
அமெரிக்கா அதன் நேச நாடுகளும் மற்றும் நேசமில்லாத நாடுகளும் தன் ஆட்சி, அதிகார அடக்குமுறையாலும், ஆணவத்தாலும் திரைமறைவில் செய்து முடித்த, இன்றும் செய்து கொண்டிருக்கும் கணக்கிலடங்கா கொலைபாதக செயல்களையும், கோடிக்கணக்கான ஊழல்களையும், பல ரகசிய ஆவணங்களையும் தன் இணைய தளம் மூலம் 'விக்கிலீக்ஸ்' வெளியுலகிற்கு கசிய விட்டிருக்கிறது.'அடப்பாவி இவனா அவன்? இப்படி செய்தான்?' என சாதாரன மக்களும் வியப்பால் தன் மூக்கில் கை வைத்து ஆச்சரியப்படும் பல அவலங்களையும், செய்து முடித்த பல கொடூரங்களையும் அவிழ்த்து விட்டிருக்கிறது இந்த விக்கிலீக்ஸ் இணையதளம்.'பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான்' என்பது பழைய மொழியாக இருந்தாலும் அதை தன் கோடூர முகத்தால் அமெரிக்கா ஏகாதிபத்திய நாடுகள்...