Oct 31, 2010

மூடப்பழக்கம் மண்மூடிப்போகட்டும் - 2

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

முந்திய பதிவில் குறிச்சொல்லுபவர்கள் பற்றியும், இஸ்லாத்தில் அதற்கு இடமில்லை என்பதைப் பற்றியும் சொல்லியிருந்தேன். குறி, ஜாதக (சுயதேவைத்) தொழில் செய்யும் தில்லுமுல்லுகளை ஆதாரத்துடன் பிடிபட்டவரைப் பற்றி சுவாரசியசமாக சொல்லப்போகிறேன். அது மட்டுமல்லாது சின்ன(த் திரையில்லாத) நாடக வடிவிலும் சில விசயங்களையும் நாம் பார்போம், இனி....

எங்க ஏரியாவில நொண்டி ஏகாம்பரம்னு ஒருத்தர்(கால் ஊனம்) ஜோசியம் சொல்லி வந்தார் அவரிடம் வெளியூர் மற்றும் நம்மூர் மாற்று மதத்தினரும் வந்து ஜோசியம் குறி கேட்டு வந்தனர். அதே வேளை நம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் வந்து அவரிடம் குறிகேட்டுப் பரிகாரம்(?) வாங்கிச் செல்வர். அவருடைய பையன்கள் எங்களுடன் படித்த தோடல்லாமல் , அவரின் மற்றுமொரு மகன் எனக்கு கணக்கு வாத்தியார் நான் அவருக்கு கவிதை வாத்தியார் ஆதலால் அந்த குடும்பம் எனக்கு நன்கு பரிச்சயம்.

ஒருநாள் அவர் வீட்டில் கணக்குப் பாடத்தின் டியூசன் நடந்து கொண்டிருந்தது. அந்த தெருவில் ஒரு முஸ்லிம் பெரியவர் இருந்தார்கள் நல்ல தைரியசாலி அவர் ஜோசியக்காரவீட்டுக்கு வந்தார். எங்களுக்கெல்லாம் ஆச்சரியம் ஏன் இவரு இங்கே வர்ராரு இவரும் ஜோசியம், குறிகேட்பாரோ? சந்தேகம் நாங்கள் அமைதியாக கவனித்து கொண்டிருந்தோம். வாத்தியாரும் குளித்துவிட்டு வருவதாய் சொல்லி சென்றிருந்தார். ஆகவே என்ன நடக்குதுன்னு பார்க்க ஆவலாக இருந்தோம். சிலர் வெளியூரிலிருந்து வந்திருந்திருந்தார்கள்.

அந்த பெரியவர் வந்ததும் ஜோசியருக்கு ஒரே பல்.

"என்ன .... இங்கே !?"

"எப்படி நீர் அக்கம் பக்கதிலேதான் இருக்கிறீர் இங்கே எல்லாம் எட்டி பார்க்க மாட்டீரே என்ன அத்திபூர்தார்போல????" (இருவரும் ஒரே வயதுடையவர்கள்)

"என்னப்பா பன்றது தேவை இருந்தாதான் வரமுடியும் நீயும் சும்மா வந்தா இப்படி வரவேற்பியா?"

"என்ன இப்படி சொல்லிட்டீர் ?"

"அது இல்லப்பா நீயும் எப்பவும் பிஸியா ஆட்களுடன் இருப்பே அதான், ஆனா இப்ப எனக்கு ஒரு காரியம் ஆகனும்!"

"சொல்லும் பேஸா செஞ்சிடலாம், யாருக்காவது முகமாத்து(????) பன்னனுமா? செய்வினை செய்யனுமா?"

"அப்படியெல்லாம் இல்லப்பா எங்கவீட்டு மாடு காணாப்போச்சு யாரவது திருடிக்கிட்டு போய்டாங்களா? இல்ல எந்த திசையிலாவது மேஞ்சுக்கிட்டு இருக்கான்னு பாத்து சொல்லனும்"

"சரி கொஞ்சம் பொறு வோய்..."

சொல்லிட்டு தன் மனைவியை கூப்பிட்டு குரல் கொடுத்தார் "போய் சாமிபடதுக்கு பக்கத்துல வெத்தல பாக்கு இருக்கு, அதோட மையும் இருக்கு எடுத்துகிட்டு வா !"

மனைவி இரண்டையும் எடுத்துகிட்டு வந்ததும், வந்திருந்த வெளியூர்காரங்க கிட்ட கொஞ்சம் காத்திருக்கும் படி சொல்ல அவர்களும் தலையாட்டி விட்டு இவர் மை போடுரத வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சாங்க.

வெத்திலையில் கருப்பா மைதடவிட்டு நம்ம பெரியவர் கையில் ஏதோ பொட்டலம் கொடுத்து இதை நான் சொல்றவர கெட்டியா பிடிச்சுக்குங்க என்றார். ஏகாம்பரம் ஏதோ கொஞ்ச நேரம் முனுமுனுத்தார் பிறகு மாடு எங்கே இருக்கு என்பதை விவரிக்க அரம்பித்தார்.

"மேக்காலா 60 கீ,மீ. தள்ளி ஒரு குளத்துல புல் மேஞ்ஜுகிட்டு இருக்கு யாரும் திருடிக்கிட்டுப்போகலா..."

"அப்படியா சந்தோசம் ஆனா உமக்கு ஒரு விசயம் சொல்லனும்னு" என்று பெரியவர் சொல்ல ...

"என்னாவோய்..."

"உனக்கு ஏன் இந்த ஏமாத்து பொலப்பு, என் மாடு எங்கேயும் கானாப்போகலா உன் வீட்டுக்கு எதுத்தாப்ல உள்ள போன் போஸ்ட்லதான் கட்டி வச்சிருக்கேன் நீ எல்லார்டையும் காசு புடிங்குறத பாக்காலாம்னுதான் வந்தேன் அப்புறம் நீ யாருக்கு வேனா ஜோசியம் பாரு ஆனா முஸ்லிம் யாருக்காவது பாத்தா உன் மறுகாலும் ஒடச்சுடுவேன்னு" சொல்லிட்டு வேகமா அசிஙமாதிடிட்டு போனார்.

ஏகாம்பரத்துக்கு திருடனுக்கு தேள் கொத்துனாமாறி ஆச்சு.அவர மூஞ்சிய அப்ப பார்கனுமே?? ஹஹ ஹஹ் ஹஹ்

....பசங்கலேல்லாம் இதைப்பார்த்ததும் நம்ம வாத்தியார் அவசர அவசரமா அன்று டியுசனை கேன்சல் செஞ்ஜுட்டார். பாவம் அந்த வெளியூர் காரங்களும், அப்பாவி மக்களும்.

