Oct 4, 2010

நான் தீவிரவாதி!‏


என் மார்க்கத்தின் மேல் கொண்ட பக்தி தீவிரம்,

என் இனத்தின் மேல் கொண்ட காதல் தீவிரம்,

என் உறவுகள் மேல் கொண்ட அன்பு தீவிரம்,

என் ஊரின் மேல் கொண்ட அக்கறை தீவிரம்,

என் நட்பின் மேல் கொண்ட நம்பிக்கை தீவிரம்,

மற்ற உயிரின் மேல் என் கருனை தீவிரம்,

என்னைப்பற்றி எனக்குள் ஆர்வம் தீவிரம்,

ஆம்! நான் தீவிரவாதிதான்!!!!!.

அடிப்படை அன்பு ஒன்றே வண்மம் அல்ல.

-crown

22 comments:

அட நீதான் இந்தக் கவிதைத் தீவிரவாதியா ?

அதிரையின் காக்காமார்களா!
அதிரை வரலாறை படித்து கருத்து சொல்லுங்கள்...
உங்கள் கருதுக்கள்தான் இன்னும் செழுமைப்படுத்த உதவும். http://adiraihistory.blogspot.com/

அதிரை நிருபரிடம் கொண்ட காதல் தீவிரமில்லையா?

//அடிப்படை அன்பு ஒன்றே வண்மம் அல்ல.// அப்படி அது வண்மமே என்று வாதிட்டால் அதுவே எமது வாழ்கை நெறி என்று நெஞ்சு நிமிர்த்துவோம்.

என்னே தைரியம்!!! அந்த தைரியத்தை எழுத்தில் வடிக்க என்னே சாதுரியம்!!!

தம்பி crown, இதுதான் புரட்சிக் கவிதை.
தொடர்ந்து விதையுங்கள். அறுவடைக்கான விடியல் வெகு தூரத்தில் இல்லை.

அஸ்ஸலாமு அலைக்கும்.கருத்திட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.சகோ.தாஜுதீனுக்கு நான் தீவிரவாதி(கள்) என்பது பன்னையில் அமைந்துள்ளதால் நான் தீவிரவாதி என இருக்கனும்.அப்படி நாம் என்றால்தான் அங்கு பன்மையில் அமையும் எனக்காக திருத்திவிடவும்.( நான் என்பது நாம் ஆகும் போதே பொதுவுடமையும் ,சமத்துவமும் வந்துவிடுகிற் ஆஹா நான் என்பது நாமாவதும் அந்த நாமில்தான் நான் என்பது அடங்கிவருவதும் இனிமை,இனிமை இதுவும் கவிதை சிந்தனைத்தான்.

sabeer on Tuesday, October 05, 2010 12:57:00 AM said...

//அடிப்படை அன்பு ஒன்றே வண்மம் அல்ல.//

-----------------------------------------------அப்படி அது வண்மமே என்று வாதிட்டால் அதுவே எமது வாழ்கை நெறி என்று நெஞ்சு நிமிர்த்துவோம்.
------------------------------------------------
நெஞ்சுரம் கொண்டு, நேர்கொண்ட பார்வையும்,புரட்சியை தாங்கிய சிந்தனையும் கொண்டு நாம் நம்மை அடையாளம் காட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.அதற்குறிய ஆரம்ப அறிகுறியாய் வாசகர் கருதுக்கள் நல்ல செறிவுள்ள விதையாய் விதைக்கப்படுகிறது இங்கே.மிக்க சந்தோசம்.அதில் விகடமும் உண்டு,விவேகமும் உண்டு.ஆக்கத்தினை(எழுதிய கட்டுரைகள்) அரசு என உவமை கொண்டால் கருத்து என்பது அதன் அரனாகி(மதில் சுவராக மிகப்பெரிய கோட்டை) அந்த கருத்திட்டவர்கள் சமரர்களாக(வீரர்கள்) நம் கருத்து காக்கும் மாவீரர்களகவும் நாளை சமுதாயம் காக்கும் அரனாகவும்(அல்லாஹ் துணைனிற்பானாக ஆமீன்) . நம் கருத்தே நாளை அரசாளும்(இன்சா அல்லாஹ்) என்பது விளையும் பயிரின் நுனி போல் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

தம்பி crown, இதுதான் புரட்சிக் கவிதை.
தொடர்ந்து விதையுங்கள். அறுவடைக்கான விடியல் வெகு தூரத்தில் இல்லை.
--------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் நலம் , நலமறிய விழைகிறேன்.சரியா சொன்னிக்க ஆனால் விடியல் காலையில் சுபுஹு தொழுதப்பின் நண்பர்களுடன் இப்படி ஏதாவது இலக்கியம் பேசலாம்னு வாயத்தொரந்தா அவர்கள் சொல்வது ஏன்டா காலங்காத்தாலைல அறுக்குற(காலங்காத்தால=விடியல்.,அறுக்குற=அருவடை)இப்படிதான் நம்மவர்களின் ரசனை இருந்திருக்கு.இப்ப மாறியாச்சா????

அஸ்ஸலாமு அலைக்கும்.இது சுய விளம்பரம் அல்லது புராணமல்ல அதிரையின் வரலாறு எழுதி வருவது என் உடன் பிறந்த சகோதரன் என் தம்பி ஹிதாயதுல்லாஹ்.படித்துவிட்டு நிறை,குறை சுட்டிக்காட்டவும்.இதை நான் வெளிப்படுத்த காரணம் இது போல் சமுதாயத்துக்கு பல நல்ல எழுத்தாளர்கள் உருவாகுவார்கள் என்பதாலேயே!எல்லாப்
புகழும் அல்லாஹுக்கே!.

