
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...முந்திய பதிவில் குறிச்சொல்லுபவர்கள் பற்றியும், இஸ்லாத்தில் அதற்கு இடமில்லை என்பதைப் பற்றியும் சொல்லியிருந்தேன். குறி, ஜாதக (சுயதேவைத்) தொழில் செய்யும் தில்லுமுல்லுகளை ஆதாரத்துடன் பிடிபட்டவரைப் பற்றி சுவாரசியசமாக சொல்லப்போகிறேன். அது மட்டுமல்லாது சின்ன(த் திரையில்லாத) நாடக வடிவிலும் சில விசயங்களையும் நாம் பார்போம், இனி....எங்க ஏரியாவில நொண்டி ஏகாம்பரம்னு ஒருத்தர்(கால் ஊனம்) ஜோசியம் சொல்லி வந்தார் அவரிடம் வெளியூர் மற்றும் நம்மூர் மாற்று மதத்தினரும் வந்து ஜோசியம் குறி கேட்டு வந்தனர். அதே வேளை நம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் வந்து அவரிடம் குறிகேட்டுப் பரிகாரம்(?) வாங்கிச் செல்வர். அவருடைய பையன்கள் எங்களுடன் படித்த தோடல்லாமல்...