குறி சொல்லும் பெண்னை பற்றி எழுதிய பின் நான் விசாரித்தேன் அவர் இன்னும் அந்த வேலையைதான் செய்கிறார் என்றும் ஆரம்பத்தில் காசுவாங்காமல் செய்தவர் இப்ப காசு வாங்குவதாகவும் அவரின் வீட்டின் முன் மாலை 6 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை உள்ளூர் வெளியூர் காரர்கள் டோக்கன் வாங்கி காத்திருக்கவும்ன்னும் கேள்விப்பட்டேன்.இவர் இரவில் தான் பெரும்பாலும் குறி சொல்வாராம். அதுவும் வெள்ளி இரவு, புதன் இரவுன்னு கணக்கு உண்டாம் (ஏ.ஆர்.ரஹ்மான்னு நினைப்பு இரவுலதான் குறி சொல்வாராம்) அந்த பெண்ணின் பெயர் மந்திர அம்மான்னு சொன்னங்க (இத சேவைன்னு நினைத்து செய்ராங்களோ என்னவோ).

ரொம்ப நாளைக்கு முன்னே நான் கேள்விப்பட்டது. ஒரு நாள் (அவுலியாவின் ஆவி மந்திர அம்மா) பச்சதலப்பா கட்டுன ஒரு ஆளை கணவுல பாத்தாங்களாம் அந்த ஆளுக்கு 400வயசு அதாவது ஒரு குறிப்பிட்ட வீட்டை பத்தி சொல்லி அந்த வீட்ல யாரோ செய்வினை செஞ்சிருக்காங்க அத எடுக்கனும் அப்படி எடுக்கலன்னா அந்த வீட்ல எட்டு நாள்ல ஒருதர் மொவுதா போயிடுவாங்களாம் எனவே என்னை அங்கே கூட்டிகிட்டுப்போங்கன்னு சொல்ல அந்த பெண்ணோட கணவன் (அப்படிண்டு ஒரு கையாள்) மறுபேச்சு பேசாம உடனே ஆட்டோவில மந்திர அம்மாளை அழைத்துகொண்டு அந்த வீட்டுக்கு போனார்.

அந்த வீட்டு வாசப்படிய அடஞ்சதும்..

"யாரு வீட்ல நான் மந்திர அம்மா வந்திருக்கேன் உங்க வீட்ல கிணறுக்குப் பக்கத்தில யாரோ செய்வினை செஞ்சி பொதச்சிருக்காங்க அப்படி அந்த செய்வினைய எடுக்கலான்னா, எட்டு நாள்ல உங்க வீட்ல யாராவது மவுத்தாயிடுவாங்க" என்று சொல்ல..

அந்த வீட்டு அம்மாவுக்கு கையும் ஓடல காலும் ஓடல. "என்னம்மா சொல்றே, உனக்கு யாரு சொன்னா என் பிள்ளை வந்தா சத்தம் போடுவான் இதல்லாம் அவனுக்குப்பிடிக்காது".

"ஏன் ராத்தா பயப்படுறியோ, எஜமான் தான் கணவுல வந்து சொன்னங்க உங்க வீட்ல செய்வினை செஞ்சிருக்குன்னு அதனாலதான் நான் ஓடிவந்தேன்."

"சரிவுல என்னவோ சொல்றே, புள்ள வந்தான்னா சத்தம் போடுவான் உடனே ஆகவேண்டியதை பாரு".

"சரி ராத்தா எலுமிச்சம் பழம் இருந்தா குடுங்க கொஞ்சம் உப்பும், டீஸ்பூனும் குடுங்க, (சர்பத் போடவானு சகோ.ஷஹுல் கேட்பது விளங்குகிறது) ராத்தா மம்முட்டி கொடுங்க, இந்தாங்க மசமசன்னு நிக்காம மம்முட்டி வாங்கிட்டு வாங்க நான் சொல்ற இடத்துல பள்ளம் வெட்டனும்".

மம்முட்டியும் வந்தது. மந்திர அம்மா தன் காலால் கோடு போட்டபடி ஒரு இடத்துக்கு வந்து, "ஏங்க இந்த இடத்தில் பள்ளம் தோண்டுங்க..."

"சரிவுல.."

"ஊட்டு காரவோல வர சொல்லுங்க அப்பவாச்சும் நாம சொன்னது சரியான்னு தெரியட்டும்"

மந்திர அம்மாவின் மாப்புள முதன் முறையா குரல் குடுத்தார்.

"அதெல்லா வேனா தம்பி நாம்ம புள்ளையல்வோ நாம நம்பவில்லைண்ட... யார நம்புறது" (காரணம் அதுவல்ல செய்வினை தாவிடும்னு பயம்... அபூஇப்றாகிம் கேட்பார் ..கிரவுன் நீளம் தாண்டுதலா?அகலம் தாண்டுதலா?)

செயல் வீரர் (காமராசர்) மந்திர அம்மாவின் கணவர் தோண்ட ஆரம்பிச்சார் ஒரு அடி தோண்டியிருப்பார் வெள்ள துணி சுத்தி ஏதோ தெரிந்தது.... உடனே மந்திர அம்மா "எஜமானே உங்க வார்த்தைய உண்மையாக்கி ராத்தாவூட்ட காப்பத்திடியல (நகூதுபில்லாஹ்) உங்களுக்கு நாகூருக்கு வந்து என்ன(எண்னெய்) விளக்கு ஏத்துரேன். ராத்தா இப்ப பாத்தியலா எந்த கெட்டு போவாரோ உங்க ஊட்ல எலவு விழனும்னு செய்வினை செஞ்சிருக்காங்க, யாரு செய்த புண்ணியமோ நல்லது நடந்துச்சு..."

"ஆமா மந்திர அம்மா, நீயும் திடுதிப்புன்னு வந்து சொன்னதும் எனக்கு என்ன செய்யுறதுன்னு தெரியல கொஞ்சம் நீயும் உன் மாப்புளையும் தேத்தனி குடியேன்."

"வேண்டா ராத்தா வூட்டுக்குப்போகனும் வெளியூர் காரவொ ரெண்டு பேருக்கு யாரொ மருந்து உட்டுருக்காகலாம் அதப்போய் எடுக்கனும்.."

"நல்ல இருபவுல மந்திர அம்மா, இங்க வா(ரூமிற்கு"

கூட்டிபோய் கையில ஏதோ தினிக்கிறாங்க... வந்த காரியம் நல்ல படியா முடிந்த சந்தோசம் மந்திரம்ம முகத்துல...

"ராத்தா கொஞ்சம் ஆட்டோவுக்கு போன் போட்டு சொல்ல முடியுமா?"

அந்த வீட்டுகாரம்மா போன் போட போறாங்க செயல் வீரர் மந்திரம்மாவைப் பார்த்து புன்சிரிப்பு சிரிக்கிறார்.

