக்கும். இம்மையிலும் சோதனை ஏற்படும். மேலும் தாங்கள் வட்டிக்கு வைத்து வாங்கும் பணத்தைக் கொண்டு செலவழிக்கும் எந்த காரியத்திலும் பரக்கத் (அபிவிருத்தி) இருக்காது.


உதாரணத்திற்கு நமக்கு தேவை ஒரு லட்சம். இதற்கு வங்கியில் இரு மடங்கு மதிப்பு உள்ள நகையை அடகு வைக்க வேண்டும். இப்பொழுது என்ன செய்யலாம் சிறிய நகையாக இருந்தால் சில நகைகள் பெரிய நகையாக இருந்தால் ஒரு நகையை விற்றால் நமக்கு தேவைப்படும் பணம் ஒரு லட்சமும் கிடைத்து விடும். மேலதிகமான பணத்திற்கு ஒரு சிறிய நகையும் வாங்கி விடலாம். நமது பணத்தேவையும் தீர்ந்து விடும். நகைக்கு வட்டி கட்டும் பாவத்திலிருந்தும் விடுதலை. நகை ஏலம் போவதிலிருந்தும் நகை பாதுகாக்கப்படும். மேலும் எந்த கஷ்டத்திலும் வட்டியின் பக்கம் நெருங்க மாட்டேன் என்று முடிவெடுத்து அவசர தேவை வரும்பொழுது நகைகளை விற்று நம் காரியங்களை நிறைவேற்றினால் இதில் கிடைக்கும் நிம்மதியும், பரக்கத்தும் தங்களுக்கு தெளிவாக புரியும். சோதனை முயற்சியாக செய்து பார்க்கலாம்.


இரவல் நகை கடன் :

சில பெண்கள் தங்களின் தேவைகளுக்கு அடகு வைக்கமாட்டார்கள். ஆனால் உறவினர்கள், தெரிந்தவர்கள் இரவலாக நகை கேட்டால் (கணவரிடம் கூட அனுமதி வாங்காமல்) உடனே எடுத்து கொடுத்து விடுவார்கள். நாம் வங்கியில் அடகு வைக்கவில்லையே என்ற நிம்மதி வேறு. (கொடுத்த நகையை திருப்பி வாங்க பெரிய போராட்டமே நடக்கும்).

அடகு வைப்பதற்காக இரவல் நகை கொடுக்கும் சகோதரிகளே தெரிந்து கொள்ளுங்கள்: தாங்கள் வைக்காவிட்டாலும் வட்டி என்னும் பாவத்தில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். வட்டி என்னும் தீமையை தடுப்பீர்களா? அல்லது துணை போவீர்களா?

உறவினர்களிடம் இரவல் நகை வாங்கி வங்கியில் வைப்பவர்களே! எந்த தைரியத்தில் மற்றவர்களின் நகைகளை வாங்கி வங்கியில் வைக்கிறீர்கள்? கடன் வாங்கவே பல கட்டளைகள் மார்க்கத்தில் உள்ளபோது, பல ஆயிரம் பெறுமானமுள்ள நகையை சில ஆயிரத்திற்கு அடகு வைத்து பணம் வாங்கி, திரும்ப மீட்டு கொடுக்கும்பொழுது எவ்வளவு சிரமம் ஏற்படுகிறது என்பதை அனுபவித்த பிறகும் நிறையபேர் திருந்துவதில்லை. இதையே தொடர்ந்து செய்து வருகிறார்கள். இரவல் நகை வாங்கி அடகு வைப்பதை விட்டும் தவிர்ந்து வாழ்ந்தால் மிகப்பெரிய மனநிம்மதி கிடைக்கும். நிச்சயம் அத்தியாவசியமான காரியங்களுக்கு நகைகள் அடகு வைப்பதில்லை என்பது பரவலாக பார்த்து வரும் உண்மை. நகை கடனோ, இரவல் நகை கடனோ, பல தடவை  இந்த கடன் அவசியம்தானா? வட்டியிலும், கடனிலும் விழுந்து விடுவோமே என்று நன்கு சிந்தித்து முடிவெடுங்கள். வல்ல அல்லாஹ்விடம் கடனை விட்டு பாதுகாப்பு தேடிக்கொண்டே இருங்கள். கடனிலிருந்து மீள்வதற்கும் முயற்சி செய்யுங்கள்.


இன்ஷாஅல்லாஹ் வளரும்..

-- அலாவுதீன்.S.


