Sep 13, 2010

Adirai - ஷம்சுல் இஸ்லாம் சங்கம்‏

நமதூர் 'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்' சென்ற 1920 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, அரசுப் பதிவேட்டில் பதிவு (ரிஜிஸ்ட்டர்) செய்யப்பட்ட பாரம்பரியமான பொதுநலச் சமுதாய அமைப்பாகும்.                      அண்மைவரை இதனை நிர்வகித்து வந்த உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டதால், இதற்கான புதிய நிர்வாக உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் கடந்த ஒரு மாத காலமாக நமதூர் ஆலிம்கள் எடுத்த ஒருங்கிணைப்பு முயற்சியின் பயனாய், இன்று காலை பத்து மணியளவில் கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் மரைக்கா பள்ளியில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:

தலைவர்: ஹாஜி எம்.எஸ். முஹம்மது உமர்

துணைத் தலைவர்: ஹாஜி எம்.எஸ். ஷிஹாபுத்தீன்

செயலாளர்: ஹாஜி எம்.எஸ்.எம். அபுல்ஹசன்

துணைச் செயலாளர்: ஹாஜி எம்.ஐ. முஹம்மது பாக்கர்

பொருளாளர்: ஹாஜி எஸ்.ஏ.எம். ஜமாலுத்தீன்

இவர்களன்றி, 40 பேருக்கு மேல் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய உறுப்பினர்களின் செயற்குழுக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு மரைக்கா பள்ளியில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

-- அதிரை அஹ்மது

9 comments:

இவர்கள் புதியவர்களல்ல நம்மூர் பிரச்சினைனகளுக்கு, ஊர் நலனை மட்டுமே முன்னிருத்தி எங்கேயும் இடாறாமல் நம் சமுதாய மக்களின் மேன்மைக்கும் உள்ளதை உள்ளபடி எடுத்துரைத்து நிலை நாட்டுவார்கள் என்று நம்புவோமாக !

வாழ்த்துக்கள் (சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அங்கத்தினர்களுக்கும் நிர்வாகிகளுக்கும்) !

அதிரை அஹ்மது said...
புதிய நிர்வாகிகள் பற்றிய அறிமுகம்: தலைவர்: ஹாஜி எம்.எஸ். முஹம்மது உமர் - புதுமனைத் தெரு (சேகனா வீடு) துணைத் தலைவர்: ஹாஜி. எம்.எஸ். ஷிஹாபுத்தீன் - ஆலடித் தெரு (தீன் எஸ்ட்டேட்). செயலாளர்: ஹாஜி எம்.எஸ்.எம். அபுல்ஹசன் - கீழக் கடைத்தெரு (Saudi return, Well experienced & qualified accountant) துணைச் செயலாளர்: ஹாஜி எம்.ஐ. முஹம்மது பாக்கர் - வாய்க்கால் தெரு (son of Ibrahim hajiar) பொருளாளர்: ஹாஜி எஸ்.ஏ.எம். ஜமாலுத்தீன் (Winsome Commercials) போதுமா? பொதுவாக நமதூர்க்காரர்களுக்குப் பட்டப் பெயர் சொன்னால்தான் புரியும். ஆனால், நான் அதைத் தவிர்த்துள்ளேன். முடிந்தவரை, அவர்களைப்பற்றி அறியச் சில குறிப்புகளைத் தந்துள்ளேன். விளங்கிக் கொள்ளவும்.

September 13, 2010 10:54 PM

புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.

சங்க தேர்தல்,ஆள் சேர்ப்பு, விடியோ பிரச்சாரம், சவால்கள் அவதூறுகள், பரப்பரப்பு இவைகளின் குழப்பங்களால் கவலையில் இருந்த உள்ளுர் வெளியூர்வாசிகளுக்கு ஒரு ஆறுதல் பிரச்சினைகள் இல்லாமல் சுமுகமாக நிர்வாகிகள் தேர்ந்தேடுக்கப்பட்டது, இதில் முக்கிய ஆலிம்களில் பங்கு இருந்துள்ளது பாராட்டக்கூடியது.

பணக்காரர்களுக்கு ஒரு தீர்ப்பு, ஏழைக்கு ஒரு தீர்ப்பு என்று இல்லாமல். இனி மார்க்க அடிப்படையில் தீர்ப்புகள் இருக்கும் என்று எதிர்ப்பார்கலாம். இன்ஷா அல்லாஹ்.

முதலில் வரதட்சனை வாங்கும் திருமணத்தில் கலந்துக் கொள்வதில்லை என்ற முதல் தீர்மானத்தை நிறைவேற்றி புதிய நிர்வாகிகள் தங்கள் பணிகளை ஆரம்பிப்பார்கள் என்று நம்புவோமாக.

வழக்கமான கோரிக்கை தான் இது, சங்கத்தில் நீண்ட நாட்கள் நிலுவயில் உள்ள தலாக் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனே சுமூக தீர்வு காணவேண்டும்.

நீண்ட நாட்களாக அரசியல் காரணங்களால் இழுத்தடிப்படும் காலனி கலவர வழக்குகளை வாபஸ் வாங்குவதற்கான முழுமையான பேச்சுவார்த்தைகள் நடத்தி அதற்கு உடனடி தீர்வு காணவேண்டும்.

இப்புதிய நிர்வாகம் பதவி ஏற்றவுடன் இருக்கும் வேகம் சுறுசுறுப்பு தங்களின் பதவிகாலம் நிறைவு பெரும்வரை இருக்க வேண்டும் என்பது தான் ஒவ்வோரு சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகளின் ஆவல்.

வாழ்த்துக்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்.அஹமது சாச்சாவின் பார்வைக்கு எனக்குத்தோன்றிய சிறு யோசனை.சங்கதின் வாசலில் ஒரு பெட்டி(புகார் பெட்டியல்ல)மஹல்லாவாசிகள் சிலர் சில விசயம் சொல்ல தயங்குவார்கள் அவ்வாறு சொல்ல வேண்டிய விசயத்தை அந்த பெட்டியில் போட்டுவிட்டால் உறுப்பினர்கள் முன்னிலையில் வார வாரமோ,மாததுக்கு இரு முறையோ அந்த பெட்டியில் வந்திருக்க கூடிய தகவலுக்குற்ய நடவடிகை எடுக்கும் படி ஒரு முறையை கடைப்பிடித்தால் என்ன? என்ன அவ்வாறு கடிதம் போடுபவர் அல்லாஹுக்கு அஞ்சியவர்களாக அவதூறூ சொல்லாமலும்,வீன் வதந்தி பரப்பாமலும் இருக்க வேண்டியது அவசியம்.

'பரிந்துரைப் பெட்டி' ஒன்றுக்காகப் பரிந்துரைப்பேன், இன்ஷா அல்லாஹ்!

'பரிந்துரைப் பெட்டி' ஒன்றுக்காகப் பரிந்துரைப்பேன், இன்ஷா அல்லாஹ்!

அஸ்ஸலாமு அலைக்கும்.பரிந்துரை பெட்டிக்கான என் அவாவளுக்கு உடன் பதில் விரைந்துரைத்ததற்கு சாச்சாவுக்கு நன்றி.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More