இது நடந்து பல வருடங்கள் இருக்கலாம், ஆனால் பல மேடைகள் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருந்தும் இன்னும் வியாபார நோக்கில் தகடு, தாயத்து, செய்வினை, மந்திரம், குறி சொல்றது போன்றவைகள் நம் மக்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பது தான் வேதனை. இவைகளை நம் மக்களிடம் மீண்டும் மீண்டும் எடுத்துச்சொல்லி, மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்கும் அறிந்தும் அறியாத நம் மக்களை நேர்வழி படுத்த நம்மால் முடிந்தவரை விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் அனைவரும் முயற்சி செய்யலாமே. அல்லாஹ் போதுமானவன்.

(அங்கு எப்படி அந்த செய்வினை வந்தது யோசிச்சி வைங்க அடுத்த பதிவில் சந்திக்கலாம் சந்திக்கலாம்)

இன்ஷாஅல்லாஹ் தொடரும்...

-- CROWN

<-- மூடப்பழக்கம் மண்மூடிப்போகட்டும் 1


 
அன்பானவர்களே,

மேலே பதியப்பட்ட ஆக்கத்தில் சில பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூட நம்பிக்கைகளை அறவே அகற்றப்பட வேண்டும் என்ற நோக்கதில் எழுதப்பட்ட இந்த ஆக்கத்தில் செல்லப்பட்ட நபர்கள், அவர்கள் செய்துவரும் மந்திர தொழிலை இன்னும் செய்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி இன்னும் அவர்கள் அத்தொழிலை செய்து வந்தால் அவர்கள் நேர் வழி பெறவும், மந்திர தந்திரங்களுக்கு அடிமையாகி மூட நம்பிக்கையில் இன்னும் மூழ்கி இருக்கும் நம் மக்களும் நேர் வழி பெற நம்மை எல்லாம் படைத்த அல்லாஹ்விடம் இத்தருணத்தில் நாம் அனைவரும் து ஆ செய்வோமாக.

--- அதிரைநிருபர் குழு

46 comments:

பொதச்சி வச்சிட்டு தோண்டுனா வராமலா இருக்கும்
இன்னும் என்ன என்ன வரப்போகுதோ!.

Shahulhameed சொன்னது…
பொதச்சி வச்சிட்டு தோண்டுனா வராமலா இருக்கும்
இன்னும் என்ன என்ன வரப்போகுதோ!
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.ஹாஹாஹா...சரியா போட்டு உடச்சிட்டியோ போங்க...

அஸ்ஸலாமு அலைக்கும். நிர்வாக குழுவினருக்கு இங்கு சில எழுத்துபிழையுள்ளது குறிப்பாக "தேள்" .இதை முன்பே சுட்டி கடிதம் அனுப்பி இருந்தேன் இனி எழுத்துப்பிழைகள் வராமல் பார்த்து பதியவும்.(ஜமில் காக்கா கனைக்கிற மாதிரி விளங்குது)

மூட நம்பிக்கைக்கு எதிரான தஸ்தகீரின் அருமையான ஆக்கம்.தெளிவாக உள்ளது .

//அங்கு எப்படி அந்த செய்வினை வந்தது யோசிச்சி வைங்க//

இது கூடவா தெரியாது ...கம்ப்யூட்டரில் ரெடியாக இருக்கும் "டெம்ப்லேட்" மாதிரி வஞ்சினை & செய்வினையின் "டெம்ப்லேட்" அது...

பெயர்களை முழுமையாக தவிர்த்துவிடுங்கள். விசயத்தை சொல்ல பெயர் முக்கியம் அல்ல.

crown சொன்னது…
இங்கு சில எழுத்துபிழையுள்ளது குறிப்பாக "தேள்" .இதை முன்பே சுட்டி கடிதம் அனுப்பி இருந்தேன் இனி எழுத்துப்பிழைகள் வராமல் பார்த்து பதியவும்.
Reply Monday, November 01, 2010 1:12:00 AM //

தம்பி கிரவ்ன் : எழுத்துப் பிழைகள் வராமல் பதியவும் என்பதோடும் எழுவோம்னு இருந்திருக்க வேனுமப்பா ! :) என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

அன்பின் ஜாஹிர் காக்கா, தங்களின் கருத்தோடு முழுவதுமாக ஒத்துப் போகிறேன் வலைக்குப் பின்னால் இதுபற்றிய விவாதமிருந்தது அதனால்தான் கட்டுரையின் இறுதியில் அடிக் குறிப்பும் அ.நி.கு. இட்டிருக்கிறது என நம்புகிறேன்.

நல்ல காலம் பொறக்குது.... நல்ல காலம் பொறக்குது......
நல்ல காலம் பொறக்குது.....டப ..டப..டப..டப ..டப டப்
இந்த வீட்டுக்கு நல்ல செய்தி காத்து இருக்கு, பக்கத்து வீட்டுக்கு கெட்ட செய்தி ஒன்னு இருக்கு...........கெட்ட செய்தி ஒன்னு இருக்கு...அந்த வீடு விளங்க கூடாதுன்னு ஒரு கன்னி உச்சந்தலைமுடி எடுத்து மாந்திரிகம் செஞ்ருக்கா அதை எடுக்க அமாவாசை இரவு நடுநிசியில் இடுகாடு போய் கோழி இரத்தம் கொடுத்து பூஜை பன்னா நல்லது நடக்கும் டப..டப...டப

தலையில பெரிய தலைப்பாகை கட்டி
முரட்டு மீசையை இரண்டுப்பக்கமும் சுருட்டிவிட்டுகிட்டு
வலது பக்க மூக்குதண்டுக்கு கீழே ஒரு கருப்பு மச்சம் (மாட்டு உண்னி மாதிரி) வச்சு,வேஸ்ட்டியை ஆந்திரா தேவுடு காரர் போல வேஸ்ட்டியை மடிச்சு கொசுவி இடுப்பில மலேசியா பச்ச பெல்ட் கட்டி, சட்டைக்கு மேல பழையை கோட்டு போட்டு ராத்திரி ஒன்றறை மணிக்கு வரையிலே................
உம்மாடியோ... கண்ண இருக மூடி தலையணையில முகம் பதிச்சு போர்வையை இழுத்து போத்திக்கிட்டு குப்புற படுத்தா ///?
?????????????????????? என்ன சகோ.க்ரவுன் இப்படியா பயம் காட்டுறது