// நான் தீவிரவாதி(கள்) என்பது பன்னையில் அமைந்துள்ளதால் நான் தீவிரவாதி என இருக்கனும். //

கீரிடக் கவியே திருத்தம் பதிவுக்குள் வந்துவிட்டது ! தொடரட்டும் கவிதையின் வீரியம் !

chinnakaka on Tuesday, October 05, 2010 12:51:00 AM said...
அதிரை நிருபரிடம் கொண்ட காதல் தீவிரமில்லையா? //

அதானே ?
தம்பி(கள்) காக்கா(மார்களை) நேசிப்பதிலும் தீவிரம்தானே கீரீடக் கவியே ?

சாரே ! அடிச்சி பொலிச்சல்லோ!!!

கிரவுன் என்ற புனைப்பெயர் சூடி இருப்பதாலயோ என்னவோ....உங்கள் ஆதங்கத்தில் (கவிதையில்) நெஞ்சுரம் தெரிகிறது....அருமையாக விளக்கி உள்ளீர்கள் நமது தீவிரவாத சிந்தனையை

தீவிரவாதிக்கு புது அர்த்தம் கண்டுபிடித்தமைக்கு பாராட்டு

வரிகள் அருமை

இனி யாரும் தீவிரவாதினு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்...

அப்போ இன்றையில் இருந்து நானும் தீவிரவாதியா மாறிட்டேன்!!

அப்பப்பா கிரௌன்கு உள்ளே இத்தனை விஷயமா?

Shahulhameed on Tuesday, October 05, 2010 6:33:00 PM said...
அப்போ இன்றையில் இருந்து நானும் தீவிரவாதியா மாறிட்டேன்!///

இவ்ளோ நாளா உங்கள அப்படித்தானே நெனச்சு இருந்தேன்! சரி கீரிடக்கவி உண்மைய வரவச்சுடா(ர் ன்)

வார்த்தைகளை தீ தீயாய் அனல் கவிதையாக்கி. நம் அனைவரையும் சில வரிகளில் சிந்திக்கவைத்து, அறியாத பல கோடி மக்களுக்கு திவிர(ம்)வாதிக்கு நல்ல அர்த்ததை தந்த எங்கள் அன்பு சகோதரர் தஸ்தகிருக்கு மிக்க நன்றி.

Shahulhameed on Tuesday, October 05, 2010 6:33:00 PM said...

அப்போ இன்றையில் இருந்து நானும் தீவிரவாதியா மாறிட்டேன்!!
-------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் .சகோ.சாகுல் எழுதியிருந்தா இப்படிதான் எழுதி இருப்பார் என நினைக்கிறேன்.வேட்டையில் எனது வேட்கைத்தீவிரம்.இது எந்த ஒரு அசைவ வேட்டையையும் சொல்லலாம்(சபிர்காக்கா அவை யாதன? அவை மரியாதையால் குறிப்பிடாமல் விடுகிறேன்)

hahulhameed on Tuesday, October 05, 2010 6:36:00 PM said...

அப்பப்பா கிரௌன்கு உள்ளே இத்தனை விஷயமா?
--------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.தலைக்கு மேல் தானே இந்த கிரீடம் இருக்குது????அய்யா தலைக்குள் எங்களுகும் விசயம் இருக்குதுன்னு இப்பவாச்சம் ஒத்துக்கிட்டியல! நன்றி.

//கிரவுன் என்ற புனைப்பெயர் சூடி இருப்பதாலயோ என்னவோ....உங்கள் ஆதங்கத்தில் (கவிதையில்) நெஞ்சுரம் தெரிகிறது....அருமையாக விளக்கி உள்ளீர்கள் நமது தீவிரவாத சிந்தனையை
//

Taj mean Crown

எங்க பெயரின் அர்த்தமும் "கிரவுன்" தானுங்கோ.

அந்த கிரவுன் சிந்தனையும் இந்த கிரவுன் சிந்தனையும் ஒன்றே

தாஜுதீன் on Tuesday, October 05, 2010 7:02:00 PM said...

வார்த்தைகளை தீ தீயாய் அனல் கவிதையாக்கி. நம் அனைவரையும் சில வரிகளில் சிந்திக்கவைத்து, அறியாத பல கோடி மக்களுக்கு திவிர(ம்)வாதிக்கு நல்ல அர்த்ததை தந்த எங்கள் அன்பு சகோதரர் தஸ்தகிருக்கு மிக்க நன்றி.
------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ.தாஜுதீன் நன்றிக்கு நன்றி.இது நம்(முஸ்லிம்)மொவுனத்தின் கோப வெளிப்பாடு,இனிமேல் நீங்க வேண்டும் நம் மேல் உள்ள ஐய்யப்பாடு,இதை மறுத்துவிட்டுதான் நம்மை தீவிரவாதியென்று கூப்பாடு!இதை மாற்றத்தான் இப்படி இடையில் அவ்வப்போது செய்ய வேண்டியுள்ளது ஏற்பாடு.

தாஜுதீன் on Tuesday, October 05, 2010 7:19:00 PM said...

//கிரவுன் என்ற புனைப்பெயர் சூடி இருப்பதாலயோ என்னவோ....உங்கள் ஆதங்கத்தில் (கவிதையில்) நெஞ்சுரம் தெரிகிறது....அருமையாக விளக்கி உள்ளீர்கள் நமது தீவிரவாத சிந்தனையை
//

Taj mean Crown

எங்க பெயரின் அர்த்தமும் "கிரவுன்" தானுங்கோ.

அந்த கிரவுன் சிந்தனையும் இந்த கிரவுன் சிந்தனையும் ஒன்றே.
------------------------------------------------
இந்த கிரவுன்(ordinary),அந்த கிரவுன் (isalam so this is special)

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More