Oct 27, 2010

இதை படிங்க முதல்ல - நன்றி மறப்பது நன்றன்று

வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். அது போல நமக்கு அல்லாஹ் வழங்கிய எண்ணிலடங்கா அருட்கொடைகள் அது திரும்பப் பெறப்படும்போது நமெக்கெல்லாம் புரிய வரும். உலகில் மனிதனாய் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்: அல்லாஹ் சிலரை வறுமையால் சோதிக்கின்றான்.சிலரை நோய்,நொடிகளால் சோதிக்கின்றான், இன்னும் சிலர்களை கடன் தொல்லைகளால் சோதிக்கின்றான்.

ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள். நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விடவோ சோதனைகுள்ளக்கப்படுகிறார்கள் என்று.

சரியாக சிறுநீர் வெளியேறாமல், வயது முதிர்ந்த ஒரு மனிதர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார், அங்கு அவருக்கு சிறுநீர் வெளியேற்றுவதற்கான கருவிகளைப் பயன்படுத்தி சிறுநீர் வெளியேற்றப்படுகிறது. சில நாட்களுக்குப்பின்பு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார், அவருக்கு செய்யப்பட மருத்துவத்திற்காக பில் கொடுக்கப்படுகிறது. அதனை பார்த்துவிட்டு பெரியவரின் கண்களில் கண்ணீர்த்துளிகள் வழிந்தோடியது, இதைப்பார்த்த மருத்துவர்கள், ஏன் பெரியவரே அழுகின்றீகள், என்று கேட்டதற்கு பதிலேதும் பேசாமல் மறுபடியும் அழத்தொடங்கினார். அருகில் உள்ள மற்ற உறவினர்கள் அனைவரும் மறுபடியும் கேட்க, கண்களைத்துடைத்தவாறு பெரியவர் சொன்னார், "நான் என்னிடம் கொடுக்கப்பட்ட மருத்துவ செலவைப்பார்த்து அழுகின்றேன் என்று யாரும் நினைத்து விடவேண்டாம், இரண்டு நாட்கள் சிறுநீர் வெளியேற்றியதற்காக என்னிடம் இவ்வளவு பணம் கேட்கின்றீர்களே, அருளும் அன்பும் உடைய எனது இறைவன், கடந்த 60 வருடங்களாக சிறுதும் தடங்கலின்றி சிறுநீர் வெளியாக்கியதர்காக இதுவரை என்னிடம் ஒரு பைசா கூட கேட்டு பில் அனுப்பவில்லையே! என்று எனது இறைவனின் அருளை நினைத்து அழுகின்றேன் என்றார்.

ஆக ஒருவருக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அருட்கொடைகள், திரும்பப்பெறப்படும்போதுதான் அதன் அருமை தெரிய வரும். உலக விஷயங்களைப் பொறுத்துவரை நமக்கு கீழ்நிலையில் உள்ளவர்களைப் பார்த்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் குணம் நம்மிடையே இருந்தால் நம்முடைய குறைகள் சற்றே நிமிடத்தில் மறைந்து விடும்.

அல்லாஹ் தன் திருமறையில் முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து ஹலாலான நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள். அல்குர்ஆன் - (16:114) என்று கூறியிருக்கிறான்.

கால் வழியால் அவதிப்படுபவர்கள் கால்களே இல்லாதவர்களைப் பார்த்து, தனக்கு கால்களை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல் வேண்டும்.

சிறுநீர் சீராக கழிக்க முடியாமல் அவதிப்படுபவர்கள், இரண்டு சிறுநீரகங்களும் செயழிழந்து உயிருக்காக போராடும் எத்தனையோ மனிதர்களைப் எண்ணிப் பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்துதல் வேண்டும்.

அதற்காக, நபி (ஸல்) அவர்கள் “நோய்க்கு மருத்துவம் செய்யுங்கள்” என்ற கருத்துப்பட கூறியிருப்பதை யாரும் மறந்து விடுதல் கூடாது

சொந்தங்களைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் நமக்கெல்லாம் தொலைபேசி எனபது இன்றியமையாத ஒன்று என்பதை நாம் அறிந்ததே. இதன் மூலம் நினைத்த மாத்திரத்திலேயே நாம் சொல்ல நினைப்பதை பரிமாறும் அளவுக்கு தொழில்நுட்பத்தை அல்லாஹ் நமக்கு அருளி இருக்கிறான் .