நல்ல காலம் பொறக்குது.... நல்ல காலம் பொறக்குது......
நல்ல காலம் பொறக்குது.....டப ..டப..டப..டப ..டப டப்
இந்த வீட்டுக்கு நல்ல செய்தி காத்து இருக்கு, பக்கத்து வீட்டுக்கு கெட்ட செய்தி ஒன்னு இருக்கு...........கெட்ட செய்தி ஒன்னு இருக்கு...அந்த வீடு விளங்க கூடாதுன்னு ஒரு கன்னி உச்சந்தலைமுடி எடுத்து மாந்திரிகம் செஞ்ருக்கா அதை எடுக்க அமாவாசை இரவு நடுநிசியில் இடுகாடு போய் கோழி இரத்தம் கொடுத்து பூஜை பன்னா நல்லது நடக்கும் டப..டப...டப

தலையில பெரிய தலைப்பாகை கட்டி
முரட்டு மீசையை இரண்டுப்பக்கமும் சுருட்டிவிட்டுகிட்டு
வலது பக்க மூக்குதண்டுக்கு கீழே ஒரு கருப்பு மச்சம் (மாட்டு உண்னி மாதிரி) வச்சு,வேஸ்ட்டியை ஆந்திரா தேவுடு காரர் போல வேஸ்ட்டியை மடிச்சு கொசுவி இடுப்பில மலேசியா பச்ச பெல்ட் கட்டி, சட்டைக்கு மேல பழையை கோட்டு போட்டு ராத்திரி ஒன்றறை மணிக்கு வரையிலே................
உம்மாடியோ... கண்ண இருக மூடி தலையணையில முகம் பதிச்சு போர்வையை இழுத்து போத்திக்கிட்டு குப்புற படுத்தா ///?
?????????????????????? என்ன சகோ.க்ரவுன் இப்படியா பயம் காட்டுறது

கிரவ்னு இங்கே ஜலால் காக்காவுக்கு தூக்கம் வரலை போல இங்கேபேரு திருமப்பத் திரும்ப சொல்லிவச்சிருக்கிறாத இப்படியா(ப்பா) செய்றது ! :)

தம்பி crown, 
தொடர் தூள்கிழப்பத் துவங்கிவிட்டது. ஜமாயுங்கள். நிறைய விஷயங்கள் சொல்ல இருக்கு, சொல்ல நேரமும் இருக்கு, கேட்க நாங்களும் இருக்கோம். நிதானமாகச்
சொல்லுகங்கள். அவசரப் படுவதுபோலத் தெரிகிறது.

அவசரத்தில் எழுதுகையில் punctuation இல்லாததால் வாசிக்கச் சற்று சிரமமாக உள்ளது. உங்கள் எழுத்தை ஒரு எழுத்துகூட மாற்றாமல் திருப்பி கீழே தந்துள்ளேன். வாசிக்க சுலபமாகவும் ரசிக்க ஏதுவாகவும் இருப்பதை கவனிக்கவும். சிறந்த சிந்தனை கொன்ட உங்களின் ஆக்கங்களை இதுபோன்ற சின்ன நெருடல்களால் யாரும் வாசிக்கமல் விட்டுவிடக்கூடாது என்பதே என் இந்த பின்னூட்டத்தின் நோக்கம்.
ஜோசியருக்கு ஒரே பல்!

"என்ன!.... இங்கே எப்படி நீர்?
அக்கம் பக்கதிலேதான் இருக்கிறீர் இங்கே எல்லாம் எட்டி பார்க்க மாட்டீரே என்ன அத்திபூர்தார்போல????"

 (இருவரும் ஒரே வயதுடையவர்கள்) 

"என்னப்பா பன்றது. தேவை இருந்தாதான் வரமுடியும். நீயும் சும்மா வந்தா இப்படி வரவேற்பியா?"

"என்ன இப்படி சொல்லிட்டீர்?"

"அது இல்லப்பா, நீயும் எப்பவும் பிஸியா ஆட்களுடன் இருப்பே அதான், ஆனா இப்ப எனக்கு ஒரு காரியம் ஆகனும்!"

"சொல்லும் பேஸா செஞ்சிடலாம். யாருக்காவது முகமாத்து(????)பன்னனுமா? செய்வினை செய்யனுமா?"

"அப்படியெல்லாம் இல்லப்பா எங்கவீட்டு மாடு காணாப்போச்சு யாரவது திருடிக்கிட்டு போய்டாங்களா? இல்ல எந்த திசையிலாவது மேஞ்சுக்கிட்டு இருக்கான்னு பாத்து சொல்லனும்."

"சரி கொஞ்சம் பொறு வோய்..."

சொல்லிட்டு தன் மனைவியை கூப்பிட்டு குரல் கொடுத்தார். 

"போய் சாமிபடதுக்கு பக்கத்துல வெத்தல பாக்கு இருக்கு, அதோட மையும் இருக்கு எடுத்துகிட்டு வா !!"

மனைவி இரண்டையும் எடுத்துகிட்டு வந்ததும். வந்திருந்த வெளியூர்காரங்க கிட்ட கொஞ்சம் காத்திருக்கும் படி சொல்ல அவர்களும் தலையாட்டி விட்டு இவர் மை போடுரத வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சாங்க.
_______________________\_______
மச்சான் ஜலாலின் பின்னூட்டம் இந்த ஏற்ற ஒன்று...கலக்கு மசான்ஸ்

-crownன் அதே வாசக வட்டம்
_____________________

மூ(ம)ட நம்பிக்கைகளை தகர்த்தெறியும் ஆக்கங்கள் எப்போதுவும் தேவை...அந்த பணியை செவ்வனே செய்து வரும் சகோ.கிரவுனுக்கு வாழ்த்துக்கள்.....ராசிக்கல் / வாஸ்த்து / பெயர் கணிதம் போன்ற புதுபுது மூட நம்பிக்கைகளும் நமது சமுதாயத்தில் வளர்ந்து வருவது வருந்ததக்கது அதைப்பற்றியும் கொஞ்சம் உங்கள் அடுத்த பதிவில் சொல்லுங்கள்

ஆசானே (கவிக் காக்க்கா) ஜாமாய்ங்க ! நாங்க கொடுத்து வச்சவங்க மெய்யாலுமே ! CLASSIC Guidance !

அஸ்ஸலாமு அலைக்கும்.மிகச்சரியா க(வ)னிச்சிருக்கீங்க அவசரம்தான் மேலும் இது விசயமாக இனி அமைதியாக எழுத எத்தனிக்கிறேன்.அதனால் தான் நிர்வாகத்தில் உள்ள சகோதரரிடம் நான் எப்படி அனுப்பினாலும் கொஞ்சம் சரிபார்த்து வெளியிடும் படி வேண்டுகோள் வைத்தேன். அவர்கள் இனி கவணம் கொள்வார்கள். இன்ஷா அல்லாஹ் நானும் கவணமுடன் இருப்பேன்.
நீங்க விசிறிவிட்டும் எனக்கு வேர்கிறது.

crown சொன்னது…
அதனால் தான் நிர்வாகத்தில் உள்ள சகோதரரிடம் நான் எப்படி அனுப்பினாலும் கொஞ்சம் சரிபார்த்து வெளியிடும் படி வேண்டுகோள் வைத்தேன். அவர்கள் இனி கவணம் கொள்வார்கள். இன்ஷா அல்லாஹ் //

தம்பி கிரவ்ன்(னு): சரி(டா)ப்பா (noted with smile :)), அதான் ஆசானின் "Guidance notes" கைக்கு வந்திடுச்சுல ஜமாய்(த்திடு) !!

