
" எந்த மனிதனுக்கு அவனுடைய தீய செயல் அலங்காரமாக்கப்பட்டிருக்கிறதோ, மேலும் அதனை அவன் நல்லதென்று கருதிக் கொண்டிருக்கின்றானோ (அந்த மனிதனின் வழிகேட்டிற்கு எல்லையேதும் உண்டா என்ன?)திண்ணமாக, அல்லாஹ் தான் நாடுவோரை நெறி பிறழச் செய்கின்றான். மேலும், தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகின்றான்...". (அல்குர்ஆன்' 35:8)மனிதனைப் படைத்த இறைவன் மாபெரும் கொடையாளி; தான் எழுதுகோலைக் கெர்ணடு (எழுதக்) கற்றுக் கொடுத்தான்; இன்னும், அவன் வாழ வேண்டிய வாழ்க்கை நெறியையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு எது நன்மையளிக்க...