எனக்கு தெரிந்த ஒரு வாய்ப்பேச முடியாத நபர் துபாயில் வேலை செய்துவருகிறார் அவரால் தன் தாயிடமோ தந்தையிடமோ ஏன் தன் பாசமிகு மனைவியிடம் கூட அவரால் பேச முடியாது. எதாவது ஒரு செய்தியை தன குடும்பத்தாரிடம் சொல்லவேண்டுமெனில் சில தூரம் நடந்து வந்து தன் நண்பரிடம் விஷயத்தை விளக்கி தன் குடும்பத்தாரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்வார்.

அவருக்கு சத்தம் என்ற சொல்லுக்கு இதுவரை அர்த்தம் தெரியாது.

அவருக்கு தன் பாசமிகு தாய், தந்தை, மனைவியின் குரல்கள் எப்படி இருக்குமென்று தெரியாது

அவரால் தனக்கு என்ன நோய் ஏற்பட்டிருக்கிறது என்று கூட மருத்துவரிடம் விளக்கி கூற முடியாது

நம்மெல்லாம் அலாரம் வைத்து எழுந்திருப்பதுபோல் அவரால் எழுந்திருக்க முடியாது

இதுவெல்லாம் என் கண்ணிற்கு தெரிந்த சில விஷயங்களே, எனக்கு தெரியாமல் எத்தனை விஷயங்களிலோ அவர் படும் துயரத்தை அல்லாஹ் ஒருவனே அறிவான்.

எனக்கு இப்படி ஒரு குறையை அல்லாஹ் தந்துவிட்டானே என்று ஒரு முறை கூட அவர் சொல்லி நான் கேட்டதில்லை.

மாறாக சில சமயங்களில் அல்லாஹ் எனக்கு அழகிய கண்களைக் கொடுத்து இருக்கின்றானே என்பதை நினைத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியது என் நினைவிற்கு வருகிறது.

அப்படியானால் நமது உடல் உறுப்புக்களை ஒரு சிறிதும் குறை இல்லாமல் படைத்த நம் அல்லாஹ்வுக்கு நாம் எவ்வளவு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம் என்பதை சிந்தித்து அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் அடியார்களாக ஆவோமாக ஆமீன்

நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் - 4:147)

-- Azeezudheen.

Oct 26, 2010

நாம் பிடித்த புலிவால்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

பிறக்க ஓர் இடம்!                              
பிழைக்க ஓர் இடம்!
இதுதான் என் சமுதாய
மக்களின் வாழ்வாகிவிட்டது!     
நம் முன்னோர்களுக்கோ
பர்மா, ரங்கூன், மலேசியா!
எங்களுக்கோ வளைகுடா!
இனி ஓர் நாடு கண்டுபிடித்தால்
அங்கும் தொடருமா?
எங்கள் வாரிசுகள்?

வளைகுடா வசந்தம் என்றார்கள்!
முன்னால் கால் வைத்த
மூத்த குடி(அடிமை)மகன்கள் நாம்!
வைத்த காலை எடுக்க முடியவில்லை
ஸ்டெப் கட்டிங் தலையுடன் வந்த
க்கு இன்றோ நரையும், வழுக்கையும்!
சில்வர் ஜூப்ளி முடிந்து விட்டது
ம்முடைய பயணமோ
திக்குத்தெரியாமல்
வளைகுடாவை நோக்கியே!

ஊர் சென்றால் நம்
சுமைகளை சுமந்து செல்வதில்
அலாதி ஆனந்தம் நம்
கையெல்லாம் சிவக்க சுமப்போம்
அடுத்த தடவை சுதந்திரபறவைதான்
ஒரே சுமைதான்! நம் வைராக்கியம்
காற்றோடு போகும்! மீண்டும் சுமை!

மனைவி மக்களை பார்த்தால்
மன சந்தோஷம் ஆனால்
நம்முடைய கையிருப்பும்
எடுத்த விடுப்பும்
கரைய கரைய மனதில் பீதி!
வெளியிலோ புன்(பொய்)சிரிப்பு!

எத்தனை கொடுத்தாலும்
போதுமென்ற மனம் இல்லை
இதுதான் கொண்டு வந்தாயா?
நம் உள்ளமோ வேதனையில்
கொடுத்த பொருள் நன்றாக
இருந்தது என்று சொல்லி விட்டால்
தங்கப்பரிசு வாங்கிய சந்தோஷம்!
சொல்லத்தான் மனமில்லை!