உனக்குமா வேர்க்கிறது ? சரி கவிக் காக்கவுக்கு சொன்ன வைத்தியம்தான் "செவத்துல தலைய சாய்ச்சுக்க(டாப்பா).. :)

அபுஇபுறாஹிம் சொன்னது…

crown சொன்னது…
அதனால் தான் நிர்வாகத்தில் உள்ள சகோதரரிடம் நான் எப்படி அனுப்பினாலும் கொஞ்சம் சரிபார்த்து வெளியிடும் படி வேண்டுகோள் வைத்தேன். அவர்கள் இனி கவணம் கொள்வார்கள். இன்ஷா அல்லாஹ் //

தம்பி கிரவ்ன்(னு): சரி(டா)ப்பா (noted with smile :)), அதான் ஆசானின் "Guidance notes" கைக்கு வந்திடுச்சுல ஜமாய்(த்திடு) !!

உனக்குமா வேர்க்கிறது ? சரி கவிக் காக்கவுக்கு சொன்ன வைத்தியம்தான் "செவத்துல தலைய சாய்ச்சுக்க(டாப்பா).. :)
------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் இப்பத்தான் செவத்துல பந்தை விட்டேறிந்தேன் அதுக்குள்ள எப்படி வேகமா திரு(ப்)ம்பி வந்துள்ளது.!!!! இவ்வளவு வேகத்துல வந்தா என்னால(தாக்கு)பிடிக்கமுடியாது.அம்மாடி!!!

//இப்பத்தான் செவத்துல பந்தை விட்டேறிந்தேன் அதுக்குள்ள எப்படி வேகமா திரு(ப்)ம்பி வந்துள்ளது.// பந்து சிற்பியின் ( சபீர் காக்கா ) கையில் பட்டு செதுக்கபட்டு பண்படுத்தபட்டு வந்துள்ளது....தவற விடாமல் பிடித்து கொள்ளுங்கள் சகோதரரே

Yasir சொன்னது…

//இப்பத்தான் செவத்துல பந்தை விட்டேறிந்தேன் அதுக்குள்ள எப்படி வேகமா திரு(ப்)ம்பி வந்துள்ளது.// பந்து சிற்பியின் ( சபீர் காக்கா ) கையில் பட்டு செதுக்கபட்டு பண்படுத்தபட்டு வந்துள்ளது....தவற விடாமல் பிடித்து கொள்ளுங்கள் சகோதரரே
---------------------------------------------------------
I caught the point

(கவிக்)காக்கா கீழேயுள்ள வீட்டுக்கு பக்கத்துல இருந்து தோண்டி எடுத்து உங்களுக்கு யாரோ ரகசியமா அனுப்பியதாக "மந்திர அம்மா"வோட கரும வீர்ர் வந்து வாசல்ல வந்து சொல்லிட்டு போயிட்டாரே !!!! :) :) :)

----------------------------

வாய்க்கா கொளத்து பள்ளிகூட அந்தக் கால மாணவனின் விண்ணப்பம் இங்கே :-
To
Head (கவிக்)காக்கா

Subjet : konaar urai request

Sir:

I am supering from reeding skaring this krown katturai, this man too much skare me therefore do needful please help me sir today i want please sir.

thanking you sir,

yours obediently,

vaikkaal kolaththu pallikooda maanavan.

வாய்க்கா கொளத்து பள்ளிகூட அந்தக் கால மாணவனின் விண்ணப்பம் இங்கே :-
To
Head (கவிக்)காக்கா

Subjet : konaar urai request

Sir:

I am supering from reeding skaring this krown katturai, this man too much skare me therefore do needful please help me sir today i want please sir.

thanking you sir,

yours obediently,

vaikkaal kolaththu pallikooda maanavan
-----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.ஹாஆஅ,ஹாஆஆஆஆஆஆ,ஹாஆஆஆஆஆஆஆ
master also made leave letter like this to head master:
sir,
I was reading crown article, from that i am so scary to take classes to day. so, please give me only one day off for me. I want to check lovuttuthaambi before to consult lovuttuthambi I should need purchase some lime ,red chili with salt.so I need to go out form school immediately .Thanking you sir.
yours Truly.
.......

அஸ்ஸலாமு அலைக்கும்.முதலில் அதிரை நிருபர் குழுவிற்கு என் ஆதங்கத்தை பதிவு செய்துவிடுகிறேன்.சமாளிக்ககூடாது. நான் எழுதுதியது இதுவரை அதிக நாள் முதன்மையாக இருந்ததில்லை. உடனே, மற்ற ஆக்கங்கள் வந்து விடுகிறது. எழுவது பெயர் சம்பாதிக்கவல்ல. அதே நேரம் நானும் மற்றவர்கள் போல் நேரம் ஒதுக்கித்தானே எழுதுகிறேன்?. நாம் எழுதுவது பிறருக்கு போய்ச்சேரத்தானே எழுதுகிறோம்?. என் மனதில் எழுந்த கேள்விகள் ஒருக்ச்சள் நான் எழுதும் படைப்பு உங்களுக்கு திருப்தியில்லை யென்றால், அதை முழுமனதுடன் ஏற்கும் பக்குவம் உள்ளவன் என்பதை அறிந்தவர்கள் தாம் இந்த குழுவில் உள்ளீர்கள்.அடுத்து எழுதுவதில் நான் சிறியவன் என்பதால் இந்த பாகுபாடா?. இவையாவும் தனி மடலில் உஙளுக்குச்சொல்லாமல் இங்கே குறிப்பிட காரணம் இது போல் இனி வரும் படைபாளிகளுக்கு ஏற்படாமல் முன் எச்சரிக்கையாக. அவர்கள் ஒருக்காள் சுட்டிக்காட்ட தயங்கலாம்.மூத்த சகோதரர்களும்,மற்றசகோதரர்களும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். தவறு இருப்பின் மன்னிக்கவும்.மொத்தத்தில் என் படைப்பு அதிக நாள் நீடிக்கவிலை இது ஏதேச்சையாக நடந்திருக்களாம் அதே நேரம் அதிக உரிமை கொண்டு நம்ம கிரவுன் தானேன்னு இருந்திருக்கலாம்.ஆனால், என்னைப்பொருத்தவரை யார் எழுதியது என்பதை விட அந்த செய்தியின் அவசியம் தான் முக்கியம்.
சிறுகுறிப்பு: இங்கே! புதிதாகப்பதிந்துள்ள என் உயிரின்,உயிருக்கு நிகரான அவர்களை வரவேற்கிறேன்.இவர்களைப்பற்றித்தெரியாதவர்களு சிறு அறிமுகம்.உலகில் ஒரே சாயலில் ஏழுபேர் இருப்பதாக படித்து,பலர் சொல்ல கேட்டு இருக்கிறேன். அதே நேரம் செயலில் ஒத்த இருவரை (வேறு,வேறு நபர்கள்) கான வேண்டுமா?சகோ.சபிர் அவர்களின் செயல்களைப் பார்த்தவர்கள்,இவர் செயல்களைப்பார்க்க வேண்டியதில்லை, என்பதை திடமாக இங்கு பதிகிறேன், மேலும், இவர்கள் சகோ,சபீரைவிட சிறிது மூத்தவர்கள் என்று நம்புகிறேன்.இவர்கள் நியு காலேஜில் நடிகர்களான ராதரவி,கார்த்திக் செட். வீனாப்போன நடிகர்களை சுட்டிக்காட்ட காரணம் நியு காலேஜில் படித்த நம் சீனியர்களுக்கு இவர்கள் எந்த செட்டில் படித்தார்கள் என்கிற குறிப்பிற்காகவே.இலக்கியம்,தமிழ்,ஆங்கில மற்றைய மொழி அறிவு, பொதுநல செய்கை, இன்னும்... இன்னும்... இவர் சகோ.சபீரை ஒத்தவரே இதை கூட ஆக்கமா எழுத இருந்தேன் ஆனால் அதற்கு முன்பே சொல்ல வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.

அன்பின் கிரவ்ன்: ஏனப்ப சமாளிக்க வேண்டும் ? நீயா இப்படி ? அல்லாஹ் நன்கறிவான்.

அன்பின் கிரவ்ன்: ஏனப்ப சமாளிக்க வேண்டும் ?
நீயா இப்படி ? அல்லாஹ் நன்கறிவான்.அன்பின் கிரவ்ன்: ஏனப்ப சமாளிக்க வேண்டும் ? நீயா இப்படி ? அல்லாஹ் நன்கறிவான்.
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.காக்கா தப்ப புரிஞ்சிக்கிட்டியோ பாத்தியலா?

அபுஇபுறாகிம் காக்கா.உங்களிடமும் சேர்த்து தான் எனக்கு எனக்கு வக்காலத்து வாங்கச்சொன்னேன்.கோவிச்சுகிட்டதால நிசமா ,ரொம்ப கவலையாவும்,வருத்தமாவும் இருக்கு.என் வீட்டின் உரிமையை நான் கேட்காமல் எப்படி காக்கா . நிர்வாக குழுவிடம் நீங்கள் அல்லவா என் சார்பக வாதாடி இருக்க வேண்டும்?

வ அலைக்குமுஸ்ஸலாம்,

அன்பு சகோதரர் தஸ்தகிர், தங்களின் ஆதங்கத்தை தெரிவித்ததுக்கு மிக்க நன்றி.

எங்கள் அன்பு சகோதரரே இங்கு யாருக்கும் எந்த பாகுபாடும் காட்டவில்லை. கருத்துச் சொல்வதற்கு உங்களுக்கு முழு உரிமை உள்ளது.

அது போல் இங்கு எந்த ஆக்கங்கள் எப்போது பதிவு செய்வது என்பதை ஆட்களை வைத்து தீர்மானிப்பது இல்லை. அதிரைநிருபர் குழுவில் இருப்பவர்கள் முழு நேரம் அதிரைநிருபரில் கவணம் செலுத்துவது என்பது மிக கடினம், இருந்தாலும் கிடைக்கும் நேரத்தை கருத்தில் கொண்டும் வரும் பதிவுகள் பதியப்படுகிறது. மற்றபடி வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அல்லாஹ் அறிவான்.

இப்படி இருக்கலாமோ? அப்படி இருக்கலாமோ? என்று எங்களைப் பற்றி யாரும் தவறாக எண்ண வேண்டும். அதிரைநிருபர் தன் பாதையில் சரியாக செல்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. உள்ளத்தில் உள்ளவைகளை படைத்தவனைத் தவிர வேறு யாராலும் அறியமுடியாது.

பாகுபாடு காட்டும் நிர்வாகிகள் அதிரைநிருபரில் இருந்தால் உங்கள் ஆக்கம் வெளியிடப்படாமல் அல்லவா போயிருக்கும்.உங்களை நன்கு அறிந்தவர்(கள்) அல்லவா அதிரைநிருபரில் இருக்கிறார்(கள்).

அதிரைநிருபரில் உங்கள் கட்டுரைக்கு முன்பே பல கட்டுரைகள் waiting listல் உள்ளது. அனைவருக்கும் பகிர்ந்து தான் பதிவுகளை வெளியிடுகிறோமே தவிர வேறு ஒன்றுமில்லை என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துகிறோம்.

அதிரைநிருபர் ஒற்றுமையை ஏற்படுத்தும் ஒரு வலைப்பூ என்பதை இங்கு அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தெரியப்படுத்துகிறோம்.

எமக்கு கிடைக்கும் ஒய்வு நேரத்திலும், வேலையால்லாத மற்ற நேரங்களிலும் தான் நாம் அதிரைநிருபரில் கவணம் செலுத்தமுடிகிறது. எங்களின் நிலைகளை சகோதரர் தஸ்தகிர் மட்டுமல்ல மற்ற சகோதரர்கள் அனைவரும் புரிந்துக்கொள்வார்கள் என்று நம்புகிறோம். வேறு நல்ல விடையங்களில் வழக்கம் போல் கவணம் செலுத்தலாம். இன்ஷா அல்லாஹ்...

அனைவரும் தொடர்ந்து இணைந்திருங்கள்...

அல்லாஹ் போதுமானவன்...

எமக்கு கிடைக்கும் ஒய்வு நேரத்திலும், வேலையால்லாத மற்ற நேரங்களிலும் தான் நாம் அதிரைநிருபரில் கவணம் செலுத்தமுடிகிறது. எங்களின் நிலைகளை சகோதரர் தஸ்தகிர் மட்டுமல்ல மற்ற சகோதரர்கள் அனைவரும் புரிந்துக்கொள்வார்கள் என்று நம்புகிறோம். வேறு நல்ல விடையங்களில் வழக்கம் போல் கவணம் செலுத்தலாம். இன்ஷா அல்லாஹ்...

அனைவரும் தொடர்ந்து இணைந்திருங்கள்...