கண்ணீரோடு குடும்பத்தை
பிரிந்த நாம் சொல்வது
இரண்டு வருடம்தான்!
முடித்து விட்டு போய்விடுவோம்
பல பிரச்சனைகளில்
மறந்தே விடுவோம்!
இதுதான் தொடர்கதையான
வளைகுடா வாழ்க்கை!


சகோதரிகள் திருமணம் முடித்து
வீட்டையும் கட்டி விட்டு
தொழிலுக்கு பணத்தோடு
ஊரில் தங்கிவிட வேண்டும்!
எல்லாம் முடிந்து
நாமும் குடும்பத்தலைவன்
ஆன பிறகு மீண்டும்
அதே பழைய இடம்
வீடு பிள்ளைகள் திருமணம்
ஊரில் நிரந்தரம் என்பதும்
கனவாய் போனதே!


வழி அனுப்ப வாகனத்தில்
வந்த பிள்ளைகள் முகத்தில் மகிழ்ச்சி!
விமான நிலையத்தில் நாம்
உள் நுழைவதை பார்த்தவுடன்
அவர்கள் முகத்திலோ ஒரு சோகம்!
இங்கு வந்தவுடன் தொலைபேசி அழைப்பு
ஏன் வாப்பா உள்ளே சென்ற தாங்கள்
திரும்பி வரவில்லை என்ற தேம்பல் அழுகை
என்ன சொல்லி சமாளிக்க!
நம் நெஞ்சோ சோகத்தால் கனக்க!
குடும்பத்தோடு சேர்ந்து வாழ வழி
இல்லையா என்று உள்ளம் கலங்க
என்ன செய்வோம் எத்தனை காலம்
இந்த அடிமை வாழ்க்கை!
நாம் பிடித்தது புலி வால் அல்லவா?

ஊருக்கு சென்று தொழில் வைக்கலாம்
எல்லோரும் சொல்லும் வார்த்தை!
சென்றவர்கள் சில காலம் கழித்து
மீண்டும் வளைகுடா வாழ்க்கையில்!
ஊரில் நிரந்தரமாகி விட வேண்டும்
என்ற உறுதி இவர்களைப் பார்த்தால்
குலைந்துவிட என்ன செய்ய
மீண்டும் மனப்போராட்டம்!

ஊரில் சிறு தொழில் வைக்காதே
பெரிதாக தொழில் தொடங்கு
ஆலோசனை இலவசம்!
பணத்தை எந்த மரத்தில் பறிக்க
காலம் இப்படியேதான் போகுமா?
குடும்பத்தோடு சேர்ந்து
வாழ்வது எப்பொழுது?


கல்வி இல்லாமல் வந்தவர்கள்
கஷ்டப்படும் நிலையை பார்த்து
கல்வியை கற்றுக்கொண்டு வா!
என்றார்கள், கல்வி கற்று வந்ததும்
நல்ல வேலை மனைவி மக்களுடன்
வாழ்க்கை சிலருக்கு!
கல்வி கற்ற பலர் தனிமரமாக!


ஊரில் கணக்கில்லா சொத்து
உள்ளவனை பார்த்து
ஏன் இங்கு வந்தாய் என்றால்
இங்கு உள்ள சுகாதாரம்
ஊரில் வருமா அதனால்தான் என்றான்?
இங்கு வந்து வாழும்
குடும்ப பெண்களிடம்
கேட்டால் ஊர் போல் வருமா
வளைகுடா என்றார்கள்!


நாம் இழந்தது என்ன?
தாய் தந்தை சேவையை!
குடும்பத்தின் சுக துக்கத்தை!
நம் உறவுகளின் அனுசரணையை!
தென்றல் வீசும் காற்றை!
மழலையின் வார்த்தையை!
மழையின் மண்வாசனையை!

பள்ளி விட்டு வந்ததும்
பள்ளியின் கதை சொல்ல
தந்தையை தேடும்
பிள்ளை செல்வங்களை!
தந்தையுடன் செல்லும்
பிள்ளைகளை பார்த்து
நம் தந்தை அருகில்
இல்லையே என்று வாடும்
நம் பிஞ்சுகள் இழக்கும் சந்தோஷத்தை!

வாகனத்தில் செல்லும்பொழுது
சாலைகளில் இருபுறமும்
பசுமை மரங்களோடு
சேர்ந்து வரும் தென்றலை!
இன்னும் நிறைய!
பணம் உண்டு இங்கு
நம் மனம் மட்டும் ஊரில்!
இயந்திரத்தனமாக தொடர்கிறது
புலிவாலை பிடித்த வாழ்க்கை!

-- அலாவுதீன். S

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More