அல்லாஹ் போதுமானவன்...
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு இதைத்தான் நான் பின் ஏதும் மற்றவர்களிடமிருந்து வாராமல் கேட்டேன்.இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.என் பங்கை என் சகோதரர்களிடம் (குறிப்பாஅபுஇபுறாகிம்)கேட்காமல் யாரிடம் கேட்பேன்.இது சமாளிப்பு அல்ல உள்ளத்தில் உள்ள வெளிப்பாடு.ஒரு விசயம் தெளிவுப்படுத்துகிறேன் எந்த ஒரு காலத்திலும் இன்ஷாஅல்லாஹ் நம்மிடேயே எந்த ஒரு பிரிவினையும் வராது.என்னை நன்கு தெரிந்த குழுவே என்னை மறுபடியும் புரிந்து கொள்ளவும்.தவறு இருப்பின் மன்னிக்கவும்.

சரிடாப்பா கண்திருஷ்டி சுத்திப் போட எதாவது ஆசாமி / அம்மனி கிட்டே கேட்டுப்பாருடா(ப்பா)... இப்புடியான்னு யாரோடாப்பா கண்ணுபோட்டது ?? இதப் பத்தி ஒண்ணு எழுது சிறப்பு மலர் போட்டுடலாம்.... COOL CROWNன்னு காக்காகிட்டேவா :) எங்கே எப்படி உன்னிடமென்று நல்லா தெரியும்... எங்கே காக்காவோட சேர்ந்து smile பன்னு பார்ப்போம் :)...

ஆஹா சாஹுல் காக்கா அதுக்குள்ள மொளவாக்கவ சுத்தி போட்டு அடுப்புல போட்டியலா... ஒரே நொடியா இருக்கு.. ஹச் ஹச் :))

M.S.M நைனாவின் பெரியப்பாவீட்டு மூத்த சகோதரர்தாம் இவர்கள்.

யார் இவர் எப்படி கேட்பது என்று யோசனை செய்து கொண்டிருந்த போது CROWN பிண்ணுட்டம் பார்த்து விபரம் அறிந்தேன்.

CROWN எந்த நேரமும் வெத்திலையும் கை(மை)யுமா தான் இருபியலோ

ஆஹா சாஹுல் காக்கா அதுக்குள்ள மொளவாக்கவ சுத்தி போட்டு அடுப்புல போட்டியலா... ஒரே நொடியா இருக்கு.. ஹச் ஹச் :))

நம்ம CROWN செவத்த உடம்பு மொளவாக்கவ சுத்தி போடுறப்ப ஒடம்புல பட்டுராம சுத்தி போட்டாச்சி !

சாஹுல் காக்கா கிரவ்ன்(னு) சிறப்பு மலருக்கு ரெடியாயிட்டு இருக்கார் rest behind the screen :)

தம்பி crown, தம்பி நெய்னா தம்பி (எத்தனை தம்பி?! இப்பவே கண்ண கட்டுதே). சரியோ தவறோ... crown மனம் திறந்து கேட்டது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதுக்கு அவரோட மனச ஏற்கனவே படிச்சிருந்த அபு இபுறாகீமின் பதில் ரொம்ப பிடிச்சிருந்தது. அதற்கு க்ரவுனின் "தப்பா எடுத்துக்கிட்டியலே" என்ற உரிமைக் குரல் ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது. அதற்கு அபு இபுறாகீமின் "ட" போட்டு குழைந்த பதில் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது. அதற்கு க்ரவுனின் ஸாரிப்பா பதில் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது.

எல்லாத்தையும் விட சாகுலின் ஒட்டு வேலை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது. அதையெல்லாம் விட இப்படிப்பட்ட பாசப்பிணைப்புள்ள குழுமத்தில் நாமும் கைகோர்த்திருக்கிறோம் என்பது ரொம்ப ரொம்பர் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

And of course, Adirai Nirubar stands justified.

"நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது" (அப்பாடா ஆக்கத்திற்கு தொடர்பில்லாத பின்னூட்டம் என்ற அவச்சொல்லிலிருந்து தப்பிச்சாச்சு)

பி.கு.: தம்பி க்ரவுன், சகோ. ராஃபியா தொடர்பாக அவரின் ஆக்கத்தில் பேசுவோம். சரியா? Cheer up now please.

sabeer சொன்னது… எல்லாத்தையும் விட சாகுலின் ஒட்டு வேலை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது.


ஒட்டுன்னு சொன்னியளா
எனக்கு "அட்டு" ன்னு சொன்னமாதிரி இருந்தது திரும்ப படித்ததும் தான் புரிந்தது

Shahulhameed சொன்னது…

sabeer சொன்னது… எல்லாத்தையும் விட சாகுலின் ஒட்டு வேலை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது.


ஒட்டுன்னு சொன்னியளா
எனக்கு "அட்டு" ன்னு சொன்னமாதிரி இருந்தது திரும்ப படித்ததும் தான் புரிந்தது .
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நானும் அபுஇபுறாகிம், காக்காவும் கருத்து பறிமாறிக்கொண்டிருக்கையிலே. ஊடால வந்து ஊடல் தனித்து அன்புடன் கூடல் வர, ஒட்டி விட்டதை என்படி வெட்டி விட்டதாய் சொல்லமுடியும்?. நீங்கள் என்றுமே அசல்தான்.அட்டுஅல்ல.அட்டுஅல்ல.....

சாகுல்,
படிச்சவுடன் சிரித்தேன்.
கிச்சு கிச்சு மூட்டும் உங்கள் ஹாஸ்யம் இல்லாமல் ஏன்டா துபை வந்தோம்னு இருக்கு. அங்கேயே இருந்திருக்கலாமோ?

Same old Shahul with the amazing sense of humour.

sabeer சொன்னது…

சாகுல்,
படிச்சவுடன் சிரித்தேன்.
கிச்சு கிச்சு மூட்டும் உங்கள் ஹாஸ்யம் இல்லாமல் ஏன்டா துபை வந்தோம்னு இருக்கு. அங்கேயே இருந்திருக்கலாமோ?

Same old Shahul with the amazing sense of humour

----------------
அஸ்ஸலாமு அலைக்கும்.சந்தடி சாக்கில் சபீர்காக்கா உங்களை ஓல்ட்ன்னு சுட்டி காட்டுறாக.(சின்டு முடிஞ்சி விட்டுட்டேன்)

கவிக் காக்கா தம்பி(கள்) இருந்தா கண்ணைக் கட்டிகிட்டுகிட்டு இருக்கலாம் அவ்வ்வ்வ்ளோ படை(க்கு அஞ்சாமல்) உங்களைச் சுற்றி(யே) !

கிரவுன்(னு) இப்போ எதுக்கு பிட்டு போடுறே ? சிறப்பு மலருக்கு ரெடியாவு(TOPPA) !

மொளவாக்க சுத்திப் போடச் சொன்னேன் இப்புடி சுத்தி அடிச்சா எப்புடி ! சரி சரி எல்லாமே கண்ணுக்கு அழகுதான் !

அபுஇபுறாஹிம் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.சந்தடி சாக்கில் சபீர்காக்கா உங்களை ஓல்ட்ன்னு சுட்டி காட்டுறாக.(சின்டு முடிஞ்சி விட்டுட்டேன்)

அவங்க சொன்னது கோல்ட்ன்னு ஓல்ட் ன்னு சொல்லலே எழுத்து பிழையல ஓல்ட் ன்னு வந்துருச்சி

சமாளிப்பு எப்புடி

//அவங்க சொன்னது கோல்ட்ன்னு ஓல்ட் ன்னு சொல்லலே எழுத்து பிழையல ஓல்ட் ன்னு வந்துருச்சி ///

ஒஹோ அதான் "OLD IS GOLD" என்று சொல்றாங்கலா.. :)

சகோதரர் CROWN சொன்னதை கொஞ்சம் ஈசியாக்க ஒரு வழி....கட்டுரையை சிறிய அளவில் வெளியிட்டு போட்டால் மற்ற கட்டுரைகளும் தெரியும்,கொஞ்சம் நாள் நம் கண்ணில் படும். ஒரத்தில் மொத்தம் எத்தனை கமென்ட்ஸ் என்பதையும் தெரிந்தால் நலம்.

சகோதரர் CROWN சொன்னதை கொஞ்சம் ஈசியாக்க ஒரு வழி....கட்டுரையை சிறிய அளவில் வெளியிட்டு "READ MORE......"போட்டால் மற்ற கட்டுரைகளும் தெரியும்,கொஞ்சம் நாள் நம் கண்ணில் படும். ஒரத்தில் மொத்தம் எத்தனை கமென்ட்ஸ் என்பதையும் தெரிந்தால் நலம்.

ஜாஹிர் காக்காவின் யோசனை ஏற்றுக் கொள்ளக் கூடியதே, தற்ப்போது இருக்கும் முக்கபின் கட்டுரை சுருக்கப் பத்திகளின் (short paragraph) வரிகளை குறைத்துக் கொண்டு "மேலும் வாசிக்க - read more" என்று இடலாம்தான் அல்லது எழுத்துருவின் அளவை இன்னும் சிறியதாக்கலாம் (இங்கே எழுத்துருவை சிறியதாக்குவதால் சில சிக்கல்களும் உண்டு நம்மில் சிலர் (முன்பு) முகப்பின் எழுத்துக்கள் சிறியதாக இருப்பதாக கருத்தும் சொல்லியிருந்தார்கள் தனிப்பட்ட முறையில்). நிற்க ! தற்போதுள்ள முகப்பின் வடிவமும் அப்படித்தான் இருக்கிறது இருப்பினும் அதிரைநிருபர் குழு பரிசீலிக்கலாம் இன்ஷா அல்லாஹ்...

தற்ப்போதிருக்கும் முகப்பு வடிவும் ஜாஹிர் காக்காவின் ஆலோசனையை ஒத்துதான் இருக்கிறது என்பது என் தனிப்பட்ட கருத்து, அதுமட்டுல்ல scroll down செய்துபார்ப்பதில் சிரமம் இருக்காது ஏனென்றால் கடைசி ஐந்து அல்லது ஆறு ஆக்கங்களின் பத்திச் சுருக்கம் (short paragraph) முகப்பிலேயே பளிச்சிடுவதால். கருத்துக்களின் எண்ணிக்கை குவியலும் (no of comments) முகப்பிலே இருக்கிறது.

என் கருத்தின் நிறைவாக : அகத்தின் அழகு முகத்தில் தெரியனும் - தெரிகிறதா சொல்லுங்களேன் அதிரைநிருபரின் உறவுகளே ! :)

எல்லாம் நல்லபடியாகவே நடந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

இதேபோல் எங்கள் தெரு தர்ஹாவில் நான் முகமூடி கிழித்த ஒரு நிகழ்வும் எனது வீட்டு வாசலில் நிகழ்ந்த சில சச்சரவுகளும் சுவையானவைதாம்.

அவை பற்றி எழுத இடையூறாக இருப்பது நேரம்தான். பணிப்பளுவின் காரணத்தால் அதிகமாக இங்கு வந்து சுவையானவற்றைப் படிக்கக்கூட நேரம் கிடைப்பதில்லை.

தம்பி தஸ்த்தக்ரவுன் இன்னும் கொஞ்சநாள்ல ப்பாஸாகிவிடுவார்.

ஆளாளுக்கு மாறி-மாறிக் கும்மி அடிப்பது ஒரு மாதிரியாக இருக்கிறது.

கவுஞ்சரு எழுதுன "தொடர் தூள்கிழப்பத் துவங்கிவிட்டது" இல் உள்ள "கிழப்ப" நெருடலாக இருந்தது.

திருத்த நிறைய இருந்தும் நேரம்தானில்லை.

அப்புறம் ... படிக்கிற வேகத்துல "அவர்கள் இனி கவணம் கொள்வார்கள்" என்பதில் உள்ள 'ண'வின் காரணத்தால் அத வேற மாதிரிப் படிச்சுத் தொலச்சிட்டேன்.

வாழ்த்துகள்!

ஜமீல் காககா,

இப்படி அப்பப்ப வந்து லகர, ளகர, ழகர, ரகற, றகர, நகர, ணகர தகறாற்றை மட்டுமாவது தீர்த்து, திருத்தித் தரக் கூடாதா?

நான் வேண்டுமானால் தலைவரிடம் (உங்கள் பேரனிடம்) பேசிப்பார்க்கவா எங்களுக்கும் சற்று நேரம் ஒதுக்கச் சொல்லி?

நன்றி காக்கா.

அன்பின் (ஜமீல்)காக்கா மெத்தப்படியில வேக ஏறினதும் கிர்ர்ருனு (எனக்குத்தான்)வருமே அதுமாதியிருக்கு வழக்கமான உங்களின் வரவும் வாழ்த்தும் :)

/// நான் வேண்டுமானால் தலைவரிடம் (உங்கள் பேரனிடம்) பேசிப்பார்க்கவா எங்களுக்கும் சற்று நேரம் ஒதுக்கச் சொல்லி? ///

கவிக் காகாவோடு நானும் சேர்ந்துக்கிறேனே ! அங்கே பேசுறதுதான் நல்லது !

அஸ்ஸலாமு அலைக்கும்.கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.அல்லாஹ் அனைவரின் தேவைகளைப்பூர்த்தி செய்வானாக ஆமீன்.எல்லாப்புகழும் அல்லாஹுக்கே.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More